Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

19 மே, 2021

தரம் 10 மாணவர்களுக்கான நாடகமும் அரங்கியலும் Grade 10 and O/l students drama notes


நாடகமானது

  1. ஆற்றுவோர் - பார்ப்போர் நேரடித் தொடர்பைக் கொண்டிருக்கும்.
  2.  பெரும்பாலும் எழுத்துரு ஒன்றைக் கொண்டிருக்கும்.
  3.  எழுத்துரு இல்லாமலும் நாடகம் ஆற்றுகை செய்யப்படலாம்.
  4.  சம்பவத் தொடர் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
  5.  கதை பொருத்தமான சூழமைவுகள் மூலம் சித்திரிக்கப்படும்.
  6.  யாதாயினும் ஒரு மோடியைக் கொண்டிருக்கும்.
  7.  நால்வகைச் சித்திரிப்பினூடாக வெளிப்படுத்தப் பெறும்.
  8.  ஆற்றுகையில் அரங்க வெளியின் இயல்பு செல்வாக்குச் செலுத்தும்.கணப்பிரசன்னமானது.
  9.  பார்ப்போரின் பதிற்குறி தாக்கம் செலுத்தும்.
  10.  நடிகனைப் பிரதான ஊடகமாகக் கொண்டது.
  11.  ஒரு கூட்டு முயற்சியின் வெளிப்பாடாகும்.

 

நாடகக் கலையின் தனித்துவமானதும், சிறப்பானதுமான இயல்புகளைக் கொண்டது

 நாடகம், மனித மோதல்களை வெளிப்படுத்தும் கலைவடிவம்.

 பாத்திரங்களின் நேரடி உரையாடல் மூலமும் செயல்களின் மூலமும் நகர்த்தப்படுவது.

 உடனடியாக, பார்ப்பவரை எதிர்கொள்வதுடன் பதிற்குறிகளைத் தோற்றுவிப்பது.

 நாடகத்தில் பல கலைகளும் சங்கமிக்கின்றன.

 நாடகம  கூட்டு முயற்சியினால் உருவாவது.

 ‘சுவைபட வந்தனவெல்லாம் ஓரிடத்தே வந்தனவாகத் தொகுத்துக் கூறும் பண்புக்குரியது.

 

நடிப்பு என்பது உடல், உளம், குரல் இணைந்த ஒத்திசைவு மூலம் வெளிக்கொணரப்படும்.


பல்வேறுபட்ட நடிப்பு முறைகள் காணப்படுகின்றன. பொதுவாக இயல்பான நடிப்பு,மோடியுற்ற நடிப்பு என்ற வகைப்பாட்டுக்குள் உள்ளடக்கலாம்

 

நடிப்பிற்கு ஆர்வம், உள்ளார்ந்த ஆற்றல், மனஉறுதி, பயிற்சி ஆகிய அனைத்தும்அவசியம் ஆகும்

 

நடிகன் ஐம்புலன்களினாற் பெறும் அனுபவங்களைப் பிறிதொருவருக்கு அன்றேல் பலருக்கு விளங்கத்தக்க வகையில் நடிப்பின் மூலம் எடுத்துக் காட்டலாம்.

 

நடிகன் சகல அனுபவங்களையும் நிஜவாழ்வின் அனுபவங்களில் இருந்தும், தமதுகற்பனையைப் பயன்படுத்தியும் படைப்பாக்கம் செய்யலாம்.நடிகரிடம் பின்வரும் பண்புகளை விருத்தி செய்வதற்குப் பயிற்சி அவசியமானதாகும்

 

  • ஒற்றுமையாகச் செயற்படும் மனப்பாங்கு.
  •  ஏற்றுக்கொள்ளும் தன்மை.
  • ஆர்வம்.

 

நடிகர் பிறிதொரு ஆளாக ஆள்மயமாதற்கு நடிகருக்குத் திறன்களும் பண்புகளும் அவசியமானவை

 

 

TAMIL STUDY MAX
Grade 10 and O/l students drama notes

TAMIL STUDY MAX

 


1 கருத்து:

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்