Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

8 ஜூன், 2021

தரம் 11 மாணவர்களுக்கான தமிழ் வினாப்பத்திரம் part 2

 


பகுதி 1


01. சுருக்கமான விடை தருக.

1. சந்தி பிரித்து எழுதுக?

 ஆவிபோ லாடையுமொன் றானதே

2. படி என்ற சொல் பெயராகவும் வினையாகவும் வருமாறு வாக்கியம் அமைக்குக.

 3. “தம்பி பந்தை உருட்டினான்இவ்வாக்கியத்தை செயற்பாட்டு வாக்கியமாக மாற்றுக.

 4. பாடசாலை வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என அதிபர் கூறினார். இங்கு

 தலைமைத்தொடர், சார்புத் தொடர் என்பவற்றைக் குறிப்பிடுக.

 5. இவற்றுள் கட்டுரையில் இடம் பெறும் அம்சங்கள் எவை?

 தேவையற்ற சொல்லை Pக்குதல், பந்தி அமைப்புமுறை, கூறியது கூறல்,

 பொருத்தமான தலைப்பிடல்.

 6. “பஞ்சபாண்டவர் ஐவரும் யார்? இது எவ்வகை வழுவாகும்? வழுவின்றி எழுதுக.

 7. “கத்தியால் வெட்டினான்என்ற வாக்கியத்தில் இடம் பெறும் உருபு யாது?

 அதன் பொருள் என்ன என்பதைக் குறிப்பிடுக.

 8. அழைப்பிதழ் ஒன்றில் இடம் பெறும் அம்சங்கள் 2 தருக.

 9. அறம் செய விரும்பு என ஓளவையார் கூறினார். இதற்கு பொருத்தமான நிறுத்தற்

 குறியீட்டை இடுக.

10. ‘ஏன்டா மோனே! இவ்வளவு நேரம் எங்கடா போன .... இதனை எழுத்து வழக்காக

 மாற்றுக.


பின்வரும் தலைப்புகளில் ஒன்றை தெரிவு செய்து 250 சொற்களில் அமையுமாறு கட்டுரை

எழுதுக. பொருத்தமான தலையங்கம் இடுக.

 1. இன்றைய இளைஞர் சமுதாயத்தின் மத்தியிலே நிகழ்கின்ற கலாசார, பண்பாட்டு ரீதியான

 சீரழிவுகளுக்குப் போதைப் பொருள் முக்கியமான காரணமாக ஊடகங்களால்

 சுட்டிக் காட்டப்படுகின்றது. சமுதாயத்தில் ஏற்படுகின்ற குடும்ப வன்முறைகள் சிறுவர்

 துஷ்பிரயோகம், கல்வி வீழ்ச்சி கலை வீழ்ச்சி என்பவற்றிற்கும் இதுவே காரணமாக

 அமைகின்றது. இதனை விபரிக்கும் முகமாக விளக்கக் கட்டுரை வரைக.

 2. யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவதெங்கணும் காணோம். என்று

 யாவராலும் புகழாரம் சூட்டப்பட்ட நம் தாய்மொழி செம்மொழி எனவும் ஏற்றுக்

 கொள்ளப்பட்டதாகும். தமிழ் மொழியின் சிறப்புக்கள் பற்றி மேடைப் பேச்சு ஒன்று

 நிகழ்த்துக.

 3. இன்றைய சமூக வலைத்தளங்களினால் இளைஞர்கள் மத்தியில் பரவி வருகின்ற

 பல்வேறு தீமைகளைக் கட்டுப்படுத்திக் குறைப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

 பற்றி இருவருக்கிடையேயான உரையாடல்.

 4. கண்மணி ஓர் ஆசிரியை அவள் பல துன்பங்களைத் தன் வாழ்வில் மலையென எதிர்

 கொண்டவள். இன்று பாடசாலையின் புதிய கட்டடத் திறப்பு விழாவின் போது

 அழைக்கப்பட்ட சிவராம் என்னும் பிரபல்யமான பிரதேச செயலாளரை வரவேற்று அவன்

 முகத்தைப் பார்த்த தருணத்தில் முகம் பூரிப்படைகிறது. என்றோ பார்த்த நினைவு. அவள்

 மனதில் நிழலாடுகிறது.... இச் சம்பவத்தினை மையமாகக் கொண்டு சிறுகதை வரைக.

