Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

17 ஜூன், 2021

A/L மாணவர்களுக்கான 2014 ஆண்டு கடந்த கால வினா விடை விடைகள் வரலாறு பாகம்-02

 

A/L மாணவர்களுக்கான 2014 ஆண்டு கடந்த கால வினா விடை விடைகள் வரலாறு பாகம்-02

6. மேல்வருவனவற்றுள் எவையேனும் இரண்டின் வரலாற்று முக்கியத்துவம் பற்றிச் சுருக்கமான குறிப்புகள் எழுதுக.

i) தம்பதெனிய கால இலக்கியம்

 

*சிங்கள், பாளி, சமஸ்கிருத மொழிகளின் வளர்ச்சியும், அந்த மொழிகளில் நூல்கள் எழுதப்பட்டமையும்.

மூன்றாம் விஜயபாகுவின் காலத்தில் (கி.பி. 1232-1236) தம்பதெனிய யுகம் ஆரம்பமாகியமை

* மூன்றாம் விஜயபாகு, இரண்டாம் பராக்கிரமபாகு ஆகிய மன்னர்களின் காலத்தில் இலக்கிய வளர்ச்சிக்கு அரச அனுசரணை கிடைத்தமை;

அக்காலத்தில் இருந்த கல்விமான்களுக்கும், நூல்களும்

  • சங்கரகபித்த தேரர்
  • திம்புலாகல வனவாசி மேதங்கர தேரர்
  • வாச்சிஸ்சர தேரர் (சச்சசங்கேப்ப சிங்கள சன்னய, விசுத்திமார்க்க சங்கேப்ப சிங்கள சன்னய)
  •  இரண்டாம் பராக்கிரமபாகு மன்னன் (விசுத்திமார்க்க சன்னிய, வினய சன்னய கவ்சிலுமின)
  • தர்மசேன தேரர் (சத்தாமரத்னாவலிய)
  • மயுதபாத பிரிவெனாவின் தலைவர் புத்தபுத்ர தேரர் (பூஜாவலிய, யோகார்ணவய)
  • பஞ்சமூல பிரிவெனாதிபதி (பெசஜ்ஜ மஞ்சுசா)
  • வெதகே தேரர் (ரசவாஹினி, சமந்தகூட விணனாவ)
  • அநோமதஸ்ஸி தேரரின் மாணவன் (ஹத்தவனகல்ல விஹாரவங்சய)
  • அநோமதஸ்ஸி தேரர் (தைவத்ஞகாமதெ
  •  வனரத்ன மேதங்கர தேரர் (பயோகசித்தி)
  • மேதங்கர சரிதம்)
  • வெதகே தேரர் (சிதத் சங்கராவ)

ஓட்டுச் சுவடி, தம்பதெனிய கதிகாவத்த

தம்பதெனிய யுகந்தில் பாளி இலக்கிய முன்னேற்றத்தின் பொருட்டு 2ஆம் பராக்கிரமபாகு மன்னன் சோழ நாட்டிலிருந்து திரிபிடகப் பிக்குமாரை வரவழைத்தமை,

 

 

ii) யாழ்ப்பாண இராச்சியம்

 

கி.பி. 14ஆம் நூற்றாண்டு யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இராசதானி ஒன்று தோற்றம் பெற்றமை.

யாழ்ப்பாண இராச்சியம் பற்றிக் கூறப்பட்ட நூல்களில் யாழ்ப்பாண வைபவமாலை, செகராச சேகரமாலை, கைலாசமாலை, இராஜவலிய, நிக்காயசங்ரஹய, செல்லிஹினி சந்தேசய போன்றவை முக்கியமானவை.

* யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தவர்கள் ஆரியச் சக்கரவர்த்திகளாவர்.

ஆரியச் சக்கரவர்த்திகள் பிராமணர்கள். அவர்கள் பாண்டிய அரசின் தென்பகுதியான வெச்சிருக்கை நாடு எனும் பிரதேச அதிபதி குடும்பத்திலிருந்து வந்தவர்களாவர்.

12 ஆரியச் சக்கரவர்த்திகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன.

 நல்லூரை நிர்வாக மத்திய நிலையமாகக் கொண்டு யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சி செய்யத்தொடங்கிய ஜெயவீரசிங்கையாரியன் ஆரியச் சக்கரவர்த்திகளில் முதல் ஆட்சியாளனாவான்

 கி.பி. 1344ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த இபின் பட்டுடா ஆரியச் சக்கரவர்த்திகளை இலங்கையின் சுல்தான் எனக் குறிப்பிடுகின்றார்.

