Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

17 ஜூன், 2021

A/L மாணவர்களுக்கான 2014 ஆண்டு கடந்த கால வினா விடை விடைகள் வரலாறு பாகம்-03

 

A/L மாணவர்களுக்கான 2014 ஆண்டு கடந்த கால வினா விடை விடைகள் வரலாறு பாகம்-03

A/l past paper with Answer 2014

8.     "பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை வளர்ச்சியானது பொருளாதாரத் துறையில் மட்டுமன்றி    சமுதாயத்திலும்  19ஆம் நூற்றாண்டிலே குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது."

i)  பெருந்தோட்டத்துறை அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கு சிபாரிசு வழங்கிய ஆணைக்குழு யாது?

கோல்புறக் - கமரன் ஆணைக்குழு

 

 

(ii) பெருந்தோட்டத்துறையில் இடம்பெற்ற நான்கு வர்த்தகப் பயிர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

கோப்பி, சிங்கோளா, கொக்கோ, தேயிலை, இறப்பர், தென்னை

 

iii) பெருந்தோட்டங்களை ஆக்குவதற்கு நிலம், தொழிலாளர் சேவை என்பவற்றைப் பெற்றுக் கொண்ட முறையினைப் பற்றி ஒரு சுருக்கமான விளக்கம் எழுதுக.

நிலம்

  • வெளிநாட்டவர் இந்நாட்டில் குடியேறவும், நிலங்களை சொந்தமாக்கிக் கொள்ளவும் சந்தர்ப்பம் அளித்தல்.
  • ஐரோப்பியர் பெற்றுக்கொண்ட நிலங்களுக்கு ஐந்து வருடங்கள் வரி அறவிடப்படாமை.
  • மரபு ரீதியான முறைக்கு மாறாக அரசாங்கம் நிலம் விற்கும் முறையொன்றை அறிமுகம் செய்தல். ஒரு ஏக்கர் நிலம் ஐந்து சிலிங் என்ற ரீதியில் விற்பனை செய்யப்பட்டமை,
  • 1840 ஆம் ஆண்டு அமுல் செய்யப்பட்ட தரிசு நிலச்சட்டம் தங்களுக்குச் சொந்தமான நிலமென உறுதிசெய்ய முடியாத கிராம மக்களின் நிலங்கள் அரசுக்குச் சொந்தமானதுடன், அவை பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்குப் பயன்படுத்தப்பட்டமை.

* உழைப்பு

  • கட்டாய இராஜகாரிய முறை ஒழிக்கப்படல்.
  • கிராம மக்கள் பெருந்தோட்டங்களில் வேலை செய்வதை விரும்பாமை.
  • பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்கு மக்களின் உழைப்பைப் பணம் கொடுத்துப் பெறும் முறை ஏற்படல்

·         குறைந்த சம்பளத்தில் கூடிய வேலை செய்யக்கூடிய தென்னிந்தியத் தொழிலாளர் இந்நாட்டிற்குக்  கொண்டு வரப்பட்டமை.

 




 (iv) மேலே தரப்பட்ட குறிப்பினைப் பெருந்தோட்ட விவசாய முறையின் விளைவுகள் தொடர்பாக ஆராய்க

பொருளாதாரம்

* பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையால் முதலாளித்துவப் பொருளாதார முறை தோன்றுதல்

* இதன் விளைவாக இலங்கையின் பொருளாதாரம் உலக சந்தையில் தங்கியிருக்கும் நிலை ஏற்படல்,

* உள்நாட்டு விவசாயம் வீழ்ச்சியுற்றதுடன், ஏற்றுமதி இறக்குமதிப் பொருளாதார முறை தோன்றுதல்.

 * உள்நாட்டு கிராமிய சமுதாயம் பணப் பரிமாற்றத்துக்குப் பழக்கப்படல், வெளிநாட்டுப் பொருட்கள் மீது நாட்டம் கொள்ளல்.

* கிராமிய மக்கள் தமது நிலங்களை இழக்க வேண்டிய நிலை ஏற்படல். *போக்குவரத்து, தபால் சேவை போன்ற துறைகள் முன்னேற்றமடைதல்.

சமுதாயம்

* விவசாயிகள் நிலம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்கியதால் நிலமற்ற மக்கள் பிரிவினர் தோற்றம் பெறல்.

