Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

17 ஜூன், 2021

A/L மாணவர்களுக்கான 2014 ஆண்டு கடந்த கால வினா விடை விடைகள் வரலாறு பாகம்-1

 A/L மாணவர்களுக்கான 2014 ஆண்டு கடந்த கால வினா விடை விடைகள் 

வரலாறு பாகம்-1

2. கி.பி. முதலாம் நூற்றாண்டு வரை இலங்கையில் பரவலாக ஏற்பட்ட ஆதிக் குடியிருப்புகள் புவியியல் காரணிகள் வயமானவை"

i.ஆதிக் குடியிருப்புகளை ஏற்படுத்திய இரண்டு சிற்றரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

உபதிஸ்ஸ, உதேனி. அனுராத, இராம. தீகாயு, ரோகண.விஜித்த

 

 ii.ஆதிக் குடியிருப்புகள் பரவிய இரண்டு ஆற்றுப் பள்ளத்தாக்குகளைக் குறிப்பிடுக.

கதம்பநதி (மல்வத்து ஓயா), மகாநதி கோண நதி(கலாஓயா). கணதரா ஓயா. கம்பீர நதி

 

 

iii ஆதிக் குடியிருப்புகள் ஏற்பட்டமை பற்றி ஒரு சுருக்கமான விளக்கவுரை எழுதுக.

வம்சக் கதைகளின் தகவல்களுக்கு அமைய இலங்கையின் ஆரம்பக் குடியேற்றங்கள் நிறுவப்பட்டமையும், அவற்றின் பரம்பலும் கி.மு.6ஆம் நூற்றாண்டு எனப்படுகின்றது.

இந்தியாவிலிருந்து இடையிடையே வந்த குழுக்களாலும் இந்நாட்டில் குடியேற்றங்கள் அமைக்கப் பட்டன எனக் கூறப்படுகின்றது.

இலங்கையின் வடமத்திய, கிழக்கு, வடமேற்குப் பகுதிகளில் நதிகளை அண்மித்த இடங்களில் முதல் குடியேற்றங்கள் அமைக்கப்பட்ட என்றும், குடியேற்றங்களை அமைத்தவர்களின் பெயராலேயே அக்குடியேற்றங்கள் அறிமுகமாயின எனவும் வம்சக் கதைகளில் கூறப்படுகிறது.

-டு அனுராதகம, விஜித்தகாம, தீக்காம, ரோகணகாம், இராமகோண

கி.பி. முதலாம் நூற்றாண்டு வரை இடையிடையே இந்தியாவிலிருந்து இங்கு வந்து குடியேறிய பின்வரும் குழுக்கள்:

  • விஜயனுடன் வந்த குழுவினர்
  • மதுரையிலிருந்து வந்த இளவரசியுடன் வந்த குழுவினர்.
  • பண்டுவாசுதேவனுடன் வந்த குழுவினர்
  • பத்தகச்சானாவுடன் வந்த குழுவினர்
  • பத்தகச்சாவின் சகோதரர்களுடன் வந்த குழுவினர்.
  • மகிந்தனின் வருகை
  • பிக்குணி சங்கமித்தாவுடன் வந்த குழுவினர்.
  • தென்னிந்தியர்களான சேனன், குத்திகன், எல்லாளன் ஆகியோருடன் வந்த படையெடுப்பாளர்.

 

iv) ஆதிக் குடியிருப்புகள் பரவியமையில் புவியியற் காரணிகள் எவ்வகையிலே செல்வாக்குப் படுத்தின என்பதைப் பரிசீலனை செய்க.

விவசாயம், வர்த்தகம் என்பனவற்றை முதன்மையாகக் கொண்டு நிறுவப்பட்ட ஆரம்பக் குடியிருப்பு களுக்கும் அவற்றின் பரம்பலுக்கும் இலங்கையின் புவியியல் அமைப்பு முக்கிய இடம் பெறுகின்றது.

ஆரம்பக் குடியிருப்புகளும், அவற்றின் பரம்பலும் தொடர்பான புவியியற் காரணிகள் பின்வருமாறு:

  • ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக நிலைத்திருப்பதும் பல திசைகளை நோக்கிப் பாய்ந்து செல்லும் நதிகளும் அமைந்திருந்தமை.
  • அகன்ற சமவெளிகளுடன் கூடிய ஆற்று வடிநிலங்கள் காணப்பட்டமை.
  • வளமான மண் இருந்தமை.
  • பொருத்தமான காலநிலை நிலவியமை.
  • பல்லுருவக் கடற்கரைகளையும் துறைமுகங்களையும் கொண்டிருந்தமை.
  • இந்தியாவுக்கு அருகில் இலங்கை அமைந்திருந்தமை.
  • வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்கள் காணப்பட்டமை.

 உதாரணங்களுடன் முன்வைத்தல் 

 

 


 

3.  "காவன்தீசனின் தந்திரமான அரசியல் உபாயங்கள் துட்டகாமினியினுடைய வெற்றிகளுக்கு அடிப் படையாகின"இக்கூற்றினை நுணுக்கமாகப் பரிசீலனை செய்க.

காவன்தீச மன்னனைப் பற்றியும் துட்டகைமுனு பற்றியும் மகாவம்சத்தில் குறிப்பிடத்தக்க அளவு தகவல்கள் உள்ளன. எனினும் காவன்தீச மன்னனது வாழ்க்கையையும், துட்டகைமுனுவின் வாழ்க்கை அவனது போர் நடவடிக்கைகள் என்பவற்றையும் நுணுக்கமாகப் பரிசீலனை செய்யும்போது காவன்தீச மன்னனது பங்களிப்பை மதிப்பீடு (துட்டகைமுனுவுக்கு அவன் வழங்கிய ஒத்துழைப்பு) செய்வதற்கு ஏனைய இலக்கிய மூலாதாரங்களில் உள்ள தகவல்களையும் பெற வேண்டியுள்ளது.

இதன்படி துட்டகைமுனுவின் யுத்த நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்குக் காவன்தீசனின் தந்திரமான அரசியல் உபாயங்கள் பற்றி மூலாதாரங்கள் மூலம் அறியக் கூடியதாக உள்ளன. அவை வருமாறு;

  • விவாகத் தொடர்புகள் மூலம் தென்பகுதி ஆட்சியாளர்களுடன் தொடர்பைப் பலப்படுத்தியமை (-டு களளி, கிரி இராச்சியம்)
  • சமயத் தொடர்புகள் மூலம் கிழக்குப் பகுதியில் சேரு, லோண, சோம ஆகிய நிர்வாகப் பிரிவுகளின் கவனத்தைத் தன்பால் ஈர்த்தமை.
  • பௌத்த பிக்குகளின் அறிவுரைகளைத் தன் புதல்வர்களுக்குப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்ததுடன், சகோதரர்களிடையே ஒற்றுமை நிலவும் பொருட்டு அவர்களின் வாக்குறுதியைப் பெற்றமை.
  • தெற்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள சமய நிறுவனங்களை முன்னேற்றியதன் மூலம் பௌத்த பிக்குகளினதும், மக்களினதும் நன்மதிப்பைப் பெற்றமை.
  • பத்து மாமல்லர்களைக் கொண்ட பலம் வாய்ந்த படை ஒன்றை ஒழுங்கமைத்தமை.
  • தேவையான ஆயுதங்களை உற்பத்தி செய்ததுடன் அவற்றை சேகரித்தமை.
  • சகோதரர் இருவரிடையே ஏற்படும் சண்டைகளில் நடுநிலையாகச் செயற்படுவதாகப் படையினரிடம் வாக்குறுதி கோரியமை.
  • எல்லாளனுடன் போர் செய்ய வேண்டுமென்ற துட்டகைமுனுவின் எண்ணத்தை அறிவுரை மூலம் கட்டுப்படுத்தல்.
  • சத்தாதீசனை தீசவாவிப் பிரதேசத்திற்கு அனுப்பி அப்பிரதேசத்தை வளமுறச் செய்தமை.
  • தீகாபயனை அனுப்பி கச்சதித்த போன்ற பாதுகாப்பு இடங்களின் பாதுகாப்பை வலுப்படுத்தியமை.

 

 A/L history pass paper with answer    Tamil study max

 

4. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதிவரை நீர்ப்பசன முறை வளர்ச்சியடைந்த விதத்தை மேல்வரும் தலைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு பரிசீலனை செய்க.

i) குளங்கள், கால்வாய்கள் என்பவற்றைக் கட்டுவதற்கு அரசர் மேற்கொண்ட நடவடிக்கைகள்

இந்நாட்டில் ஆரம்பக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்ட பின்னர் பிரதான வாழ்வாதாரமாக இருந்த விவசாயத்தை முன்னெடுத்துச் செல்வதில் நீர்ப்பாசனம் முக்கிய இடம் வகித்தது.

கிராமியக் குளங்கள், சிறு குளங்கள் என்பன ஆரம்பமான காலம் முதற்கொண்டே நீர்ப்பாசனம் தொடர்பாக ஆட்சியாளர்கள் அனுசரணை வழங்கியதுடன், அதனைத் தமது முக்கிய கடமை யாகவும் எண்ணிச் செயற்பட்டமை. (காமினி வாவி, அபய வாவி, ஜய வாவி)

* அதிகரித்து வந்த சனத்தொகையின் தேவைக்கு ஏற்ப ஆறுகள், வாய்க்கால்களை மறித்து அணைகட்டி கிராமியக் குளங்கள், சிறு குளங்கள், பாரிய குளங்கள் என்பவற்றை அமைத்துப் பாசனப் பணியை முன்னெடுத்துச் சென்றமை.