மூன்றாம் விக்கிரமபாகுவின் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1357-1374) ஆரியச் சக்கரவர்த்தி கம்பளை  இராசதானியில் சில இடங் களைத் தாக்கி வரி அறவிட்டுள்ளமை. இப் பிரதேசங்கள் பின்னர் அழகேஸ்வர பிரபு ராஜாவால் மீட்கப்பட்டமை,

6ஆம் பராக்கிரமபாகு மன்னனின் ஆட்சிக் காலத்தில் சபுமல் குமாரனால் ஆரியச் சக்கரவர்த்திகள் தோற்கடிக்கப்படல்.

போர்த்துக்கேயரால் கி.பி. 1619 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இராச்சியம் கைப்பற்றப்பட்டது.

 

iii) ஆறாம் பராக்கிரமபாகு

இம் மன்னனைப் பற்றி இராஜாவலிய, காவியசேகர, பெரகும்பா சிரித. சந்தேச காவியம் போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டை இராச்சியத்தின் முதல் ஆட்சியாளனும், இறுதியாக இலங்கையை ஒன்றிணைத்த ஆட்சியாளனுமாவான்.

கி.பி. 1412ஆம் ஆண்டு றைகமையின் அரசனாகிப் பின்னர் 1415இல் ஜயவர்த்தனபுரக் கோட்டையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தமை.

* பிக்கு ஒருவரின் உதவியால் அதிகாரத்தை உறுதி செய்து கொண்டமை.

சபுமல் குமாரனின் தலைமையில் படையொன்றை அனுப்பி யாழ்ப்பாண இராச்சியத்தை வெற்றி கொள்ளல்.

கண்டி இராச்சியத்தில் கலகம் விளைவித்த ஜோதிய சிடானவின் சுலகத்தை முறியடித்தல்,

* தென்னிந்திய விஜயநகரப் பேரரசுடன் போர் செய்தல் அதிவீரராம பட்டணத்தை ஆக்கிரமித்தல்,

இந்நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தல்.

* சமய, கல்வி முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு செயற்படஸ் பிரிவெனாக்களின் நிலையை உயர்த்துதல், இலக்கிய வளர்ச்சிக்கு உதவுதைல், எல்லாச் சமய நிறுவனங்களுக்கும் ஆதரவளித்தல்.

 


 

iv) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப் பகுதியில் ஏற்பட்ட பண்பாட்டு மறுமலர்ச்சி

 

கிறிஸ்தவ மறை பரப்பாளர்களால் (மிஷனரிமார்) மேற்கொள்ளப்பட்ட சமயப் பிரசாரம், பிரித்தானிய அரசின் கொள்கை என்பனவற்றால் பௌத்த, இந்து, இஸ்ணம் மதங்கள் எதிர்நோக்க வேண்டியிருந்தது. சவால்களுக்கு எதிராகச் செயற்படும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்ட மறுமலர்ச்சி நடவடிக்கையாக அமைந்தமை,

* பௌத்த மறுமலர்ச்சி

* கொகர்லி போன்ற போதகர்கள் பௌத்த சமயத்தை விமர்சித்தமை, பௌத்த தலைவர்கள் அதற்கு எதிராக செயற்பட முன்வந்தமை, மீகெட்டுவத்த குணானந்த தேரரின் பாணந்துறை விவாதம்,

இந்த விவாதம் (பாணந்துறை விவாதம்) பற்றிய விடயம் அமெரிக்காவில் பிரசித்தியடைந்ததால் பரமவிஞ்ஞார்த்தவாதிகளின் கவனம் இலங்கை மீது திரும்பியது. ஒல்கொட், பிளேவெத்க் அம்மையார் ஆகியோர் இந்நாட்டிற்கு வருகை தந்தனர். இங்கு பரம விஞ்ஞார்த்த சபை அமைக்கப்பட்டமையும், பௌத்த கல்வியின் வளர்ச்சிக்குக் கைகொடுக்க அச்சபை முன்வந்தமையும், (ஆனந்தாக் சுல்லூரி, மியுசியஸ் கல்லூரி ஆகிய பௌத்த பாடமாலைகள் நிறுவப்பட்டமை)

பிரிவெனாக் கல்வியில் மறுமலர்ச்சி ஏற்படல். 1873ஆம் ஆண்டு மாளிகாகந்த வித்யோதய பிரிவெனாவும், 1875ஆம் ஆண்டு பெகலியகொட       வித்தியாலங்கார பிரிவெனாவும் நிறுவப்பட்டமை. இவை சிறந்த கல்விமான்களை உருவாக்கும் நிறுவனங்களாக விளங்கியமை,

பௌத்தர்கள் சில உரிமைகளைப் பெற்றுக் கொள்ளல்.

