Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

18 ஜூன், 2021

G.C.E A/l 2017 கடந்த கால வினா விடை இலங்கைவரலாறு .2017 A/l past paper history ,history past paper with answer in tamil

 

A/L மாணவர்களுக்கான 2017 ஆண்டு கடந்த கால வினா விடை  இலங்கை வரலாறு 

பாகம்-01

பகுதி ii

01. உமக்கு வழங்கப்பட்ட புறவுருவப்படத்திலே மேலே தரப்பட்ட இடங்கள் எல்லாவற்றையும் குறித்துப் பெயரிட்டு, அவற்றுள் எவையேனும் இரண்டினைப் பற்றிச் சுருக்கமான வரலாற்றுக் குறிப்புகள் எழுதுக.

(1) ஜம்புகோள பட்டணம்

(ii) சேருவில

(v) யாப்பகூவ

(vii) நீர்கொழும்பு

(ii) யான் ஓயா

(iv) யோத வாவி

(iv) தெவிநுவர

(viii) மத்திய மாகாணம்




02. பன்னிரண்டாம் நூற்றாண்டு முடியும் வரையான காலத்தில் இலங்கை வரலாற்றைப் படித்துக் கொள்வதில் மேல்வருவனவற்றுக்குரிய முக்கியத்துவத்தைப் பரிசீலனை செய்க.


(i) சாசனங்கள்

i) சாசனங்கள் : கல்வெட்டுக்கள், பொன், வெள்ளியினாலான சாசனங்கள். கிறுக்கல் கவிதைகள் என்பனவாகும். இவை குறித்த வரலாற்று நிகழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாகவும், வர்ணனைகள் இவை உண்மை நிகழ்வை மாத்திரம் குறிப்பிடுவதன் மூலம் தொல்பொருள் மூலாதாரங்களுள் முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது.

வம்சக்கதைகளில் வரும் பிழையான தகவல்களை சரி செய்து கொள்வதற்கும், மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும் இவை துணைபுரிகின்றன. இலக்கிய குறிப்புக்களில் அதிகம் இடம்பெறாத பொருளாதர நடவடிக்கைகள் பற்றி இவற்றில் அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொடவாய சாசனம் வரி

பதுளைத்தூண் சாசனம் - வர்த்தக வரி. வியாபாரப் பொருட்கள். அரச அதிகாரிகளின் நடவடிக்கைகள். தோணிகல சாசனம் - அக்கால வங்கி முறை. வட்டி, வணிகக் குழு பற்றிக் குறிப்பிடுகின்றன.

தெவனகல சாசனம்-வெளிநாட்டு வர்த்தகம், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு திரியாய் சாசனம் வர்த்தகம் வரிகள் பற்றியது தகபதி, போஜகபதி பல்வேறு உரிமைகள் : பதவிப் பெயர்கள், சொத்து உரிமை, உடமைகளைக் கையளிப்பது பற்றிய தகவல்கள், பல்வேறு தொழிற்துறைகள் பற்றியது.

சமய நிலையங்களிற்கு வழங்கிய அன்பளிப்பு மற்றும் சட்டதிட்டங்கள். குறித்த இடங்களை சரியாக இனங்கண்டு கொள்ளல். - நாகதீபம், காஜரகம, (கதிர்காமம்)

மொழி வளர்ச்சி பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளல். எவ்வாறாயினும் சாசனங்களின் மூலம் முழுமையான வரலாற்றுத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியாது.

(ii) தொல்பொருட் சின்னங்களும் அழிபாடுகளும்

ii) தொல்பொருட் சின்னங்களும், அழிபாடுகளும்:

.

வரலாற்றுக்கு முற்பட்டகாலத்திற்குரிய எச்சங்களான, கல்லாயுதங்கள் அக்காலத்துக்குரிய, மனித

எலும்புகள், மட்பாண்டப்பொருட்கள் ஆயுதங்கள், செப்புப்பொருட்கள் என்பவற்றின் மூலம் பண்டைய மனிதன் பற்றி பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

குளங்கள், கால்வாய்கள், இடிபாடுகள் மூலம் அக்கால மக்களின் வாழ்க்கைமுறை, தொழிநுட்பம் பற்றி அறியமுடிகின்றமை.

. வைத்தியசாலை, வைத்திய உபகரணங்கள் மூலம் பண்டைய சுகாதார நிலையை அறிய நகர நிர்மாணம், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி சிகிரியா போன்ற இடங்களில் கிடைத்த அழிபாடுகளின் முடியும்.

மூலம் அறிய முடிகின்றமை. சமய, கலாசார, வெளிநாட்டு தலையீடு பற்றி அறிந்து கொள்ள முடிகின்றமை.

சித்திரம், சிற்பம், செதுக்கல் வேலைகளின் மூலம் அக்கால கலை வளர்ச்சி பற்றி அறிந்து கொள்ள முடிகின்றமை.

(iii) நாணயங்கள்


அக்கால பொருளாதாரம் பற்றி அறிய முடியும் - வர்த்தகம் செய்த நாடுகள், வர்த்தகம் பொருட்கள் பற்றி அறியலாம்.

நாணயங்களை வெளியிட்ட அரசர்கள், அவர்களின் பட்டப்பெயர்கள், வெளியிட்ட ஆண்டு பற்றி அறியலாம்.

நாணயம் செய்யப்பட்டுள்ள உலோகத்தின் மூலம் பொருளாதார நிலை பற்றி அறிந்து கொள்ள முடியும், மற்றும் தொழில்நுட்ப அறிவு பற்றி அறியலாம்.


நாணயங்களில் காணப்படும் சில உருவங்களைக் கொண்டு அக்கால மக்களின் நம்பிக்கை, வழிபாட்டு முறைகள் பற்றி அறியலாம்.

                                                                                                   (14 புள்ளிகள்)

03. அநுராதபுர காலத்துப் பொருளாதார முறையின் பிரதானமான அம்சங்களை மேல்வரும் தலைப்புகள் தொடர்பாகப் பரிசீலனை செய்க.

 (i) விவசாயமும் நீர்ப்பாசனமும்


வம்சக்கதைகளின் படி கி.மு. 6ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த விஜயனின் மூலம் விவசாயம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. எனினும் அனுராதபுரத்தில் மேற்கொண்ட அகழ்வுகளின் போது கி.மு. 8.ஆம் நூற்றாண்டில் நெற் செய்கை இடம் பெற்றமைக்கான சான்றாக மட்பாண்டப் பொருட்கள். உமி என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

விவசாயம் நெற்செய்கை, சேனைப்பயிர்ச்செய்கை என இருவகைப்பட்டது. நாலாம் நூற்றாண்டுக்குரிய தோணிகல குறிப்பின்படி மூன்று போகங்கள் பயிர்ச்செய்கை மேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காலத்திற்கு காலம் ஏற்பட்ட வரட்சி நிலைமையினைத் திறமையாக எதிர்கொண்டு நெற்செய்கை விவசாயத்தை விருத்தி செய்துள்ளமை அறியப்படுகின்றது.

விவசாயத்தை மையமாகக் கொண்ட தன்னிறைவுப் பொருளாதாரம் நிலவியமை. சிலகாலங்களில் இந்நாட்டிலிருந்து அரிசி ஏற்றுமதி, செய்ததாகவும், சில காலங்களில் அரிசி இறக்குமதி செய்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது. (கி.பி. 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அல் இத்ரீசி தென் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அரிசி எடுத்துவரப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.)

வெளிநாட்டு வர்த்தகத்தில் அதிகமாக ஆடம்பரப் பொருட்களிற்கு முன்னுரிமை வழங்கினர், வரட்சி மற்றும் பஞ்சநிலை ஏற்பட்ட காலங்களில் இவ்வாறு அரிசி இறக்குமதி செய்திருக்கலாம்.

நீர்ப்பாசனம்

இலங்கையின் ஆரம்பக் குடிகள் உலர்வலயத்திலேயே நிலை கொண்டிருந்தனர்இவர்கள் நெற்செய்கையை பிரதானமாகக் கொண்ட விவசாயத்தை மேற்கொண்டனர்.


நெற்செய்கைக்கு அதிக நீர் தேவைப்பட்டது. எனினும் உலர் வலயத்தில் இருந்த ஆறுகளின் மூலம் வருடம் முழுவதும் போதுமான நீர் கிடைக்கவில்லை. இதனால் மழை நீரை சேமித்து வைத்துக் கொள்ள குளங்கள். கால்வாய்களை அமைக்க பண்டைய மக்கள் முயற்சித்தனர்.

மகாவம்சத்தில் - பண்டுகாபயன் அபய வாவி (பசவக் குளம்) எனும் பெயரில் முதலாவது குளத்தை அமைத்ததாக கூறப்பட்டுள்ளது. கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தேவநம்பிய திஸ்ஸ மன்னன் திஸா வாவியையும், நுவர வாவியையும் நிர்மாணித்தான்.

மீன்வல சாசனம் - மகாவம்ச குறிப்பின்படி கி.மு. முதலாம் நூற்றாண்டின் போது குடக்கண்ண தீஸ் அரசன் வரலாற்றில் முதலாவது நடுத்தரக் கால்வாய் ஒன்றை நிர்மாணித்ததாக கூறப்படுகின்றது. கி.பி முதலாம் நூற்றாண்டில் வசப மன்னன் பாரிய குளங்களை நிர்மாணித்தான். இவன் 11 குளங்களையும், 12 கால்வாய்களையும் அமைத்துள்ளான்அம்பன் கங்கையை மறித்து மேற்குத்திசையாக 30 கி.மீற்றர் வரை எலகர கால்வாயை நிர்மாணித்தான்.


கி.பி 3ஆம் நூற்றாண்டில் இருந்த மகாசேனன் 16 குளங்களையும் (01 கால்வாயையும் நிர்மாணித்தான். இவற்றுள் மின்னேரி கவுடுலுமாகல்ல வாவிகள் குறிப்பிடத்தக்கதாகும். பப்பதந்த கால்வாயையும் நிர்மாணித்தான் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் முதலாம் உபதிஸ்ஸ மன்னன் 06 குளங்களை நிறுவியுள்ளான்.

கி.பி. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாதுசேனன் 18 குளங்களை கட்டியுள்ளான். கலாவாவி இவற்றுள் முக்கியமானதாகும். 54 கி.மீற்றர் நீளமுள்ள யோத கால்வாய் (ஜயகங்கை) மூலம் கலாவாவியிலிருந்து திஸா வாவிக்கு நீரை வழங்கியுள்ளான். பனம்குளம், குருநாகல் மாவட்டத்திலுள்ள, மெத்தகெடிய, மாலிய குளங்கள் இவனால் நிர்மணிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. கி.பி. 6ஆம் நூற்றாண்டில் இருந்த இரண்டாம் முகலன் பதவியா, நாச்சதுவா, மாம குளங்களையும் நிர்மாணித்தான்.

முதலாம் அகபோ தண்ணிமுறிப்புக் குளத்தையும், இரண்டாம் அகபோ கந்தளாய், கிரித்தளை குளங்களையும் நிர்மாணித்தான். கி.பி.8ஆம்.9ஆம், 10 ஆம் நூற்றாண்டுகளில் பாரிய குளங்கள் கட்டப்பட்டதாக அறிய முடியவில்லை.

சோழர் ஆக்கிரமிப்பினால் நீர்ப்பாசனக் கட்டமைப்பு அழிவடைந்தது.

(ii) வாணிபம்

வர்த்தகம் வாணிபம் :

பண்டைய பொருளாதாரத் துறைகளில் வர்த்தகமும் ஒன்றாகும். எனினும் பல மூலாதாரங்களில் இவ்வர்த்தகம் பற்றி அதிகம் குறிப்பிடப்படவில்லை.

வணிஜ, வணிட என்ற பெயரிலான வியாபாரிகள் பற்றி கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலம் சாசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிராமி குறிப்புக்களில் புக, புசிய என்ற வியாபார வகுப்பினர் இருந்துள்ளனர். வம்சக் கதைகளில் வர்த்தகக் குழுவின் தலைவன் செட்டியஎன அழைக்கப்பட்டான்.

உள்நாட்டு வர்த்தகம்

தலைநகரமே வர்த்தக கேந்திர நிலையமாக இருந்தது.

வர்த்தக நிலையங்கள், அவற்றில் விற்கப்பட்ட பொருட்கள் பற்றி இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. துறைமுக நகரங்களில் அதிகமாக வியாபாரம் இடம்பெற்றுள்ளது. உள்நாட்டிலிருந்து மாணிக்கம், வாசனைத் திரவியங்கள். யானை போன்றன இங்கு எடுத்துவரப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. வெலிகம, தெவிநுவர, மகாதித்த, கோகண்ணு போன்ற துறைமுகங்களுக்கு அருகில் சமயவழிபாட்டு நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

மகாதித்த துறைமுகத்திலிருந்த வணிகக் குழுவொன்று வங்கி முறையொன்றை நடை முறைப்படுத்தியதாகவும். அங்கு பணம், தானியம் என்பன வைப்புச் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. உள்நாட்டினுள் "நியம்கம"எனும் பெயரில் வர்த்தக நகரங்கள் பல காணப்பட்டன.

10 ஆம் நூற்றாண்டில் இருந்த 4 ஆம் உதய மன்னனின் காலத்துக்குரிய பதுளைத்தூண் குறிப்பில் வர்த்தக (ஹோபிடிகம) நகரம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் நூற்றானடில் கொடவிய துறைமுகவரியை ஆராமை ஒன்றிற்குத் தானமாக வழங்கியுள்ளனர். 9ஆம் நூற்றாண்டில் மஹபட்டுலட்டன் எனும் அதிகாரி மகாதித்த துறைழகத்தில் வரி அறவிட்டதாக

கூறப்படுகிறது. 10 ஆம் நூற்றாண்டில் "படிலத்தட நாயக"என்பவர் இப்பணியை ஹோபிடிகமவின் மேற்கொண்டதாகவும், வாஹல்கட தமிழ் சாசனத்தில் வரி அறவிடும் பிரதானி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு வகையான நாணயங்களை பயன்படுத்தியுள்ளனர்.

10ஆம் நூற்ற நாடில் முத்து, மாணிக்கம், யானை போன்ற பொருட்கள் அரசினால் மாத்திரமே ஏற்றுமதி செய்யப்பட்டது.

வெளிநாட்டு வர்த்தகம்

வர்த்தக மத்திய நிலையத்தில் அமைந்திருப்பதனாலும், நாட்டின் பல பகுதிகளிலும் துறைமுக வசதி காணப்பட்டதனாலும் பண்டைய காலம் முதல் இலங்கை முக்கிய வர்த்தக நிலையமாக விளங்கியது.

இலங்கையில் மக்கள் குடியேறுவதற்கும் வர்த்தகர்கள் பாரிய பங்களிப்பை செய்துள்ளனர். (பாகியான், ஹியுங்சாங்) என வெளிநாட்டார் குறிப்புக்களில் காணலாம். கி.மு. 4ஆம் நூற்றாண்டில் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு சென்ற பொருட்கள்

அங்கிருந்து கிரேக்கம், உரோம் போன்ற பகுதிகளிற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அறியப்படுகிறது. கி.மு. 1ஆம் மற்றும் 3ஆம் நூற்றாண்டுகளில் இந்தியாவின் அரிக்கமேடு உரோமர்களின் முக்கிய வர்த்தக நிலையமாக இருந்தது. யானைத்தந்தம், முத்து, மாணிக்கம், கடலாமை என்பன இலங்கையிலிருந்து அங்கு அனுப்பி வைக்கப்பட்டன.

உரோம நாணயம், மகாதித்த, அனுராபுரம், மிகிந்தலை, சீகிரிய, வாழைச்சேனை கந்தரோடை போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

.


உரோம பேரரசனுடன் நட்புறவு வைத்திருந்த இலங்கை மன்னன் பற்றியும், இலங்கையின் வர்த்தகர்கள் இந்து சமுத்திரத்தில் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் பிளி...? குறிப்பிட்டுள்ளார். கி.பி. முதலாம் நூற்றாண்டில் பாதிகாபய மன்னன் உரோம பொருட்களை இங்கு எடுத்துவந்துள்ளான். இலங்கைத் துறைமுகங்களில் பெறப்பட்ட சீனப்பட்டுத்துணியை பாரசீக வர்த்தகர்கள் மூலம் உரோமர் பெற்றுக்கொண்டதாக "பிரகோபியஸ்"குறிப்பிடுகிறார். சீன மட்பாண்டம், நாணயம் பாரியளவில் இந்நாட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

10ஆம் நூற்றாண்டின் போது இஸ்லாமிய வர்த்தகர்கள் இங்கு குடியியேறியுள்ளனர். சோழர்கள் வட இலங்கையைக் கைப்பற்ற முக்கிய காரணியாக இருந்தது வர்த்தகமாகும்.

                                                                                                                             (14 புள்ளிகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்