* நகரங்களும், நகரங்களில் வாழும் மக்களும் தோன்றுதல் சமுதாயம் நகரமயமாதல்.

* ஆங்கிலம் சுற்ற, மேல்நாட்டுப் பண்பாட்டிற்குப் பழக்கப்பட்ட மத்திய வகுப்பினர் தோன்றுதல்,

 தென்னிந்தியத் தொழிலாளர் வர்க்கம் இலங்கை சமுதாயத்தில் இணைதல்

 

09) பகுதி (A) அல்லது பகுதி (B) பகுதிக்கு விடை எழுதுக.

 (A) மேல்வரும் தலைப்புகள் தொடர்பாகச் சோல்பரி அரசியலமைப்பின் பிரதான அம்சங்களைப் பரிசீலனை செய்க.

i) தேசாதிபதி

* 1948ஆம் ஆண்டு இலங்கை அடைந்த சுதந்திரம் முழுமை பெறாது, டொமினியன் அந்தஸ்தில் (நிலையில்) இருத்தல் இதனால் பிரித்தானிய அரசின் பிரதிநிதியாகத் தேசாதிபதி இருந்தமை,

* பிரதமரின் சிபார்சின்படி பிரித்தானிய அரசால் தேசாதிபதி நியமிக்கப்பட்டமை.

* தேசாதிபதிக்கே சில அதிகாரங்கள் இருந்தன.

-டு: தேர்தலின் பின்னர் அல்லது வெற்றிடம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் பிரதமரை நியமித்தல்,

பிரதமரின் சிபார்சின்படி செயற்படுத்தக்கூடிய பல அதிகாரங்கள் இருந்தன.

 பராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்குதல், கெபிளட் அமைச்சர்களை நியமித்தல் வெளிநாட்டுத் தூதுவர்களை நியமித்தல், பாராளுமன்றத்தைக்கூட்டுதல், ஒத்தி வைத்தல். கலைத்தல், செனட் சபை உறுப்பினர்களை நியமித்தல், அரசசேவை ஆணைக்குழுவினதும் நீதிச்சேவை ஆணைக்குழுவினதும் அங்கத்தவர்களை நியமித்தல்,

 

ii) பிரதம மந்திரியும் மந்திரி சபையும்

அரசியல் யாப்புக்கு அமையத் தேர்தலில் கூடுதலான ஆசனங்களைப் பெற்ற கட்சியின் தலைவரைப் பிரதானமாக நியமித்தல்.

பிரதமரால் தமது கட்சியிலிருந்து அமைச்சர்களை அமைச்சரவைக்குத் தெரிவு செய்தல்.

பாதுகாப்பு அமைச்சர் பதவியைப் பிரதமர் வகிக்க வேண்டிய நிலை

 அமைச்சரவை மக்கள் பிரதிநிதிகள் சபைக்குப் பொறுப்புப் கூறுவதுடன் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு.

iii) இரு சபைப் பாராளுமன்றம்

மக்கள் பிரதிநிதிகள் சபை, செனட் சபை எனும் இரு சபைகள் இருந்தமை.

 

மக்கள் பிரதிநிதிகள் சபையின் அங்கத்தவர்கள் தேர்தல் தொகுதி அடிப்படையில் சர்வ வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்பட்டமை

மக்கள் பிரதிநிதிகள் சபையில் 101 அங்கத்தவர்கள் இருந்தனர். அவர்களில் 95 பேர் வாக்குரிமை மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். 6 பேர் தேசாதிபதியால் நியமிக்கப்பட்டனர்.

* நாட்டின் சட்டங்கள் நியாயமாகச் செயற்படுத்தப்படும் பொருட்டு பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த கல்விமான்கள் செனட் சபைக்கு நியமிக்கப்பட்டமை

செனட் சபையின் அங்கத்தவர் தொகை 30 ஆகும். அவர்களில் 15 பேர் மக்கள் பிரதிநிதிகள் சபையிலிருந்து தெரிவு செய்யப்பட்டோர். ஏனைய 15 பேர் பிரதமரின் சிபார்சின் பேரில் தேசாதிபதியால் நியமிக்கப்பட்டோராவர்.

* மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட சாதாரண மசோதாக்கள் சட்டமாக்கப் படுவதற்கு செனட் சபையின் அங்கீகாரம் அவசியம். நிதி தொடர்பான மசோதாக்கள் செனட் சபைக்கு சமர்ப்பிக்க வேண்டி இருந்த போதிலும் அது தொடர்பாக செனட் சபைக்கு விசேட அதிகாரங்கள் இருக்கவில்லை.

