Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

7 ஜூன், 2021

தரம் 10 மற்றும் O/L மாணவர்களுக்கான வரலாறு வினா விடை தொகுப்பு-01 O/L history question with answer

 

01 இலங்கையின் வரலாற்றைக் கற்க உதவும் மகாவம்சம் எனும் நூல் முக்கியம் பெறுவதற்கான காரணங்கள் எவை?

   1 வரலாறு விரிவாக எழுதப்பட்டுள்ளமை.

  2 இதில் இலங்கை வரலாறு தொடர்ச்சியாக எழுதப்பட்டுள்ளதோடுஇலங்கையின் வரலாறு ஒரே நூலிலேயே உள்ளடக்கப்பட்டுள்ளத

 3 இந்நூலில் உள்ள தகவல்கள் கல்வெட்டுக்கள் மூலமும், ஏனைய தொல்பொருள் மூலாதாரங்கள் மூலமும் உறுதிப்படுத்திக்கொள்ள முடிகின்றமை.

 

02  இலக்கிய மூலாதாரங்களால் ஏற்படும் நன்மைகள் எவை?

  1 வரலாற்றுக்கால ஒழுங்கு முறையை வளர்த்துக்கொள்ள  முடியும்

  2 ஒரு நாட்டின் வெளிநாட்டு உறவுகள் பற்றி அறிய முடியும்

  3 ஒரு நூலில் கூறப்பட்டுள்ள விடயங்களை மற்றொர் நூலின் மூலம் உறுதிப்படுத்த முடிகின்றமை

  4 வெவ்வேறு காலகட்டங்களின் அரசியல், பொருளாதாரசமூகம், கலாசாரம் பற்றி அறியலாம்

03 கல்வெட்டுக்களால் ஏற்படும் நன்மைகள் எவை?

  1 ஒரு மொழியின் படிப்படியாக ஏற்படும் வளர்ச்சியினை அறிந்து கொள்ளலாஉதவியாக அமையும்

  2 மன்னர்களின் சேவைகளை அறிந்து கொள்ளலாம்.

  3 புராதன காலத்தில் பொருளாதார முறைகள் பற்றி அறிந்து கொள்ள முடியும்.

  4 இலக்கிய மூலாதாரங்களில் கூறப்பட்டவற்றை  உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

  5 கற்குகைகளை பௌத்தபிக்குமாரின் வசிப்பிடங்களாக வசதிசெய்து கையளித்தமை பற்றிக் கூறுகின்றது.

  6 புராதன சமூக வரலாறு, குடியேற்றங்களின் பரம்பல் என்பவற்றை அறியலாம்.

04 நாணயங்கள் மூலம் அறிந்து கொள்ளக்கூடிய

   விடயங்கள் எவை?

                1 நாட்டின் பொருளாதார நிலை             

                2 நாட்டின் உலோகப்பாவனை

                3 நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு, வெளிநாட்டு வர;த்தகம்

                4 தொழினுட்ப வளர;ச்சி 

                5 ஆட்சி செய்த மன்னர்களின் அதிகார விரிவாக்கம்

 

 

 

05 புராதனகால சிதைவுகளிலிருந்து எவற்றை அறிந்து கொள்ளலாம்

 

            1 முற்கால மக்களின் கலையாக்கம், கலையாற்றல்

            2 தொழில்நுட்ப அறிவு

            3 கட்டடக்கலைத்திறன்

            4 நீர் முகாமைத்துவம்

            5 சுற்றாடல் பாதுகாப்பு

06 கலைப்படைப்புக்களின் ஊடாக எவற்றை அறிந்து கொள்ளலாம்

            1 முன்னோர்களின் ஆடை, அணிகலன்கள், ஆபரண வகைகளை அறிந்து கொள்ளலாம்.

            2 கலையாற்றல்களை அறியலாம்.

     3 கலையாக்கங்களில் பயன்படுத்தப்பட்ட பாறைவகைகளை அறியலாம்

     4 சமய நம்பிக்கைகள் பற்றி அறியலாம்.

07 கலைப்படைப்புக்களின் ஊடாக எவற்றை

   அறிந்து கொள்ளலாம்

            1 முன்னோர்களின் ஆடை, அணிகலன்கள், ஆபரண

       வகைகளை அறிந்து கொள்ளலாம்.

            2 கலையாற்றல்களை அறியலாம்.

     3 கலையாக்கங்களில் பயன்படுத்தப்பட்ட பாறைவகைகளை

       அறியலாம்

     4 சமய நம்பிக்கைகள் பற்றி அறியலாம்.

08 தொல்பொருள் மூலாதாரங்கள் மூலம் அறிந்துகொள்ளக்கூடிய விடயங்கள் எவை?

            1 பண்டைய மக்களின் பல்வேறுபட்ட திறமைகள்

            2 பண்டைய கலாசாரம்

            3 தொழினுட்பம்

            4 வெளிநாட்டுத் தொடர்புகள்

            5 வாழ்க்கை முறை

09 தொல்பொருள் மூலாதாரங்களின் முக்கியத்துவங்கள் எவை?

            1 தொல்பொருள் மூலாதாரங்கள் வரலாற்று நிகழ்வுகளின் சமகாலத்தை சேர்ந்தவையாக விளங்குகின்றன

            2 இலக்கிய மூலாதாரங்களில் காணப்படுகின்ற குறைபாடுகளினை திருத்திக்கொள்ள உதவும்.

            3 தொல்பொருள் மூலாதாரங்கள் நம்பகத்தன்மை வாய்ந்ததாக காணப்படும்.

            4 தொல்பொருள் மூலாதாரம் மூலம் பெறப்படும் கட்டட சிதைவுகள், சின்னங்கள், சிதைவுகள், கலையம்சங்கள் முதலானவை வரலாற்றுக்கு உறுதியையும் பலத்தையும் அளிக்கின்றன.



O/L history question with answer 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்