Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

19 மே, 2021

A/L மாணவர்களுக்கான சித்திரம்43ம் குழுவைச் சேர்ந்த கலைஞர்கள் A/L ART Notes in tamil

 

43ம் குழுவைச்சேர்ந்த கலைஞர்கள்

 

  • ஹரீ பீரிஸ்
  • ஐவன் பீரிஸ்
  • ஜஸ்ரின் தெரணியகல
  • ரிச்சட் கேப்ரியல்
  • ஜோஜ் கீட்
  • எல்.டீ.பி
  •  மஞ்சு ஸ்ரீ

 

  • இலங்கையின் முதல் நவீனத்துவவாதக் கலைக் குழுவாக 43ம் குழு கருதப்படுகிறது.

  • 19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பிரான்ஸ் நாட்டின் பரிஸ் நகரத்தை மையமாகக்கொண்டு உருவாகிய ஒளியியல் வாதம், பின் ஒளியியல் வாதம் ஆகிய கலைப்போக்குகளின் செல்வாக்கை 43ம் குழுவைச் சேர்ந்த கலைஞர்கள் பெற்றனர்.

 

  • 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் பிரான்ஸ், ஜேர்மனில் தோன்றிய கலைப்போக்கான போவிஸம்  மற்றும் கனவடிவவாத செல்வாக்குகளையும் பெற்றனர்.

 

  • பலவகை பாணிகளுடனான நவீனத்துவவாதக் கலைத் துறையை இலங்கையில்தோற்றுவிப்பதே 43ம் குழுவைச் சேர்ந்த கலைஞர்களின் முக்கிய பணியானது.

 

 

                                  T A M I L S T U D Y  M A X  B L O G G E R.C O M

 

ஹரீ பீரிஸ் (1904 1988)

 

  • ஹரீ பீரிஸ் 43ம் குழுவின் உறுப்பினராவார்.
  • அவரது கலை நிர்மாணிப்புக்கள் இருவகைப்பட்டன.
முதலாவது வகையானது அக்கடமிக் யதார்த்த வாத கலைபோக்குகளில் இருந்து விடுபட்டு பிரதிமை ஓவியங்கள்வரையும் மரபாகும்.

நவீன வாதக் கலைப் போக்குகளுடன் தரைத்தோற்றக்காட்சிகளை வரையும் மரபு இரண்டாவதாகும்

  • அவரது பிரதிமை ஓவியங்களில் ஒன்றாகஇந்திராணிஓவியத்தையும் தரைத்தோற்றக்காடசியாக “ஜைன பவன” (சமண சமய ஆச்சிரமம்) எனும் ஓவியத்தையும் குறிப்பிடலாம்.

 

 

ஜைன பவன

 

  • தரைத்தோற்றக் காட்சியாகும். கன்வசு மீது எண்ணெய் வர்ணத்தினால் வரையப்பட்டுள்ளது.

  • ஓவியக் கலைஞனின் உணர்வுகளுக்கேற்ப தரைத் தோற்றத்தின் தன்மையை அமைத்துள்ளார். அக்கடமிக் கலைக்கமைய இயற்கையை அதே தோற்றத்தில் வரையும் பண்பிலிருந்து விடுபட்டுள்ளார்.

 

இந்திராணி

  •  கன்வசு மீது எண்ணெய் வர்ணத்தினால் வரையப்பட்ட பிரதிமை ஓவியமாகும்.
  •  அக்கடமிக் யதார்த்த வாத பிரதிமை கலைப் பாணியில் இருந்து விடுபட்டு வெளிப்பாட்டுவாத பண்புகளுடன் நிரமாணிக்கப்பட்டுள்ளது.

  • தொல்சீர் வர்ணப் பயன்பாட்டைக் கொண்டது. குளிர் வெப்ப இரு வர்ணங்களும் சமனாக சமநிலையில் இடப்பட்டுள்ளது.

 

                                T A M I L S T U D Y  M A X  B L O G G E R.C O M

 

ஐவன் பீரிஸ் (1921 - 1988)

 

  • 43ம் குழுவைச் சேர்ந்த கலைஞர்களுள் நவீனத்துவ வாதக் கலைப் பாணிகளைக் கொண்ட கலைஞனாகக் காணப்படுகிறார்.

  • ஐவன் பீரிஸ் அவர்கள் இலங்கையின் நவீன சித்திர அமைப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தப் பங்களிப்பை வழங்கினார்.

  • அதிகமான ஓவியங்கள் தனி வர்ணச்சாயல்கள்  உடையதாக இருந்தன.

  • இவரது பெரும்பாலான ஓவியங்கள் அமைதி, நிசப்த, சாந்த குண இயல்புகள் வெளிப்படுவதாக இருக்கினறன.

 

. திரும்பி வருதல்

  • கன்வசு மீது எண்ணெய் வர்ணத்தினால் வரையப்பட்ட ஓவியமாகும்.

  • ஐரோப்பிய சித்திரம் வரையும் நவீன கால முறையொன்றான சதுரக் கோட்டு வலை அமைப்பு இவ்வோவியத்தில் உள்ளது. இதனூடாகச் சிறப்பான ஒழுங்கு முறையான வடிவமைப்பொன்றை உருவாக்கியுள்ளார்.

  • வெளிப்பாட்டு வாத பண்புகளுக்கு அதாவது பாவ வெளிப்பாட்டு பண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

  • இவரது ஓவியங்கள் அதிகமாக தனி வர்ணச் சாயல்களைக் கொண்டுள்ளன.
  • இவ்வோவியத்திலும் அப்பண்பையே அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.

 

கல்கிசை

 

  • கன்வசு மீது எண்ணெய் வர்ணத்தினால் வரையப்பட்ட இவ்வோவியத்தில் காணப்படும் சகல உருவங்களம் கனவடிவப் பண்புகளையும் நிலைத்த தன்மையையும் கொண்டுள்ளன.

  • இயற்கையில் காணப்படுபவற்றின் இயல்பான தன்மையை திரிவுபடுத்தி, எளிமையான வடிவங்களாக இதனை முன்வைத்துள்ளார்.

  • நவீன ஓவியக் கலையின் தர்க்க ரீதியான கட்டமைப்புப் பண்புகள் புலப்படுவதாக உள்ளன.

  • கனவடிவவாத ஓவியக் கலையின் செல்வாக்கையும் பியற் மொன்றியலின் ஓவியக்கலை செல்வாக்கினையும் பெற்றுள்ளதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
                                 T A M I L S T U D Y  M A X  B L O G G E R.C O M


TAMIL STUDY MAX
A/L ART Notes in Tamil 





1 கருத்து:

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்