Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

7 ஜூன், 2021

O/L மாணவர்களுக்கான வரலாறு வினா விடை தொகுப்பு-02 O/L history question with answer

 O/L மாணவர்களுக்கான வரலாறு வினா விடை  தொகுப்பு-02

10 கைத்தொழிற் புரட்சியினால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் எவை?

1 கைத்தொழில் உற்பத்தி அதிகரிப்பு, வர்த்தக நடவடிக்கை பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்தல் என்பன ஏற்பட்டன.

2; தன்னிறைவுப் பொருளாதாரம் மறைந்து சம்பளத்திற்கு  வேலை செய்யும் வகுப்பு  தோன்றியது.

3 விவசாயப் பொருளாதாரம் வைpடப்பட்டு ஏற்றுமதி, இறக்குமதி அடிப்படையிலான  வர்த்தகப் பொருளாதாரம் தோன்றியது.

4 உலகெங்கும் முதலாளித்துவ பொருளாதாரம் வேகமாகப் பரவியது.

5 முயற்சியாளர்கள் ஒன்றிணைந்து தனித்தனி கூட்டு வர்த்தகக் கம்பனிகளை அமைத்தனர்.

6 வங்கிகள் தோற்றம் பெற்றன.

               

11 கைத்தொழிற் புரட்சியினால் சமூகத்தில்; ஏற்பட்ட  மாற்றங்கள் எவை

                நன்மைகள்

1 ஏராளமான வேலை வாய்ப்புக்கள் கிடைத்தன.

2 மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தமை 

3 நகரங்கள் தோன்றியமை

4 தொழிலாளர் நரனோம்பல் முறை விருத்தியடைந்தமை

5 கொள்வனவுச் சக்தி அதிகரித்தது.

                தீமைகள்

1 நகரங்களில் சனநெருக்கடி காரணமாக அடிப்படை வசதிகள் மிகக்குறைந்த வேகத்தில் வளர்ச்சயடைந்தமை.

2 செல்வந்தர், ஏழை என்ற வகுப்பு ரீதியான சமுக அமைப்ப   தோன்றியது.

3 செல்வந்தர் ஆடம்பரமான வாழ்க்கை நடத்த உழைப்பவர்களின் வாழ்க்கை கவலைக்கிடமாக மாறியது.

4 தொழிற்சாலைகளுக்கு அருகிலேயே வாழ்ந்தமையால் சேரிப்புறங்களில் வாழ்ந்த அவர;களின் சுகாதார வசதிகள் சரியாக கிட்டவில்லை.

5 ஒரே அறையில் ஒரு குடும்பம் வாழ்ந்தமையால் மதுகாவனையின் பயன்பாடு, தவறான செயல்களில் ஈடுபடல் போன்ற கலாசார சீரழிவுகளும் ஏற்பட்டன.

6 சூழல் மாசடைதல் ஏற்பட்டது.

7 பெண்கள், சிறுவர்கள், முதியோர் பாதுகாப்பு இல்லாத தொழிற்சாலைகளில் வேலை செய்தனர்.

 

12 இலங்கையில் கைத்தொழில் புரட்சியின்  தாக்கங்கள் எவை

 

                 போக்குவரத்துத்துறை

1 1885இல் பெருந்தெருக்களை அமைக்கும் முறை தோன்றியது.

2 பாதைகளும் புகையிரதப் பாதைகளும் அமைக்கப்பட்டமை

3 பொருட்களை கொண்டு செல்வதற்காக பெருந்தெருக்களும், புகையிரத வீதிகளும் அமைக்கப்பட்டது.

4 ஆறுகளுக்கு குறுக்காக மரப்பாலங்கள் அமைப்பதற்குப் பதிலாக இரும்புப்பாலம் அமைக்கப்பட்டன

5 கொழும்புத் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டது

6 ஆளுநர்எட்வேட்பாண்ஸ் காலத்தில் கொழும்புகண்டி பிரதான வீதி அமைக்கப்பட்டது.

7 ஆளுநார் ஹென்றிவோட் அவர்கள் புகையிரத வீதிகளை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்

8 பின்வரும் புகையிரதப்பாதைகள் அமைக்கப்பட்ட ஆண்டுகள்

1863 – கண்டிகொழும்பு      

1871 – பேராதனைநாவலப்பிட்டி

1899 – பேராதனைபண்டாரவளை

 

 

 தொடர்பாடல் துறை

1 1815இல் கொழும்பு, காலி, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அரசாங்க தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

2 ஆசியாவில் குதிரை வண்டிகளைப் பயன்படுத்தி தபால் சேவை  இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.

3 1857இல் தபால் முத்திரை வெளியிடப்பட்டது.

4 1858இல் தந்தி மூலம் செய்தி பரிமாறும் முறை ஆரம்பிக்கப்பட்டது.

 

 பெருந்தோட்டத்துறை

1 1804இல் பிரெட்ரிக்நோத்தினால் கோப்பி விதைகளைப் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.

2 தேயிலைக் கொழுந்தை உலர;த்துதல் தொடக்கம் ஏற்றுமதிக்காகத் தரப்படுத்தல் வரை இயந்திர சாதனங்களால் மேற்கொள்ளப்பட்டமை.

3 இறப்பரை ஏற்றுமதிக்கு தயார்படுத்துவதற்காக இயந்திர சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன.



இவ் பக்கம் பற்றிய உங்கள் கருத்துக்களை மற்றும் உங்களுக்கு தேவயான விடையங்களை கருத்திடுக

O/L மாணவர்களுக்கான வரலாறு வினா விடை  தொகுப்பு-02
 O/L history question with answer 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்