                                                                                                                                                                                                               

03. கீழே தரப்பட்டுள்ள உரைப்பகுதியின் சுருக்கத்தை 40 - 45 சொற்களில் அமையக்கூடியவாறு

 எழுதுக. (சொற்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுக)

 ஓரிரு நூற்றாண்டுகளின் முன் பாரில் ஆங்கிலப் பயிற்சி மிகக் குறைவு. வடமொழி அன்றி, பிற

 மொழி எதுவும். எய்தப் பெறாத, பழமையும் பெருமையும், மொழி நூல் முடிவும். இலக்கிய

 வளமும் உடையது தமிழ். காவியச் சுவையிலும், கவி மணிக்குவையிலும் , தமிழின்

 நிலைமை, உலகிற் சிறந்த மொழி எதனோடும் ஒக்கவும் உயரவும் உரிமை தந்தது. ஆயினும்

 புத்துயிர் பெற்ற புதுக்கலை வகையிலும், விஞ்ஞான நூல்களின் வித்தகத் துறையிலும்

 அரசியலாளர் தாம் ஆங்கிலமொன்றிலே கல்வியை நமக்குத் தந்ததன்பயன், தமிழைப்

 போன்ற தாய் மொழியிலும் நாம் உயர்தரக் கல்விபயில இயலாதது. இந்த இழிநிலை வந்த

 காரணம் இரண்டு. ஒன்று: நம் மொழியில் புதுக் கலைச் சொற்களைப் போதுமளவு இடம்பெற

 விடாதது. ஆங்கிலச் சொற்களை அப்படியே எடுத்தாளத் துணியின், அம் மொழியறிவே

 வளருவதன்றி, தாய் மொழி வளமும் வளர்ச்சியும் குன்றும். வேணவா உடைய

 மாணவர்களெல்லாம் அயல் மொழி பயிலும் துயர் ஒழியாது. இரண்டாம் குறை: நம் தாய்

 மொழிகளிலே அவ்வக் கலைக்குச் செவ்விய நூல்கள் செய்யப் பெறாமை. கலைதோறும்,

 பயில்பவர் நிலைகளுக்கேற்பப் பலதர நூல்களும் நிலவாமொழிகள் உயர்தரக் கல்விக்கு

 உதவமாட்டா. அதனால் முதலில் நாட்டு மொழியில் இக் கேட்டை ஒழிக்கக் கலைச்சொல்

 வளத்தை நாம் பெருக்குதல் வேண்டும். அதனோடும் உடனே பல்வகைக் கலையிலும்

 நல்லறிவு உயர, தரம் தரமாகவும் இதம்பதமாகவும் நூல்களை இயற்றி தாய்மொழி வளர்ச்சி

 ஓய்ந்தொழியாமல் பேணுதற்கான செயன்முறை வகுத்து ஆம், வழியெல்லாம் முயலுதல்

 வேண்டும்.


04. பின்வரும் பந்தியை வாசித்து அதன் கீழ்த் தரப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை தருக.

 நாற்பது அல்லது ஐம்பது வருடங்கள் வாழ்ந்த மனிதனையும் நானூறு வருடமாக மறைய

 தெரியாமல் திண்டாகும் கருங்கல் மதிலையும் ஒன்றாக வைத்து இவன் நீர்மேற் குமிழியன்

 மறைந்து போனான். சுவரே நிலைத்து நிற்கிறது. இன்னும் குறைந்தது நானூறு

 வருடங்களுக்கு நிற்கும். ஆகவே மனிதன் வாழவில்லை மதில்தான் வாழ்கிறது என்று

 யாராவது சொல்வார்களா? எவ்வளவு காலம் இருந்தோம் என்பதைக் கொண்டன்று எப்படி

 இருந்தோம் என்பதைக் கொண்டு வாழ்ந்தோமா இல்லையா என்பதை நிருணயிக்க

 வேண்டியுள்ளது எவ்வளவு காலந்தான் நின்ற போதிலும் சுவரை வாழ்ந்ததாக நாம்

 கருதுவதில்லை. அது வாழவில்லை இருக்கிற மனிதனோ வாழ்கிறான் அவனுள்ளே

 உணர்ச்சிகளும் கருத்துக்களும் எண்ணங்களும் ஊற்றெடுத்து பெருகி வெள்ளக்காடாய் மாறி

 விடுகின்றன.

