Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

23 மே, 2021

இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் ஒல்லாந்தர் ஆட்சியின் கீழ் வருதல் முக்கிய குறிப்புகள் grade 9

 

இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் ஒல்லாந்தர் ஆட்சியின் கீழ் வருதல் முக்கிய குறிப்புகள் 

 

கரையோரப் பிரதேசங்களில் ஒல்லாந்தரின் ஆட்சி நிறுவப்பட்டன

 

· ஒல்லாந்தர் கீழைத் தேசங்களுக்கு வருதல் (1595 ஆம் ஆண்டு தொடக்கம்ஒல்லாந்தர் ஆசியாவுக்கு வருகை தருதல், VOC சங்கத்தை நிறுவுதல், ஆசியாவில் ஒல்லாந்தரது அதிகாரத்தைக் கட்டியெழுப்புதல்

· கண்டி இராசதானியின் மன்னர்கள் ஒல்லாந்தரின் உதவியை நாடுதல்(1 ஆம் விமலதர்மசூரியனின் காலத்தில் ஒல்லாந்தத் தூதுவர்கள் கண்டி இராசதானிக்கு வருதல், செனரத் மன்னன் ஒல்லாந்தரின் உதவியைப் பெற்றுக் கொள்ள முயற்சித்தல்)

· 1638 ஆம் ஆண்டு இரண்டாம் இராஜசிங்க மன்னனுக்கும் ஒல்லாந்தருக்கும்இடையிலான உடன்படிக்கை ஏற்படுத்தப்படல் (இரண்டாம் இராஜசிங்க மன்னனுக்கும் ஒல்லாந்தருக்கும் இடையிலான தொடர்பு, 1638 ஆம் ஆண்டு உடனபடிக்கை,

உடன்படிக்கையில் அடங்கிய முக்கியமான விடயங்கள்)

· போர்த்துக்கேயரை இந்நாட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள்(திருகோணமலை, நீர்கொழும்பு, காலி, களுத்துறை, கொழும்பு ஆகிய கோட்டைகளைக் கைப்பற்றுதல், போர்த்துக்கேயர் தோல்வி அடைதல்)

· கரையோரப் பிரதேசங்களில் ஒல்லாந்தரது ஆட்சி நிறுவப்படல்(கைப்பற்றிய கோட்டைகளை ஒல்லாந்தர் தம் வசம் வைத்துக் கொள்ளல்,

மன்னனுக்கும் ஒல்லாந்தருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்படல், ஒல்லாந்தர் கரையோரப் பிரதேசங்களில் ஆட்சியை நிறுவுதல்)

 

ஒல்லாந்தருக்கும் கண்டி இராசதானிக்கும் இடையிலான தொடர்புகள்

 

· இரண்டாம் இராஜ சிங்க மன்னனுக்கும் ஒல்லாந்தருக்கும் இடையிலான தொடர்பு (மன்னனுக்கும் ஒல்லாந்தருக்கும் இடையே முரண்பாடு ஏற்படல், மன்னன் கண்டி இராசதானியின் அதிகாரத்தைப் பரவலாக்கல்)

· கண்டி இராசதானியுடனான தூதுத் தொடர்புகள் (தூதுப் பயணங்கள், கடிதப் போக்குவரத்து, பரிசில்கள் பரிமாற்றம்)

· சமாதானக் கொள்கையும் மோதல்களைத் தவிர்த்தலும் (இரண்டாம் விமலதர்மசூரிய மன்னனின் சமாதானக் கொள்கை, கண்டி இராசதானி மன்னரின் சமயப் பண்பாட்டு செயற்பாடுகளுக்கு ஒல்லாந்தர் ஒத்துழைப்பு அளித்தல்)

 

 

ஒல்லாந்தர் கண்டி இராசதானியை ஆக்கிரமித்தல் (18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கண்டி மன்னனுக்கும் ஒல்லாந்தருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு, கீர்த்தி ஸ்ரீ இராஜ சிங்கனது காலத்தில் ஒல்லாந்தர் கண்டி இராசதானி மீது ஆக்கிரமிப்பை மேற்கொள்ளல்)


விரிவான விளக்கத்தை பின்னர் கற்றுக் கொள்வோம்

இலங்கையின் கரையோரப் பிரதேசங்கள் ஒல்லாந்தர் ஆட்சியின் கீழ் வருதல் முக்கிய குறிப்புகள் grade 9


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்