Post Top Ad

Your Ad Spot

19 மே, 2021

A/L மாணவர்களுக்கான நாடகமும் அரங்கியலும் A/L students Drama Notes in Tamil கலை


 ‘கலை’

  • கலைஎன்ற சொல் ‘Arts’, ‘Technic’ எனும் இலத்தீன், கிரேக்க வேர்ச்சொல்லில்
  • இருந்து உருவானது. இச்சொற்கள்ஆற்றல்அன்றேல்திறன்எனும் பொருளை வெளிப்படுத்தி நிற்கின்றன.

  • சமஸ்கிருதத்தில்கலைஎன்ற சொல்லுக்கான மூலச்சொல்கலாஎன்பதாகும். ‘கலா’ என்பது வளர்தல், விரிதல், பெருகுதல் எனும் அர்த்தங்களைத் தருவதாக அமைகின்றது.

  • கலைஎன்பதற்கான வரைவிலக்கணங்கள், அறிஞர்களது சிந்தனைக்கேற்பவும் அவர்கள் வாழ்ந்த காலத்து மக்களின் வாழ்வியல் முறைமைக்கேற்பவும், பண்பாட்டிற்கேற்பவும் நாகரிக வளர்ச்சிக்கேற்பவும் பல்வேறு கோணங்களில் நோக்கப்பெறுகின்றன. அவை:

 

  1. கற்கப்படுவன அனைத்தும் கலையே
  2.  ‘கலை என்பது ஒன்றைச் செய்வதில் அன்றேல் உருவாக்குவதில் உள்ள திறமை
  3. கலை ஒரு புனிதமான பொய்
  4. கலை என்பது உணர்வின் வெளிப்பாடு
  5.  ‘ஒருவரது திறமையையும் ஆற்றலையும் வெளிப்படுத்துவதே கலை
  6.  ‘உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ள அழகுணர்வுகளை அகழ்ந்து எடுத்து வெளிப்படுத்துவதே கலை
  7. கலைஞனுக்கும் சுவைஞனுக்குமான தொடர்பாடல் ஊடகமே கலை

 

  • கலை என்றால் என்ன? என்பதற்கு இவ்வாறு பலர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ள போதிலும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாக ஹொனிக்மனின் கருத்தினைக் குறிப்பிடலாம்.

 

கலை என்பது ஓர் உணர்வினை அன்றேல் பெறுமானத்தினை வெளிப்படுத்துவதிலும் தொடர்புபடுத்துவதிலும் மனிதத்திறன்தொழிற்படும் முறைமைஆகும்.

 

  • கலை என்பது ஒரு செய்முறை.கலையின் வெளிப்படுகை முறைமைக்கும்,
  • சாதனத்திற்குமேற்பக் கலை பல்வேறு வகையில் வகைப்படுத்தப் பெறுகிறது. அவை:

  1. வரை கலைகள்  - சித்திரம், ஓவியம்.
  2.  குழைமக் கலைகள் - சிற்பம், மட்பாண்டம்.
  3.  வாய்ச்சொற் கலைகள்  - பாடல்.
  4. ஆற்றுகைக் கலைகள் - நடனம், நாடகம், இசை, சினிமா.

 

                                                                            T A M I L S T U D Y  M A X  B L O G G E R.C O M


கீழைத்தேயக் கலைக் கோட்பாடுகள்

  •  மனித உறவுகளையும், வாழ்க்கைக் குறிக்கோள்களையும் வகுத்து ஒழுங்குபடுத்து வதற்காகச் சமுதாயத்திடம் காணப்படும் நுட்பமான கவர்ச்சியுள்ள ஆற்றலுடைய கருவியே கலை

                                                                                                    - இராமதாஸ் முகர்ஜி

  • மனிதனது உள்ளத்தைத் தன்வசமாக்கி, நிரப்பி அவ்வளவோடு நில்லாமல் வெளிப்படுத்தும் ஆற்றலே கலை
                                                                               - கலாநிதி மா. இராசமாணிக்கனார்

 

 

  • கலையும் இயற்கையும் அழகு நிறைந்தனவாக இருந்தாலும், கலையானது இலக்கியத்தின் ஜீவசிருஷ்டி ததும்பும் இயற்கை வடிவங்களை விஞ்சி விடுவதோடு, அதைவிட அதிகமான ஒழுங்குள்ளதாகவும், சுருக்கமான தாகவும், தத்ரூபமானதாகவும், சர்வவியாபகமானதாகவும் அமைந்துள்ளது.” 
                                                                                                                   - மாசேதுங்

 

இந்தியக் கலையானது பழிபாவமும், தன்னலமும் நிறைந்த உலகை விட்டுத் தம்மை அப்பால் அழைத்துச் செல்லவல்லது. இந்தியக் கலை அளிக்கும் அழகு வெறும் இயற்கையானதும் அன்றுசெயற்கையானதும் அன்று. ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்டுள்ளது. இக்கலை மனித இறைவழி முறை அனுபவத்தைக் காட்டுகிறது. கலைஞனானவர் கலைகளைப் படைக்கும் முன் அதன் பொருள் பற்றிச் சிந்திக்க வேண்டும். அவனது சிந்தனைகள் சிதறக்கூடாது. வெறும் கற்பனை உலகில் இருந்து கலையைப் படைத்துவிட முடியாது. படைப்புப் பொருள்களின் தன்மை மனதில் நிலைநிறுத்தப்படல் வேண்டும். உள்மனதில் பதிந்த படமே கலை. கலைஞனும் கலையில் ஒன்றிக்க வேண்டும்.” 

                                                                                                              - ரவீந்திரநாத் தாகூர்

 

அழகைக் கண்டுபிடிப்பதும் அதனை வெளிப்படுத்துவதும் கலை” 

                                                                                                                          - அரவிந்தர

 



                                                                                    T A M I L S T U D Y  M A X  B L O G G E R.C O M


TAMIL STUDY MAX
A/L students Drama Notes in Tamil



TAMIL STUDY MAX

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்