 1. இப்பந்தியில் கூறப்பட்டிருக்கும் பிரதான கருத்து யாது?

 2. சுவர் வாழ்வதில்லை என்பதற்கு இங்கு கூறப்பட்ட காரணங்கள் எவை?

 3. வெள்ளக்காடு என்பது எவ்வகை அணி விளக்குக.

 4. இப்பந்தியில் குறிப்பிடப்பட்ட மரபுத்தொடர் யாது? அதன் பொருளை எழுதுக.

 5. பொருள் தருக.

 சுவர் -

 காடு -


05. புவி வெப்பமடைதல் என்பது உலகளாவிய ரீதியில் பாரிய பிரச்சினையாக உருவாகி

 உள்ளது. இதனைத் தடுத்தற் பொருட்டு மரங்கள் வெட்டப்படுவதால் புவிக்கு ஏற்படும்

 பாதிப்புக்களையும் மரம் நடுகையால் ஏற்படும் நன்மைகளையும் விளக்கி 100 சொற்களில்

 அமைந்த துண்டுப்பிரசுரம் ஒன்று எழுதுக.

 அல்லது

 எமது நாட்டில் இன்று குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீரானது

 பொருளாதாரப் பண்டமாக மாறிவருகின்ற அபாயநிலை காணப்படுகிறது. எனவே நன்னீரை

 மாசடையாது பேணிப்பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பத்திரிகை

 ஆசிரியருக்கு 100 சொற்களில் ஒரு கடிதம் எழுதுக.


பகுதி3

கவனிக்க வேண்டியவை:-

 அறிவுறுத்தல்களுக்கேற்ப ஐந்து வினாக்களுக்கு மாத்திரம் விடை தருக.

 1, 2, 3, 4 ஆகிய வினாக்களுக்கும் 5, 6, 7 ஆகிய வினாக்களில் யாதேனும் ஒரு வினாவுக்கும்

 விடை எழுதுக.

 இவ் வினாத்தாளுக்குரிய புள்ளிகள் 80 ஆகும்.

சுருக்கமான விடை எழுதுக.

01. “யானை அனையவர் நண்பொரீஇ நாயனையார் கேண்மை தழீஇக் கொளல் வேண்டும்

 ) நாலடியாரில் எதைப்போன்றவர்களது நட்பை தழுவிக் கொள்ள வேண்டும் எனக்

 கூறப்படுகிறது.

 ) நண்பொரீஇ என்பதன் பொருள் யாது?

2. “தேனருவ p pரையெழுப ; p வான p ; வழ pயொழுகும ; செங ;கத pரோன ; பர p ;காலும ;

 தேர்க்காலும் வழுகும்

 ) பரிக்காலும் தேர்க்காலும் என்பதனால் விளங்கிக் கொள்வது யாது?

 ) இதில் கையாளப்பட்ட அணி யாது?

3. எது நல்ல சினிமா என்ற கட்டுரையில் காட்சிப்படிமம் இணைப்பதில்,

 ) மயங்கித் தெளிதல் என்றால் என்ன?

 ) இருண்டு தெளிதல் என்றால் என்ன?

4.

 ) குறுந்தொகை செய்யுட்களின் அடிவரையறை யாது?

 ) “தச்சன் செய்த சிறுமாவையம்என்ற பாடல் எந்நிலத்திற்குரியது?

5. ) உயிரைத் துறந்தாவது மானத்தைக் காப்பதே மக்களுக்கு வரிசையும், குடிப்பிறப்பும்,

 மரபும் எனக் கூறியவர் யார்?

