வணிகம் தொடர்பான அடிப்படைக் கோட்பாடுகளைக்
கட்டியெழுப்புதல்
வணிகம்
மனிதர்களுக்குத்
தேவையான பொருட்கள் அல்லது சேவைகளை உற்பத்தி செய்தல் அல்லது அவற்றை விநியோகித்தல் தொடர்பிலான கருமங்களில் ஈடுபடுபவை வணிகங்கள் எனப்படும்.
வணிக
நோக்கங்களும் குறிக்கோள்களும்
இலாப
நோக்குடைய வணிகங்களின் உரிமையாளர்கள் தேவையான அளவு இலாபத்தை உழைத்துக்
கொள்ளல்.
நுகர்வோரின்
மாற்றமடையும் விருப்பங்களை நிறைவு செய்தல்.தொழில் உருவாக்கம் போன்றவை.
வாழ்வதற்குக்
கட்டாயமாக நிறைவேற்ற வேண்டியவைகள் மனித தேவைகள் எனப்படும்
- உதாரணமாக
- உணவு : சோறு, கடலை, பாண், பணிஸ், பயறு, இடியப்பம்
- உடை : சேலை, காற்சட்டை, சட்டை
- கல்வி : ஆசிரியர; சேவை, அரச பாடசாலை, பரீட்சை,
நூலகம்
தேவைக்கேற்ப
உருவாகின்ற விருப்பங்களை நிறைவு செய்வதற்குத் தேவையான பொருட்கள் சேவைகளை உற்பத்தி செய்தல் வேண்டும். உற்பத்திக் கருமமானது வணிகத்தினால் மேற்கொள்ளப்படும்.
இவ்வணிகங்களை
பொருள் உற்பத்தி வணிகம், சேவை உற்பத்திவணிகம் என
வகைப்படுத்த முடியும்.
- பொருள் உற்பத்தி வணிகம்:
- டயர் உற்பத்தி
- பாண் உற்பத்தி
- ஆடை உற்பத்த
- சேவை
வணிகம்
- சிகை அலங்கரிப்பு நிலையம்
- ஆடை தைத்தல்
- தபால் நிலையம்
- வங்கி
- வாகனம் திருத்துமிடம்
- வைத்தியசாலை
- சில்லறை வியாபார வணிகம்
எத்தகைய
வணிகமொன்றைத் தொடங்குவதாயினும் அதற்குப் பல்வேறுபட்ட வளங்கள் தேவைப்படும். அவை உற்த்திக் காரணிகள்
எனப்படும்
- நிலம் : காணி, இயற்கை வளங்கள்
- உழைப்பு : ஊழியர்கள், முகாமையாளர்கள்
- மூலதனம் : காசு, இயந்திரம், கட்டடம்
- முயற்சி : உரிமையாளர், ஒழுங்கமைப்பாளர்
![]() |
| TAMIL STUDY MAX |


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக