Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

19 மே, 2021

தரம் 10 மாணவர்களுக்கான வரலாறு Grade 10 and O/L student History notes

 

வரலாறுபயில்வதற்குரிய மூலாதாரங்கள்

 

மூலாதாரப் பாகுபாடு

 

வரலாறு என்பது கடந்த காலத்தைப் பற்றிய விடயப்பரப்பிலும் அதில் அடங்கும் காலத்தையும் பொருளையும் விளங்கிக் கொள்வதற்காக வரலாற்றை விவரிக்கும் மூலாதாரம் தேவை

 

கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றை அறிந்து கொள்வதற்குத் துணையாகக் கொள்ளத்தக்க இரண்டு மூலாதார வகைகள் உள்ளன

I)  இலக்கிய மூலாதாரங்கள்

  •  இது இரண்டு பகுதிகளாலானது

 1. சுதேசிய இலக்கிய மூலாதாரங்கள் : (உள்நாட்டு இலக்கிய மூலாதாரங்கள்)  பாலிவம்சக் கதைகள், பாலி அட்டக் கதைகள், சமயக் கிரந்தங்கள் செய்யுள் மற்றும் உரைநடை இலக்கியப் படைப்புக்கள்

 2.வெளிநாட்டு இலக்கிய மூலாதாரங்கள்

   இலங்கைக்கு வருகைதந்த வெளிநாட்டவர்களும், இலங்கை தொடர்பான தகவல்களைக் கேட்டறிந்த வெளிநாட்டவர்களும் எழுதிய நூல்கள், அறிக்கைகள்

 

II)  தொல்பொருளியல் மூலாதாரங்கள்

  பண்டைக் காலத்துக்குரிய ஏடுகள், ஏனைய பொருள்கள் இதிலடங்கும்.

 

வரலாறுகற்பதன் முக்கியத்துவம்

 

  1.  தாம் வாழும் சமூகம் பற்றியும் உலகம் பற்றியும் விளங்கிக்கொள்ளல்.
  2.  கடந்த காலத்தின் ஊடாக தற்காலத்தை விளங்கி, எதிர்காலத்தை கட்டியெழுப்புதல்.
  3. எதிர்கால தலைமைத்துவமேற்றல்.
  4. தேசிய தனித்துவத்தை இனங்காணல்.
  5.  ஏனைய பண்பாடுகளை மதித்தல்.
  6.  பல்வேறு அபிப்பராயங்களை சகித்தல் பொறுத்தல்
  7.  தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புதல்.
  8.  காலம், வெளி என்பன தொடர்பான கருத்தை வளர்த்தல்.
  9. பகுத்தறிவுச் சிந்தனை, விமர்சன சிந்தனை விருத்தி

 

இலங்கையில் குடியேற்றங்கள் தாபிதமாதல்

 

இற்றைக்கு ஓரிலட்சத்து முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் குடியேற்றம் ஆரம்பித்தமைக்குச் சான்றுகள் உள்ளன

 

 இலங்கையில் ஆரம்பக் குடியேற்றங்கள்

 

  •  வாழ்க்கை முறை, தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கமைய பிரதானமாக 2 காலகட்டங்கலாக வகைப்படுத்தலாம்

 1.வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

வேட்டையாடியமை, உணவு சேகரித்துப் பிழைத்தல், ஏறத்தாழ கி.மு 125,000 தொடக்கம் கி.மு 1800 வரையிலான காலம்

2.முன் வரலாற்றுக் காலம்

உணவு உற்பத்தி செய்து கொள்ளல். அதாவது விவசாயம், உலோகப் பயன்பாடு, நிரந்தரமான குடியேற்றங்கள், ஏறத்தாழ கி.மு 2400 தொடக்கம் கி.மு 450 வரையிலான காலம்

 

வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

 

  • குடியேற்றங்களின் அடிப்படை இயல்புகள்குடியேற்றங்களின் தன்மையை இரண்டு பகுதிகளாக காட்டலாம்

                   1. திறந்த வெளியான வேட்டையிடங்கள்

                   2. இயற்கையான கற்குகைகள்

 

  • வாழ்க்கை முறை

 இடம்பெயரும் வேட்டைக்காரர்கள்

 அலைந்து திரிந்து உணவு சேகரித்தல்

 சிறிய சமூகக் குழுக்களாக வாழ்தல்

 உலர்வான காலங்களில் திறந்த வெளியான இடங்களிலும் மாரி/

 மழைக்காலங்களில் கற்குகைகளிலும் வாழ்ந்தமை

 

  • உணவு முறை

 வேட்டையாடித் தேடிய உணவு

 கிழங்கு வகை, தானிய வகை, காட்டு வாழை, காட்டு ஈரப்பலா போன்ற

  இயற்கையாக வளர்ந்த உணவுகள்.

 உப்பு பயன்படுத்தியமை

 உணவை தீயில் சுட்டுப் பயன்படுத்தல்.

 

  • தொழினுட்பம்

 மரக்கோல்கள், விலங்கு என்புகள், கற்கள் போன்றவற்றால் உபகரணங்கள் செய்தமை

வெவ்வேறு செயல்களுக்காக உபகரணங்களைப் பயன்படுத்தியமை

  கிழித்தல், வெட்டுதல், நசித்தல், தோண்டுதல் போன்றவற்றுக்காக

TAMIL STUDY MAX
Grade 10 and O/L student History Notes

TAMIL STUDY MAX


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்