 

பாரிய குளங்கள் என்பவற்றை அமைத்துப் பாசனப் பணியை முன்னெடுத்துச் சென்றமை.

கி.மு 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 6ஆம் நூற்றாண்டு வரை நீர்ப்பாசனப் பணிக்குப் பெரும் பங்களிப்புச் செய்தோர் பின்வருவோராவர்.

  • தேவநம்பிய தீசன் -  தீச வாவி
  • வசபன்      -   மகாவிலச்சிய, நொச்சிப்பொத்தான, ஹிரிகடுன்ன
  • மகாசேனன்  -   மின்னேரியா, ஹுருளு வாவி, கவுடுலு வாவி
  • 1ஆம் உபதீசன்  -  - தோப்பா வாவி
  • தாதுசேனன்  -  கலாவாவி, பலலு வாவி, மானா மடு
  •  
  • 2ஆம் மொகல்லானன்- நாச்சதுவ, பதவியா
  • இரண்டாம் அக்கிரபோதி (அக்போ) - மினிப்பே அணை

 

 

நீர்ப்பாசனம் தொடர்பாக இருந்த அமைப்புகள் அவற்றில் இருந்து பெறப்பட்ட பொருளாதார நன்மைகள்.

 

 

ii) நீர்ப்பாசனத் தொழினுட்பத்திறன்

 

நீர்ப்பாசனத் தொழினுட்பத்திறன்

பல திசைகளிலும் பாய்ந்து சென்ற ஆற்றுநீரை ஒன்று சேர்த்து நீப்பாசனத் தொகுதியை அமைத்தமை.

நிலங்களின் அமைப்பை நன்கு அறிந்திருந்தமை.

* செயற்கைக் கால்வாய்களை அமைத்துக் குளங்களை இணைத்தமை, (அலகரக் கால்வாய், யோதக்கால்வாய் என்ற ஐய கங்கை)

ஆற்றுக்குக் குறுக்காக அணை கட்டுதல் (அல்கர, மினிப்பே, மகாகல்கடவ

குளக்கட்டு, மடைக்கதவு, அலைதாங்கி, கலிங்கற் தொட்டி போன்றவற்றை நிர்மாணித்தமை மூலம்  தொழில்நுட்ப அறிவு வெளிப்படுகின்றன.

 

 

 

 

 

5. முதலாம் விஜயபாகு பொலன்னறுவைக் காலத்துப் பெருமன்னள் ஒருவனாவான்"முதலாம் விஜய பாகுவின் சாதனைகளையும் பெருஞ்சிறப்பினையும் மேல்வரும் அம்சங்கள் தொடர்பாகப் பரிசிலனை செய்க.

 

பலவித பிரச்சினைகள், சவால்களின் மத்தியில் உருகுணையின் ஆட்சியை உறுதி செய்தமை,

சோழர்களுக்கெதிராகப் படை திரட்டி உபாயங்களைக் கையாண்டு சோழரை வெற்றி கொள்ளல், .

நாட்டை ஒன்றிணைத்தல்.

பொலன்னறுவையைத் தலைநகராகக் கொண்டு, முன்னைய மரபுகளுக்கு அமைய ஆட்சியை முன்னெடுத்துச் செல்லல்.

* உபராஜா, ஆதிபாத போன்ற பதவிகளை ஏற்படுத்தி பிரதேச நிர்வாகத்தை வலிமையுறச் செய்தல்.

வீழ்ச்சியுற்றிருந்த நீர்ப்பாசனத் துறையை முன்னேற்றுதல்

விவசாயத்தை மீண்டும் கட்டியெழுப்புதல்.

* பௌத்த சாசனத்தின் எழுச்சிக்காகச் செயற்படல்.

·         பர்மாவிலிருந்து உம்சம்பதா பிக்குகளை வரவழைத்தல், திரிபீடக நூலைக் கொண்டு வருதல்.

·         சமய வழிபாட்டிடங்களைப் புனர்நிர்மாணம் செய்தமை.

·         வெல்கம் விகாரை, ஜம்புகோள விகாரை, தம்புளை விகாரை, கிரிகண்ட விகாரை என்பன.

·          சிவனொளிபாத மலைக்குச் செல்லும் யாத்திரிகர்களுக்கான வசதிகளைச் செய்து கொடுத்தல்.

சைவ சமயத்திற்கும் அனுசரணை வழங்குதல்

 

 

i)அந்நியராட்சியிலிருந்து நாட்டினை மீட்டு அதனை ஒன்றிணைத்தமை,

ii) நீர்ப்பாசனத் திட்டங்களின் புரைமைப்பு,

 iii) பௌத்த சமய மறுமலர்ச்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்