Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

18 மே, 2021

தரம் 11 மாணவர்களுக்கான வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும் Business & Accounting Studies for grade 11 student

 

துணைச்சேவைகளின் உதவியினைப் பெற்று 

வணிக  நடவடிக்கைகளைச் செயற்படுத்தும் முறை தொடர்பான அடிப்படையறிவினைக் கட்டியெழுப்புதவல்


  • பொதுவாக வணிக வங்கிகளில் பின்வரும் கணக்கு வகைகள் பேணப்படுகின்றன.

1.                                              சேமிப்புக் கணக்குகள்

2.                                              நடைமுறைக் கணக்குகள்

3.                                              நிலையான வைப்புக் கணக்குகள்

  • தற்காலத்தில் வங்கிகள் இலத்திரனியல் தொடர்பாடல் தொழினுட்பத்தைப் பயன்படுத்திதமது வாடிக்கையாளர்களுக்கு உச்ச சேவையொன்றினைப் பெற்றுக் கொடுக்கின்றன.இதற்காக வங்கிகள் பின்வரும் சேவைகளைப் பரவலான முறையில் மேற்கொண்டுவருகின்றன.

கடனட்டை

வணிக வங்கியொன்றினூடாக கடன் என்ற அடிப்படையில் வழங்கப்படும் இவ்வட்டைமூலம் வணிக வங்கியின் அனுமதியினைப் பெற்றுள்ள நிறுவனங்களிலிருந்து வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட தொகைக்குட்பட்டதாகப் பொருட்கள், சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அதேபோன்று தன்னியக்க டெலர் இயந்திரத்தின் மூலம்குறிப்பிட்ட தொகை வரையறைக்குட்பட்ட முறையில் பணத்தினையும் பெற்றுக் கொள்ளமுடியும். இதற்காக வங்கிக் கணக்கொன்று பேணப்பட வேண்டுமென்பது அவசியமில்லை.

=ம்: வீசா கடனட்டை, மாஸ்டர் கடனட்டை

வரவட்டை

வங்கிக் கணக்கில் காணப்படும் பணத்தினை அடிப்படையில் கொடுக்கல் வாங்கல்களைமேற்கொள்ளும் வகையில் வணிக வங்கிகள் தமது வாடிக்கையாளர;களுக்கு வரவட்டைகளை வழங்கும். இங்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிறுவனங்களிலிருந்து வங்கிக் கணக்கில்காணப்படும் பண மீதி வரையில் பொருட்கள், சேவைகளைக் கொள்வனவு செய்யமுடிவதுடன் குறித்த நிறுவனத்தின் (விற்பனையாளர்) கணக்கிற்கு வரவு அட்டைஉரிமையாளரின் கணக்கிலிருந்து பணம் மாற்றப்படும். வரவு அட்டையைப் பயன்படுத்திபணத்தை மீளப்பெறவும் முடியும்

+ : PET வீசா வரவட்டை, BOC வீசா வரவட்டை


தன்னியக்க டெலர் அட்டைகள்

பொதுவாகச் சேமிப்புப் புத்தகத்திலிருந்து வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுக் கொள்ளக்கூடிய சேவைகளுக்கு ஒத்த சேவைகளைப் பெற்றுக் கொள்ளக்கூடியவாறு வணிகவங்கிகளினால் அல்லது ஏனைய வங்கிகளினால் வழங்கப்படும் அட்டை வகையொன்றேஇதுவாகும். இங்கு அனைத்துச் சேவைகளும் கணினியின் துணையுடன் தன்னியக்க

டெலர; இயந்திரத்தின் (A.T.M) மூலம் இடம்பெறும்.


இதன் மூலம் வினைத்திறனாகவும் முறைமைப்படுத்தக்கூடியதுமான சேவைகளைவழங்கக்கூடியதாக இருக்கும்

அதேவேளை, இலத்திரனியல் பணம் தொடர்பான சேவைகளில் சில குறிப்பிட்ட வரையறைகளும் காணப்படுகின்றன. அதாவது அனைத்துத்தரவுகளும் கணினி மயப்படுத்தப்பட்டிருப்பதனால் தொழினுட்பத் தடைகள், இரகசியஇலக்கத்தை மறந்துவிடல், ATM இயந்திரத்தினது பிழைகள் என்பன இடம் பெறுவதற்குரியசந்தர்ப்பங்கள் என்பன இங்கு கூடுதலாகக் காணப்படுகின்றன. எனவே, தொடர்பாடல்தொழினுட்ப முறைகளைப் பயன்படுத்துவதனால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்ப்பதற்கானவழிமுறைகளைத் தேடியறிய வேண்டிய தேவைப்பாடும் மேலெழுந்துள்ளது.

TAMIL STUDY MAX
Business & Accounting Studies for grade O/L student



TAMIL STUDY MAX

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்