Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

18 மே, 2021

Grade 11 Student Drama Nots தரம் 11 மாணவர்களுக்கான நாடகமும் அரங்கியலும்

 ஆற்றுகைக் கலைகள்


  • ஆற்றுகைக் கலையானது ஆற்றுவோர் - பார்ப்போர் நேரடித் தொடர்பைக் கொண்டிருக்கும்
  • இசை, நடனம், நாடகம் மட்டுமன்றி வில்லுப்பாட்டு, கதாப்பிரசங்கம் போன்ற கலைகளும் ஆற்றுகைக் கலைகளே.
  • ஆற்றுகை வெளியானது ஆற்றுகையில் செல்வாக்குச் செலுத்தும். இசை என்னும் போது பாடல் வழி வருவதும் இசை வாத்தியங்களினடியாக வருவதும்ஆகும்.
  • நடனம் என்பது இசையை இசைக்கும் போது (வாத்தியம்/மிடறு) அதற்கேற்பஉடலசைவுகளைக் கொண்டு வெளிப்படுத்தப்பெறுவது.
  • நுண்கலைகளுக்குட் சொல்லப்பெறாத வில்லுப்பாட்டு, கதாப்பிரசங்கம், சிலம்பம் போன்றனவும் ஆற்றுகைக் கலைகளே. இவை யாவும் கணப்பொழுதில் (கணப்பிரசன்ன நிலை) நடந்து முடிவன.
  • நாடகமென்பது கதை தழுவி வருவதாகும். நாடகாசிரியர் தொடக்கம் நெறியாளர்வரை ஒன்றிணைந்து செய்யப்பெறும் ஒரு செயற்பாடாகும்.
  • நடிகன் தனது உடலையும் குரலையும் பிரதான மூலகமாகக் கொண்டு உணர்வுவழியாகச் சித்திரிக்கும் கலையாகும்.
  • நாடகக் கதையைப் பொறுத்தவரை அக் கதையில் ஒரு கட்டமைப்புக் காணப்படும்.அது பாத்திரங்களின் சம்பவங்கள் சூழமைவுகளால் கட்டப்பட்டிருக்கும்.
  • நாடகத்தின் பிரதான அம்சம் மோதுகையாகும். நாடக மோதுகை அவலமாக முடிவடையின் அது அவல நாடகமாகவும் மகிழ்வாகமுடிவடையின் மகிழ்நெறி நாடகமாகவும் அமையும்.
  • நாடகம் என்பது கட்புல, செவிப்புலக் கலையாக அமையும்.வாழும் கலை, உயிரோட்டமான கலை, இயங்கு கலை, கணப்பிரசன்னமான கலை, மீள உருவாக்க முடியாத கலை எனப் பலவாறு அது அழைக்கப்படுகிறது.
















 மேலும் பாட குறிப்புகள் மிக விரைவில் பதிவிடப்படும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்