பௌத்த கொடி, வெசாக் விடுமுறை என்பன.

பௌத்த நூல்கள். மடங்கள் வெளியிடும் பொருட்டு அச்சகசாலைகள் நிறுவப்படல். அதன் வழியாகப் பௌத்த சமயம் போதிக்கப்பட்டமை. பிரித்தானிய அரசின் சில கொள்கைகளை விமர்சித்தல்,

புதிய விகாரைகள் நிறுவப்படல், தூபராம, ருவன்வெலிசாய போன்ற வரலாற்றுப் பெருமை மிக்க பௌத்த நினைவுச் சின்னங்கள் புனர்நிர்மாணம் செய்யப்படல்.

இந்து சமய மறுமலர்ச்சி

ஆறுமுக நாவலர் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

இவர் 1872ஆம் ஆண்டு சைவப் பிரகாச வித்தியாலயத்தை நிறுவி சைவ சமயப் பிள்ளைகள் ஆங்கிலக் கல்வி கற்க வழிவகுத்தார்.

தமிழ்மொழி, இலக்கியம், சமஸ்கிருதம் என்பன கற்பதை ஊக்கப்படுத்துவதில் முன்னின்றார்.

வண்ணார்பண்ணையில் அச்சுக்கூடம் ஒன்றை அமைத்து சைவசமய மறுமலர்ச்சிக்கு ஏற்ற நூல்கள், மடல்கள் என்பவற்றை வெளியிட்டார்.

சமயம் தொடர்பான புதிய நூல்களை எழுதியமை.

தான் சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பெற்றிருந்த தேர்ச்சியை சமய மறுமலர்ச்சிச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தியமை.

 

இஸ்லாமிய மறுமலர்ச்சி

* அறிஞர் சிந்திலெப்பை முன்னோடியாகத் திகழ்ந்தார்.

இஸ்லாமியக் கல்வியை எழுச்சியுறச் செய்தல், 1884ஆம் ஆண்டு சாஹிறாக கல்லூரியையும், 1893ஆம் ஆண்டு கண்டியில் முஸ்லீம் மகளிர் கல்லூரியையும் நிறுவியமை.

அராபி பாஷாவிடமிருந்து மறுமலர்ச்சி செயற்பாட்டுக்குப் பெரும் ஒத்துழைப்புக் கிடைத்தமை.

முஸ்லிம் நேசன் என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தமை

 

 

v) இலங்கை தேசிய காங்கிரஸ்

 

* 1915 ஆம் ஆண்டு நிகழ்ந்த சிங்கள முஸ்லிம் கலவரத்தை அடக்குவதற்குப் பிரித்தானிய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தேசியத் தலைவர்களின் கண்டனத்துக்கு உள்ளாகியமை

இலங்கையருக்கென பலம் வாய்ந்த அரசியல் இயக்கம் ஒன்று அவசியம் என்பது தெளிவாக உணரப்பட்டமை.

* அக்காலத்தில் இந்தியாவில் நன்கு செயற்பட்டுக் கொண்டிருந்த இந்திய தேசிய சபையுடனான தொடர்பு.

* 1919ஆம் ஆண்டு பொன்னம்பலம் அருணாச்சலம் அவர்களின் தலைமையில் இலங்கை தேசிய காங்கிரஸ் நிறுவப்படல்,

பல்வேறு இனத்தைச் சேர்ந்த இலங்கைத் தலைவர்கள் இதில் செயற்படல் தலைமைத்துவத்தைப் பெரும்பாலும் ஆங்கிலம் கற்ற இலங்கையர் பெறுதல்.

** இச்சங்கத்தின் கட்டமைப்பு பெரும்பாலும் இந்திய தேசிய சபையினதை ஒத்ததாக இருந்தமை.

* அரசியல் சீர்திருத்தத்தைப் பெறும் பொருட்டு தேசிய இயக்கமாக செயற்படல். அந்த நோக்கம் ஓரளவு வெற்றி பெறல்.

ஆசன ஒதுக்கீடு தொடர்பாக சிங்கள, தமிழ்த் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டமை.

தமிழ்த் தலைவர்கள் தேசிய காங்கிரஸிலிருந்து விலகுதல்.

* தேசியத் தலைவர்கள் தேசிய காங்கிரஸின் செயற்பாடுகளின் மூலம் அரசியல் நடவடிக்கை தொடர்பாக அனுபவத்தையும் பயிற்சியையும் பெற்றமை.

 

 

vi) 1956ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தல்

* 1956ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5, 7, 10 ஆந் திகதிகளில் தேர்தல் நடைபெற்றமை.

* தேர்தல் பிரசாரத்தில் செயற்பாடுகளில் காணப்பட்டவைகள்.

  • சிங்கள மொழி மாத்திரம் அரச கரும மொழியாக ஏற்றுக்கொள்ளல்,
  •  1947ஆம் ஆண்டு தொடக்கம் ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை விமர்சித்தல்,
  • பிக்குவால் உருவாக்கப்பட்ட புத்தசாசன ஆணைக்குழுவால் புத்த சமயம் தொடர்பாக அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகள் பற்றிக் கூறப்படல்.
  • சமுதாயத்தில் பல்வேறு பிரிவினரும் எதிர்நோக்கிய பிரச்சினைகள் மத்தியில் சங்கத்தினர்,வைத்தியர், ஆசிரியர், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளடங்கிய பிரிவினர் அணிதிரண்டமை.
  •  இந்த அணியினர் குடியேற்ற நாட்டு அரசியலமைப்பு முறையிலான அரசியலமைப்புக்குப் பதிலாக தேசியத்தை மதிக்கும் புதிய அரசியல் அமைப்பைப் பெறும் நோக்கில் செயற்பட்டமை,
  • இந்த அணியினர் திரு S. W.R.D. பண்டாரநாயக்காவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து கொண்டமை.
  • இடதுசாரிக் கட்சிகள் முதலான பல்வேறு குருக்கள் அக்கட்சியுடன் இணைந்து மக்கள் ஐக்கிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி, அதன் கீழ் தேர்தலுக்கு முன் வந்தமை.
  • ஐக்கிய தேசியக் கட்சி இத்தேர்தலில் 8 ஆசனங்களை மாத்திரமே பெற்றது. மக்கள் ஐக்கிய முன்னணிக்கு அமோக வெற்றி கிடைத்தமை.
  •  மக்கள் ஐக்கிய முன்னணியின் வெற்றி இந்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகும்.

 

 

 

7.

i)     1594-1638 ஆகிய காலப்பகுதியில் கண்டி இராச்சியத்தின் மீது     போர்த்துக்கேயர் மேற்கொண்ட படையெடுப்புக்களை விபரிக்குக.

16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து போர்த்துக்கேயர் கண்டி இராச்சியத்தைக் கைப்பற்றும் பொருட்டு இடையிடையே ஆக்கிரமிப்பினை மேற்கொண்டனர். அவற்றில் முக்கியமானவை பின்வருமாறும்

* 1594 தந்துரே போர்

இக்காலத்தில் கண்டி இராச்சியத்தின் ஆட்சியாளனாக இருந்தவன் 1ஆம் வீமலதர்மசூரியனாவான், போர்த்துக்கேயக் கப்பித்தாள் ஜெனரல் லோபேஸ் ரூசர் போர்த்துக்கேயப்படை பின்வாங்கும் போது விமலதர்மசூரிய மன்னனின் தாக்குதலுக்கு உள்ளாகியதுடன் கப்பித்தான் ஜெனரல் உட்பட போர்த்துக்கேயப் படை வீரர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

1603 பலனப் போர்

1603 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆக்கிரமிக்கப்படல் போர்த்துக்கேயக் கப்பித்தான் ஜௌரல் தொன் ஜெரோனிமோ டி அசுவேது, சீமன் பிஞ்ஞோ, சமரக்கோன் முதலி ஆகியோர் ஆக்கிரமிப்பை முன்னெடுத்துச் செல்லல் போர்த்துக்கேயருடன் இருந்த கரையோர சிங்களப் படையினர் கண்டி இராச்சிய மன்னனுடன் இணைந்து போர்த்துக்கேயரைத் தாக்கியமை, இதனால் பலளக் கோட்டையைக் கைவிட்டுச் செல்ல வேண்டிய நிலை போர்த்துக்கேயருக்கு ஏற்பட்டமை.