 ) அத்திறம் நிற்க என்பதன் பொருள் யாது?

6. “கைராசிக்காரி நீங்கள் தான் மாமி என்ர தலப் புள்ளய ஏந்தணும்இக் கூற்று யாரால்

 யாருக்குக் கூறப்பட்டுள்ளது?

7. புழுதிப் படுக்கையில் புதைந்த எம் மக்களின்...

 ) இக்கவிதையின் ஆசிரியர் யார்?

 ) இதில் யாருடைய துன்பியல் வாழ்க்கை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது?

8. ) அஸ்தினாபுரத்தின் மறு பெயர் யாது?

 ) பாண்டவர்களிடம், ஓராண்டுகாலம், காட்டில் அஞ்ஞாதவாசம் செய்து திரும்பியவரின்

 உரியபாதிப் பங்கைத் தருவதாக கூறியவர் யார்?

9. ) தூது என்னும் செய்யுள் இலக்கியமானது எவ்வகை இலக்கிய வகைக்குள் அடங்கும்?

 ) தத்தை என்பதன் பொருள் யாது?

 10. வடமொழியிலுள்ள சமய இலக்கியங்கள் வளம் பெற உதவிய தென்னாட்டுத் தத்துவஞானிகள் இருவரைக் குறிப்பிடுக?

 


02. பின்வரும் செய்யுட்பகுதிகளையும், உரைநடைப்பகுதிகளையும் வாசித்து தரப்பட்டுள்ள

 வினாக்களுக்கு விடை தருக.

1. கழியும் பிழைபொருட்டள்ளி நன்னூலாங் கடலினுண்டு

 வழியும் பொதிகை வரையினிற் கால் கொண்டு வண்கவிதை

 மொழியும் புலவர் மனத்தே யிடித்து முழங்கி மின்னிப்

 பொழியும் படிக்குக் கவி காளமேகப் புறப்பட்டதே.

 ) காளமேகப் புலவரின் இயற்பெயர் யாது?

 ) காளமேகப் புலவரின் கவிச்சிறப்பு எவ்வாறு விளக்கப்படுகிறது?

2. என்றலுமே யடியின் மிசை நெடிது வீழ்த்

 தழுவானை யிவன் யாரென்று

 கன்று பிரிகாராவின் றுயருடைய

 கொடி வினவக் கழற்கான்மைந்த

 னின்றுணைவ னிராகவனுக் கிலக்குவற்கு

 மிளையாவதற்கு மெனக்கு மூத்தான்

 குன்றனைய திருநெடுந் தோட் குகனென்பா

 னிந்த நின்ற குரிசி லென்றான்.

) இப் பாடல் பாடப்பட்ட சந்தர்ப்பம் யாது?

 ) இப் பாடலில் கையாளப்பட்டுள்ள அணி யாது? விளக்குக.

3. தேனோங்கு பூம்பொதும்பர்ச் செறிந்து பசுந் தழை பரப்பி

 வானோங்கு தேமாவில் வாழுமிளம் பைங்கிளியே

 மானேங்கு மைவிழி யென் வஞ்சியிடைப் பைந்தொடிபால்

 நானிங்கு புகலுமொழி நற் கிளியே கூறாயே

 நங்கையவள் பாற் சென்று நலம் பெற நீ கூறாயே.

 ) இப் பாடலில் வரும் கிளியின் தோற்றத்தை விளக்குக.

 ) தலைவியின் தோற்றத்தினையும் விளக்குக.

4. இந்தக் கஷ்டகாலத்திலும் என் மகன் அதனுடன் மிகவும் வாஞ்சையாகப் பழகினான்.

 மணிக்கணக்காக விளையாடிக் கொண்டிருப்பான். P நிற யானையும், சிவப்பு

 நிறக்குதிரையும் வரைவான். பள்ளியில் கொடுக்கும் வீட்டு வேலைகளை கணிப்பொறியில்

 செய்வான், கதை சொல்லும் போதும்சொல்லுவது போல , கம்பியூட்டரும்ங்ம்,ங்ம்

 என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்கும். அவன் ஏதாவது தப்பாகச் செய்யும்

 போது தான் அப்படி எச்சரிக்கும் என் மகன் அந்த நேரங்களில்கோவிக்காதே,

 கோவிக்காதேஎன்று சொல்லி அதைச் சமாளிப்பான்.

