Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

19 மே, 2021

A/L மாணவர்களுக்கான வலராறு A/L students History Notes in Tamil வரலாற்று வரைவிலக்கணம்

 

வரலாற்று வரைவிலக்கணம்

 

  • ஹிஸ்ட்ரி (History) எனும் சொல் கிரேக்க மொழியிலிருந்து வந்ததாகும். அதன் பொருள் ஆராய்தல் என்பதாகும்.

வரலாறு என்பது மனிதனின் கடந்த காலத்தைப்பற்றிக் கற்பதாகும்

என்று கிரிஸ்ஹேஸ்ட குறிப்பிட்டுள்ளார்.

  • வரலாறு என்பது தேசங்களின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் மனிதர்களின் அரசியல் நிலையில் செல்வாக்குச் செலுத்திய ஏனைய முக்கியமான மாற்றங்களையும் உள்ளடக்கிய மனித வர்க்கத்திளரிடையே ஏற்பட்ட சம்பவங்களின் கதை.” என்று ஜோன் ஜே  குறிப்பிட்டுள்ளார்.

  •  “வரலாறு என்பது மனிதனைப் பற்றிய கற்கைஎன்று ஆர். பி கொலின்வுட் குறிப்பிடுகிறார்.

 

  • இவ்வரைவிலக்கணங்களுக்கு அமைவாக வரலாற்றுப்பாடத்தின் மூலம் மனித இனத்தின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரையான தகவல்கள் விளக்கப்படுகின்றன

  • பல்வேறு காலகட்டங்களில் மனிதனின் சமய, அரசியல், சமூக, பொருளியல் பற்றிய தகவல்களை விவரித்தல் இப்பாடத்தினுடாக மேற்கொள்ளப்படுகின்றது.

                                          


                                                                      T A M I L S T U D Y  M A X  B L O G G E R.C O M

கீழ்வரும் காலகட்ட வகுத்தலின் மூலம் இலங்கையின் வரலாற்றைக் கற்கலாம்.

 

  • வரலாற்றின் இயல்புக்கமைய அது பல்வேறுப்பட்ட பாடவிடயங்களைத் தன்னுள் கொண்ட ஒருபாடமாகும்.

  • காலகட்டம் என்பது எல்லா விடயங்களையும் அவை இடம்பெற்ற காலத்திற்கு ஏற்ப ஒழுங்குப்படுத்தித் தொகுப்பதாகும்.

+ம் 

இலங்கையின் வரலாறு வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொடக்கம் இன்றைய காலம்வரை முறையாக வளர்ச்சி பெற்றதை இனங்காட்டுதல்

 

ஜீ.எம். திரவலியன் எனும் வரலாற்று அறிஞனின் கருத்துப்படி, வரலாறு என்பது பல பாடங்களால் ஆனதாகும்.

இதற்கு அமைவாக அவர், வரலாறு என்பது அனைத்துப் பாடங்களையும் கொண்ட ஒரு நிர்மாணம் எனக் குறிப்பிட்டுள்ளார். அப்படியென்றால் சமயம்,புவியியல், அரசியல், விஞ்ஞானம், தொழினுட்பம், கலை,சட்டம் ஆகிய சகல விடயங்களும்வரலாற்றுப் பாடத்தினுள் உள்ளடங்கும் என்பார்.

 

  • அரசறிவியல்: நிகழ்கால அரசியல் எதிர்கால வரலாறாகும்.
  • புவியியல்: வரலாற்று நிகழ்வுகளில் செல்வாக்குச் செலுத்தும் புவியியல் காரணிகளை விளக்குதல்
  • விஞ்ஞானமும் தொழினுட்பமும்: பல்வேறு காலகட்டங்களில் பிரயோகிக்கப்பட்ட விஞ்ஞான, தொழினுட்பங்கள் மனித பண்பாட்டில் உருவாக்கிய மாற்றங்களுக்கான காரணிகளைப்பற்றிக் கலந்துரையாடல்.

எந்தவொரு நாட்டினதும் பண்பாட்டில் அந்நாட்டு மக்கள் பின்பற்றும் சமயம் அடிப்படையாக அமைவதாகவும் இயற்கையை வணக்க,வழிபாடு செய்வதிலிருந்து பல்வேறு சமயத்தலைவர்களின்வெவ்வேறு தத்துவங்களைத் தம்முள் கொண்ட அறப்போதனைகளை மேற்கொண்டமையும் மக்கள் அவற்றை ஒப்புக்கொண்டு அதற்கியைய வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் பழகிக் கொண்டமையின் மூலம் அவர்களது பண்பாட்டு விருத்திக்கு அவை செல்வாக்குச் செலுத்திய விதத்தைப் பற்றிக்கருத்துரைத்தல்.

 

இவ்வாறு பல்வேறுபட்ட பாடங்களின் தனித்தன்மையுடனான மூலாதாரங்களும்

எண்ணக்கருக்களும் பற்றி ஆழமாகக் கலந்துரையாடப்படாவிட்டாலும் வரலாற்றுப் பாடத்திற்குரிய வெவ்வேறுப்பட்ட விடயங்களைக் கலந்துரையாடல்.

வரலாறு என்பது உங்களுடைய எண்ணங்களல்ல. உங்களுடைய ஞாபகங்களே” என்று டபிள்யு+.சி.சேலரும், ஆர்.ஜே.யேட்மனும் குறிப்பிட்டுள்ளதற்கு அமைவாக, வரலாறு என்பது ஒரு பிரபந்தம் அல்ல அது உண்மையாக நடைபெற்றவற்றினைக் கொண்டு உருவாக்கிக்கொள்ளப்பட்ட ஒரு பாடமாகும் எனப் பொருள்கொள்ளப்படுகின்றது.


இதற்கமைய வரலாறு என்பது. ஆதி தொட்டு இன்றுவரை மனிதன் செய்த, சொன்னவற்றின் உள்ளடக்கத்தைத் தம்முள் கொண்ட மனித பண்பாடாகும். அவற்றைக் கற்பிப்பதற்கு வசதியாக சமயம், அரசியல், புவியியல், பொருளியல், சமூகம், கலாசாரம், விஞ்ஞானம்தொழினுட்பம் எனும் விடயப்பரப்புகள் ஒன்று சேர;க்கப்பட்டு. எல்லாத்துறைகளைக் கொண்ட பகுதிகளைக் கொண்டு இது உருவானதாகத் தெளிவாகின்றது.


                                                    T A M I L S T U D Y  M A X  B L O G G E R.C O M


T A M I L S T U D Y  M A X  B L O G G E R.C O M

T A M I L S T U D Y  M A X  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்