Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

18 மே, 2021

தரம் 11 மாணவர்களுக்கான சித்திரம் Art for grade 11 student

 

முதலியார் ஏ. சீ. ஜீ. எஸ். அமரசேகர (1883-1983)

 

  • ·         கலைஞர் முதலியார் ஏ. சீ. ஜீ. எஸ். அமரசேகர இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையில் கலாநிலைய யதார்த்தவாத (Academic Realism) ஓவிய கலைமுறைமையில் முன்னோடியாகச் செயற்பட்ட ஒரு சித்திரக் கலைஞர்ஆவார்
  • ·         1883 மார்ச் 3 ஆந் திகதி காலி மாவட்டத்தின் தொடந்துவை எனும் ஊரில் பிறந்த முதலியார் ஏ. சீ. ஜீ. எஸ். அமரசேகர (ஏப்ரகாம் கிரிஸ்டோபர் கிறக்கறி சூரியஆரச்சி அமரசேகர) கருத்துப்படக் (Cartoon) கலைஞராகவே படைப்பாக்கத் துறையில்பிரவேசித்தார்.
  • ·         பிரித்தானிய ஆட்சியாளரின் அனுசரணையின் கீழ், நிறுவப்பட்ட இலங்கைக் கலைக்சங்கத்தின் (Ceylon Society of Art)முன்னோடிக் கலைஞர்களுள் ஒருவராகவும் செயற்பட்டார்.
  • ·         இலங்கை ஒரு குடியேற்ற நாடாக இருந்தபோது பிரித்தானியாவில் இருந்து வருகைதந்த கலைஞரகளின் கலைச் செல்வாக்கை, இலங்கைக் கலைச் சங்கத்தைச் சேர்ந்தகலைஞர்களின் படைப்புக்களில் காணலாம்.
  • ·         கலைஞர் முதலியார் . சீ. ஜீ. எஸ். அமரசேகரவினது சித்திரப் படைப்புக்களில்ஐரோப்பிய கலாநிலையக் கலைப்பாணியாகிய யதார்த்தவாத கலைப்பண்புகளைக்காணலாம்.
  • ·         உயிரினங்களின் உருவங்கள், யதார்த்தமான நிலத்தோற்றங்கள் போன்றவற்றை வரைவதில் திறமைமிக்கவரான இவர், தமது சித்திரப் படைப்புக்களுக்காக, நீர் வர்ணம்,எண்ணெய் (தைல) வர்ணம் ஆகிய இரண்டு நிற ஊடகங்களையும் பயன்படுத்தியுள்ளார்.
  • ·         மனித உருவங்களை உள்ளடக்கிய உருவ ஒழுங்கமைப்புகளுக்கு முதலிடமளித்த இவர், ஐரோப்பிய கலாநிலையக் கலையின் முதன்மையான ஒரு பண்பாகிய தூரநோக்குமுறையைத் தமது  சித்திரங்களின் அடிப்படையாகக் கொண்டுள்ளார்.
  • ·         முப்பரிமாண இயல்புகளைக் கொண்ட நிறப் பயன்பாட்டுடன், ஒளி, நிழல் தொடர;பாக கலாநிலைய அறிவாகியகியரஸ்கியுரோ (Chiaroscuro)கோட்பாட்டை அவரது படைப்புக்களில் காணமுடிகிறது.
  • ·         கலைஞர் முதலியார் . சீ. ஜீ. எஸ். அமரசேகரவினது சித்திரக் கலைப் படைப்புக்கள் சில வருமாறு:

1.       தொழிலின்மை (Unemployed)/ தச்சனின் வீடு

2.       பேயோட்டியின் மகள்

3.       பூனைக்குட்டி

4.       ரீட் மாவத்தை (நீர்வர்ணம்)

5.       அரச தலைவர்களின் மெய்யுருக்கள் / பிரதிமை ஓவியங்கள் (Portrait)

TAMIL STUDY MAX
Art Notes for o/l students


TAMIL STUDY MAX

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்