* 1630 ரந்தெனிவல் போர்

இக்காலத்தில் செனரத் கண்டி இராச்சிய அரசனாக இருந்தமை கொன்ஸ்தாந்தினு டி சா தலைமையில் போர்த்துக்கேயர் நாக்குதலை மேற்கொண்டமை. சிங்களப் பிரதானிகள் சிலர் தங்களின் கீழிருந்த வீரருடன் கண்டி மன்னனுக்கு சார்பாக நடந்து கொண்டமை. கடும் மழை என்பன காரணமாகப் போர்த்துக்கேயப் படை பலவீனமடைதல், போர்த்துக்கேயப் படையை ரந்தெனிவலயில் இரண்டு நாட்கள் தாக்கி, கண்டி இராச்சியப்படை வெற்றி பெறல். கொன்ஸ்தாந்தினு டி சா போரில் உயிரிழந்தமை.

* 1638 கன்னொருவாப் போர்

இக்காலத்தில் இரண்டாம் இராஜசிங்கன் கண்டி இராச்சிய அரசனாக இருந்தமை, போர்த்துக்கேயக்கப்பித்தான் ஜெனரலாக தியோக மெலோ கஸ்ரோ இருந்தமை. 1638ஆம் ஆண்டு மார்ச் மாதம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை. செங்கடக நகரைக் கைவிட்டு கன்னொருவாவில் இருந்த 2ஆம் இராஜசிங்களின் தலைமையில் சிங்களப் படையினர் போர்த்துக்கேயரைத் தாக்கி வெற்றி பெற்றதுடன், பலர் கொல்லப்பட்டனர்

1638 கன்னொருவாப் போர்

இக்காலத்தில் இரண்டாம் இராஜசிங்கன் கண்டி இராச்சிய அரசனாக இருந்தமை போர்த்துக்கேயக் கப்பித்தான் ஜெனரலாக அரசனாக இருந்தமை. போர்த்துக்கேயக்கப்பித்தான் ஜெனரலாக தியோக மெலோ கஸ்ரோ இருந்தமை. 1638ஆம் ஆண்டு மார்ச் மாதம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை. செங்கடக நகரைக் கைவிட்டு கண்னொருவாவில் இருந்த 2ஆம் இராஜசிங்கனின் தலைமையில் சிங்களப் படையினர் போர்த்துக்கேயரைத் தாக்கி வெற்றி பெற்றதுடன், பலர் கொள்ளப்பட்டவை.

 

 

ii) கண்டி இராச்சியம் அப்படையெடுப்புகளில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஏதுவாகவிருந்த காரணிகளை ஆராய்க.

* கண்டி இராச்சியத்தின் இயற்கை அரண்கள்

* கண்டி இராச்சியம் உயரமான இடத்தில் அமைந்துள்ளமை.

மலைகளாலும், காடுகளாலும் சூழப்பட்டுள்ளமை.

அடிக்கடி மழையைப் பெறும் பிரதேசமாக இருந்தமை.

பலண கணவாய் அமைந்துள்ளமை.

கண்டி இராச்சிய மக்கள் அரசனுக்கு விசுவாசமாக இருந்தமை.

* தமது சூழலைப் பயன்படுத்திக் கண்டி இராச்சியப் படையினர் கொரில்லாப் போர் முறையைக் கையாண்டமை.

* நேருக்கு நேராகப் போர் செய்து பழக்கப்பட்ட போர்த்துக்கேயர் படைவீரர்களால் கொரில்லாத் தாக்குநல்களுக்கு முகங் கொடுக்க முடியாமல் போனமை,

லஸ்க்ரி்ஞ்ஞா வீரர்கள் என்ற போர்த்துக்கேயப் படையில் இருந்த கரையோர சிங்கள கூலிப் படையினர் போரின் முக்கிய கட்டங்களில் போர்த்துக்கேயரைக் கைவிட்டு கண்டி இராச்சியப் படையுடன் சேர்ந்து கொண்டமை. (-டு: 1594, 1603, 1630)

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்