 ) அரவிந்தன் கணிப்பொறியில் செய்யும் வேலைகள் எவை?

 ) “ வாஞ்சையுடன் பழகுதல்என்ற தொடரை விளக்குக?

5. இந்தக் கிராமத்தின் முடிசூடா குட்டி ராணியாய், பொது மனுசியாய் மூத்தம்மா தான்

 இருந்தா. அனுபவம் பழுத்து அவ்விடம் அறிவு தேஜஸ், சட்டெனத் தெரியும், நானும்

 மூத்த வாப்பாவும் காட்டிற்குப் போய் ஆமணக்குக் கொட்டை பொறுக்கிக் கொடுப்போம்.

 அதை இடித்து உருக்கி உளுவலரிசியும், நன்னாரி வேரும் நறுக்கிப் போட்டு,

 எண்ணெயாய்க் காய்ச்சி தலைக்குப் பூசுவா. அவவின் கருகரு வென்ற தலை முடிக்கு இது

 தான் பஸ்பம். எனக்கும் அதைத்தான் அப்பிடுவா. மூத்த வாப்பா எண்ணெய் போட

 மாட்டார். “அங்கப் பாரு மனெ உன்ட மூத்த வாப்பா தலயு, சூப்பின பனங்கொட்ட மாதிரி

 என கிழவனை சீண்டிகொப்பினுள் சிரித்துக் கொள்வார்.

 ) இப் பகுதியின் மையக் கருத்து யாது?

 ) மூத்தம்மாவிற்கு கிராமத்தில் இருந்த செல்வாக்கு எடுத்துக் கூறப்படும்

 விதத்தினைக் கூறுக?


03.

) சீறி ஓடாத வருங்கால மனித நதி என்ற கவிதையில் எழுத்தறிவின்மையால் ஏற்படக்

 கூடிய அவலங்கள்.

) எழுத்தறிவற்ற இளைஞனுக்காக வருத்தப்படும் கவிஞரின் மனநிலை.

 அல்லது

 பாரதியார் சுயசரிதை என்ற கவிதையில்.

 ) ஒருவர் விரும்பும் நன்மைகளை அடைதற்குரிய வழிவகைகளும் அவற்றை அடைய

 முடியாமைக்கான காரணங்களையும் எடுத்துக் காட்டுக்களுடன் விளக்குக.


04. அற்றைத் திங்கள் அவ் வெண்ணிலவில் என்ற பாடலை அடிப்படையாகக் கொண்டு

 பின் வரும் வினாக்களுக்கு விடை தருக.

 ) பறம்பு மலையினைப் பிரியும் பாரி மகளிரின் துயரம் நிறைந்த மனநிலை எவ்வாறு

 எடுத்துக் காட்டப்படுகிறது.

 ) பறம்பு மலையின் இயற்கை வளத்தைக் கவிஞர் வெளிப்படுத்துமாற்றினை விளக்குக.

 அல்லது

கிருஸ்ணன் தூதுச் சருக்கத்தில்

 ) வீமனின் குணப் பண்புகள்

 ) நூலாசிரியரின் கவிச் சிறப்பு


05. தத்தை விடு தூதில்

) பெண் விடுதலை தொடர்பான கருத்துக்கள்.

 ) தத்தை விடு தூது உணர்த்தும் படிப்பினைகள்.


06. ) குகப்படலத்தில் கைகேயியின் குணப்பண்புகள்?

 ) கையாளப்பட்ட அணிச்சிறப்புக்கள்?


07. நல்லசினிமா என்ற கட்டுரையில் கட்டுரை ஆசிரியரின்

 ) மொழி நடை

 ) நல்ல தொரு சினிமாவில் உள்ளடங்க வேண்டியவை.


 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்