 

(B) 1978 வரை இலங்கையில் இடதுசாரிக் கட்சிகள் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகளைச்   சுருக்கமாகப் பரிசீலனை செய்க.

குணசிங்க அவர்களால் நிறுவப்பட்ட தொழிற் கட்சியே முதலாவது இடதுசாரிக் கட்சியாகும்

. 1935ஆம் ஆண்டு இளந் தலைவர்களின் தலைமைத்துவத்தில் இலங்கை சமசமாஜக் கட்சி அமைக்கப்படல்,

* கலாநிதி N. M. பெரேரா, டாக்டர் S. A. விக்கிரமசிங்க, பிலிப் குணவர்தன ஆகியோர் 1936ஆம்| ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்றமை. பேரரசுக்கு எதிராகக் குரலெழுப்பி முழுமையான சுதந்திரம் கோரி செயற்பட்டமை,

* 1939ஆம் ஆண்டாகும் போது கட்சியில் ட்ரொட்ஸ்னீவாதிகள், ஸ்டாலிள்ளாதிகள் என்ற மோதல்கள் ஏற்பட்டும் கட்சி இரு பிரிவுகளாதல், கட்சியிலிருந்து பிரிந்து சென்றோர் 1943ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியைத் தோற்றுவித்தல்.

* சமசமாஜக் கட்சி பேரரசிற்கு எதிரான கொள்கையுடன் செயற்பட்டமையால் அக்கட்சி அரசின் கண்டனத்திற்கு உள்ளாகியமை.

* 1938 பிரேஸ்கர்ட்ல் சம்பனம்.

* இரண்டாம் உலகப்போரில் இலங்கை பங்கு கொண்டமைக்கு பலத்த எதிர்ப்புத் தெரிவித்தமை.

* 1940ஆம் ஆண்டு சமாமாஜக் கட்சியின் தலைவர்கள் சிலர் கைது செய்யப்படல். கட்சி தடை செய்யப்படல்.

இக்காலகட்டத்தில் கொல்வின் ஆர் டி சில்வானின் தலைமையில் போல்ஷெவிக் லெனினிஸ்ட் கட்சி தோன்றுதல்.

* 1946-1947ஆண்டு காலப்பகுதியில் நாடளாவிய வேலை நிறுத்தத்தில் இணைந்து செயற்பட்ட இடதுசாரிக் கட்சிகள் 1947ஆம் ஆண்டுத் தேர்தலில் தனித்தனியே போட்டியிட்டன.

1947,1952 ஆகிய தேர்தல்களின் பின்னர் கலாநிதி N.M.பெரேரா அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராதல்,

* 1948ஆம் ஆண்டு அக்கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் மக்கள் ஐக்கிய முன்னணியின் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றமை.

* 1964ஆம் ஆண்டு இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி ஒன்றினை அமைத்தமை. சமசமாஜக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்ததும் அக்கூட்டணி பிளவுண்டமை.

* சமசமாஜக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றிற்கு இடையிலான இணக்கப்பாடுகளின் அடிப்படையில் 14 விடயங்கள் சோஷலிசக் கருத்துக்களைக் கொண்டிருந்ததுடன், சமசமாஜக் கட்சிக்கு அரசாங்கத்தில் சில அமைச்சர் பதவிகளும் கிடைத்தன.

+ 1970 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டமை. தேர்தலில் வெற்றி பெற்றமை. தேர்தலின் பின்னர் அரசாங்கத்தின் செயற்பாடுகள் சமவுடைமைக் கொள்கைக்கு சார்பாக இருந்தமை. (பெருந் தோட்டங்கள் அரசுடைமையாக்கப்படல் இதற்கான எடுத்துக்காட்டாகும்)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1975ஆம் ஆண்டு இடதுசாரிக் கட்சிகள் அரசாங்கத்திலிருந்து வெளியேறல்.

* 1970 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல் மரபு ரீதியான இடதுசாரிகளில் நம்பிக்கை இழந்த இளைஞர்கள், மக்கள் விடுதலை முன்னணி என்ற பெயரில் இயங்கத் தொடங்கினர். 1971ஆம் ஆண்டு அவர்களால் ஆயுதந் தாங்கி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அரசினால் முறியடிக்கப்பட்டமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்