Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

18 மே, 2021

தரம் 11 மாணவர்களுக்கான வரலாறு History For Grade 11 student

 

கைத்தொழிற் புரட்சி

 

  • மனிதன் தனது கைத்திறன்களைக் கொண்டு செய்த பண்ட உற்பத்தியின்வினைத்திறனை அதிகரிப்பதற்காக இயந்திரங்களைக் கண்டுபிடித்து, குறுகியகாலத்தில் கைத்தொழில் மற்றும் தொழினுட்பத்துறையில் ஏற்படுத்தியகாத்திரமான மாற்றமே கைத்தொழிற் புரட்சி எனப்படுகின்றது.

கைத்தொழிற்புரட்சியின்ஆரம்பமும் வளர்ச்சியும்

ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் கழியும் வரையில் கைத்தொழிற்புரட்சி

இங்கிலாந்துக்கு மாத்திரம் வரையறைப்பட்டிருந்ததெனினும் 19 ஆம்

நூற்றாண்டாகும் போது ஐரோப்பாவின் ஏனைய நாடுகளுக்கும் உலகின்

ஏனைய கண்டங்களுக்கும் அது வியாபித்தது

 கைத்தொழிற்புரட்சி பிரித்தானியாவில் ஆரம்பித்தமைக்குக் காரணங்கள்

1.     பிரித்தானியாவில் காணப்பட்ட அரசியல் உறுதிநிலை நிலமானிய முறையின் வீழ்ச்சி

2.     மனப்பாங்குகளும் புதிய கருத்துக்களும் பிரபல்யமடைந்தமை

3.     பண முதலீடு செய்யும் ஆற்றல் கொண்ட செல்வந்தர்கள் பலர்காணப்பட்டமை

4.     விருத்தியடைந்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தோற்றம் பெற்றமை

5.     மூலப்பொருள்களை இலகுவாகப் பெறத்தக்கதாக இருந்தமை

6.     போக்குவரத்து வசதிகள் விருத்தியடைந்தமை

7.     குடியேற்ற நாடுகள் அதிகரித்தமையும் வியாபாரம் வளர்ச்சியடைந்தமையும்

8.     குடிசனத்தொகை அதிகரித்தமை


TAMIL STUDY MAX
History for O/L students




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்