தகவல்முறைமை விருத்திச் செயன்முறை
தகவல் முறைமை விருத்திச் செயன்முறை
முறைமை:- ஓர் நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவு செய்வதற்காக ஒன்றோடொன்று இணைந்த கூறுகளின் தொகுதியே முறைமை ஆகும். ஒரு முறைமையானது மேலும் பல கூறுகளாக பிhpக்கப்படின் அவை உபமுறைமை எனப்படும்.
உதாரணமாக
மனித உடலை முறைமையாக கருதினால் குருதிச்சுற்றோட்டத்தொகுதி , சமிபாட்டுத் தொகுதி , நரம்பியல் தொகுதி ,சுவாசத் தொகுதி என்பன உபமுறைமைகளாகும்.
முறைமை
ஒன்றின் அடிப்படைக் கூறுகள் உள்ளீடு, செயற்பாடு, வெளியீடு என்பனவாகும்.
இன்றைய காலத்தில் மிகப் பொpய வியாபார நிலையங்கள் மற்றும் சேவை நிலையங்கள் தகவல் முறைமையை கையாளுகின்றன. இது இரு முறைகளிலிருக்கும்.
1. மானிடத்
தகவல் முறைமை
2. கணினித்
தகவல் முறைமை
மானிடத் தகவல் முறைமை எனின் நிறுவனத்தில் நடைபெறுகின்ற செயற்பாடுகள் யாவும் மனிதர்களின் கையால் மேற்கொள்வதுடன் தரவுகளும் தகவல்களும் கடதாசியில் எழுதி கோவைகளாக உறைகளிலும், காப்பு பெட்டகங்களிலும் வைக்கப்படும்.
இம்
முறைமையில்
1. தகவல்களை
தேடிப் பெற்றுக் கொள்வதில் சிரமம்
2. தகவல்களை
மெருகூட்டுவதில் சிரமம்
3. மனித
மூளையானது மெதுவாக செயற்படும் தன்மை உடையது, கணித ;தலின்போது
பிழைகள்
ஏற்படலாம் போன்ற குறைபாடுகள் காணப்படுகின்றன.
கணினித் தகவல் முறைமை எனின் இங்கு கணினிகளைப் பயன்படுத்தி செயற்பாடுகள் நிகழும். இங்கு தகவல்கள் மிகத் திருத்தமானவையாகவும் , விரைவாகவும் , நோர்த்தியானதாகவும் பெற்றுக் கொள்ளலாம். வினைத்திறன் கூடிய செயன்முறையாகும்.
இக்
கணினி முறைமையின் கூறுகளாக வன்பொருள், மென்பொருள் , பயனர் , செயற்பாடுகள், தரவும் தகவலும் , செய்நிரலாள என்பன உள்ளடக்கப்படும்.
முறைமை அபிவிருத்தி வாழ்க்கை வட்டம் System Development Life Cycle
1. தேவைகளை
இனங்காணல்
2. தீர்வினை
வடிவமைத்தல்
3. தீர்வினை
குறிமுறைப்படுத்தல்
4. தீர்வினை
சோதித்துப் பார்த்தலும் தவறு நீக்கலும்
5. தீர்வினை
நடைமுறபப்படுத்தல்
6. முறைமையைப்
பராமரித்தல
![]() |
தகவல் முறைமை விருத்திச் செயன்முறை O/l ICT Notes in tamil |
![]() |
TAMIL STUDY MAX |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக