Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

18 ஜூன், 2021

G.C.E A/l 2017 கடந்த கால வினா விடை இலங்கைவரலாறு .பாகம்-02 ,2017 A/l past paper history ,history past paper with answer in tamil

G.C.E A/l 2017 கடந்த கால வினா விடை இலங்கைவரலாறு

பாகம்-02




04. "முதலாம் விஜய்பாகு, முதலாம் பராக்கிரமபாகு ஆகியோர் பொலன்னறுவைக் காலத்து மன்னர்களில் முதன்மையானவர்கள்."

(i) அரச பதவி பெறுவதற்கு முன்பு முதலாம் விஜயபாகு கொண்டிருந்த பெயர் யாது?

. கீர்த்தி இளவரசன்


 (ii) முதலாம் பராக்கிரமபாகுவின் தாய் தந்தையரின் பெயர்களைக் குறிப்பிடுக.

தந்தை - மானாபரணன்

தாய்  - இரத்னாவலிய


(iii) இம்மன்னர்கள் இருவரும் பெளத்த சமயத்துக்கு ஆற்றிய பணிகளையச் சுருக்கமாக குறிப்பிடுக.

முதலாம் விஜயபாகு மன்னன் 

. பர்மாவிலிருந்து உபசம்பத பிக்குகளை வரவழைத்தமை. திரிபீடகத்தை கொண்டு வந்தமை

மற்றும் திரிபிடகத்தை எழுதி தானமளித்தமை. தலதா மாளிகையொன்றை நிறுவி தலதா பூஜையை நடாத்தியமை. தலதாவின் பாதுகாப்பிற்கு .

வேளைக்காரப் படையினை நியமித்தமை. தலைநகரில் விகாரைகளை நிறுவி மூன்று பிரிவுப் பிக்குகளையும் குடியமர்த்தியமை.

சமய நிலையங்களைப் புனரமைத்தமை. (உதாரணமாக - வெல்கம் விகாரை, ஜம்புகோள விகாரை, தம்புள்ளை விகாரை, கிரிகண்ட விகாரை, மஹியங்கணை, மெதிரிகிரிய மற்றும் ஸ்ரீ மகா போதி)

தமது தாய் தந்தையரின் நினைவாக 5 ஆராமைகளை நிறுவியமை (பிக்குகள் தங்குமிடம்)

சிவனொளிபாத யாத்திரைக்குச் செல்லும் பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுத்தமை சிவனொளிபாத மலையின் நிர்வாகத்திற்கு கிரிமலை எனும் கிராமத்தை தானமாக வழங்கியமை,

முதலாம் பராக்கிரமபாகு மன்னன்

சுகலா இளவரசியுடனான கடும் சமரின்பின் புனித தந்த தாது, பிச்சா பாத்திரத்தைக் கைப்பற்றியமை

சங்கராஜ தேரரின் தலைமையில் பிக்குகளை ஒன்றிணைத்து சங்கத்தை பாதுகாத்தமை (கி.பி.1165)



திம்புலாகல ஆராமையிலிருந்த மஹாகாசியப்ப தேரரின் தலைமையில் மூன்று பிரிவுகளை சேர்ந்த பிக்குகளை ஒன்றிணைத்துச் சங்க ஐக்கியத்தை ஏற்படுத்தியமை. பிக்குகளின் ஒழுக்க நெறிக்கோவையொன்றைக் கல்விகாரையில் செதுக்கியமை.

ஆலாஹனாப் பிரிவெனாவை ஏற்படுத்தியமை (சுபத்திரா, ரூபவதிதூபி, லங்காதிப, சிலைமனை.தீகபாதை) உத்தராராமய, திவங்க பிலிமகெய, தூபாராம என்பவற்றை நிறுவியமை, ருவன்வெலிசாய,மிரிசவெட்டிய, லோவாமஹாபாய், மிஹிந்தலை உட்பட 64 தூபிகளைப் புனரமைத்தமை. ஜேத்தவனாராமய பிக்குகளிற்கு என தலதா மாளிகை தர்மசாலா என்பவற்றை நிறுவியமை.

உத்தராராம விகாரைத் தொகுதியை ஏற்படுத்தியமை. இந்திய சிறைக்கைதிகளை வைத்து தமிலமஹாசாயாவை நிறுவியமை. தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் சமய உறவுகளைப் பேணியமை.


(iv) முதலாம் விஜயபாகு, முதலாம் பராக்கிரமபாகு ஆகியோரின் அரசியற் சாதனைகளை ஒப்பிட்டு ஆராய்க.

பொலன்னறுவைக்கால மூத்த ஆட்சியாளர்களாவர். முதலாம் விஜயபாகு வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளரிடமிருந்து நாட்டை மீட்டெடுத்தான். முதலாம் பராக்கிரமபாகு தமது உறவினர்களுடன் சண்டையிட்டு நாட்டை ஒன்றுபடுத்தினான்.

முதலாம் விஜயபாகு

முதலாம் விஜயபாகு உள்நாட்டு சவால்களை முறியடித்து உருகுணையில் அதிகாரத்தை நிலைநாட்டினான். சோழர்களிற்கு எதிராக திட்டமிட்ட அடிப்படையில் படை நகர்வை நடாத்தி சோழரைத் தோற்கடித்தான் இலங்கையை ஐக்கியப்படுத்தினான்.

பொலன்னறுவையைத் தலைநகராகக் கொண்டு பண்டைய மரபுகளைப் பேணி நிர்வாகம் செய்தான்.

உபராஜா, ஆதிபாத பதவிகளை ஏற்படுத்தி பிரதேச நிர்வாகத்தைப் பலப்படுத்தினான்.

அயோத்தியின் ஜகதிபால அரசனின் மகளான லீலாவதியை திருமணம் செய்தல்.

திரிலோக சுந்தரி என்ற கலிங்க தேச இளவரசியை திருமணம் செய்தல்.

சுந்தரி என்ற கலிங்க இளவரசியை தனது மகன் விக்ரமபாகுவிற்கு திருமணம் செய்து வைத்தல். தனது சகோதரி மித்தா இளவரசியை பாண்டிய மன்னனிற்கு திருமணம் செய்து கொடுத்தல். லீலாவதி இளவரசியின் மகளான யசோதரா குமரியை வீரவர்மனிற்கு திருமணம் செய்து கொடுத்தமை போன்ற வெளிநாட்டு உறவுகளைப் பேணியமை.

முதலாம் பராக்கிரமபாகு

தக்கிண தேசத்தின் ஆட்சியாளனாதல் - பண்டுவஸ்நுவர (பராக்கிரமபுர ) நிர்வாகத் தலைநகரமாக விளங்கியது.

ராஜரட்டையை கைப்பற்றிக் கொள்ள ஜயபாகுவுடன் போரிட்டமை. மலையரட்டையைக் கைப்பற்றியமை.

ஜயபாகுவுடன் உடன்படிக்கை செய்து கொள்ளல். (சங்கமுக விகாரைக் கல்வெட்டு) ஐயபாகுவின் பின்னர் கி.பி. 1153ஆம் ஆண்டு பொலன்னறுவையின் அரசனானமை. உருகுணையில் கிளர்ச்சி செய்த சுகலா தேவியைத் தோற்கடித்து உருகுணையை இணைத்தமை.

பொலன்னறுவையை தலைநகராகக் கொண்ட மத்திய நிர்வாக முறையினை ஏற்படுத்தியமை. பர்மாவை ஆக்கிரமித்தமை (ராமன்ய தேசம்) தென் இந்தியாவில் சோழர்களின் எதிரியான பாண்டியர்களிற்கு ஆதரவாகப் படைகளை அனுப்பியமை. காம்பூச்சியா உடன் சினேக தொடர்பைப் பேணியமை.



05. "ஆறாம் பராக்கிரமபாகு இலங்கை முழுவதையும் இணைத்த இறுதி அரசன் எனக் கருதப்படுகின்றான்."

 (i) ஆறாம் பராக்கிரமபாகுவின் இராசதானி யாது?

கோட்டை / ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே


(ii) ஆறாம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த இரண்டு பிரதானமான பிக்குகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

தொடகமுவ ஸ்ரீ ராகுல தேரர். வீதாகம மைத்ரியதேரர். கார்கல வனரத்ன தேரர், வெத்தேவ ஹிI, இருகல்திலக பிரிவெனாதிபதி,


(iii)ஆறாம் பராக்கிரமபாகுவின் காலத்து கல்வி நிலைகளைப் பற்றி ஒரு சுருக்கமான குறிப்புரை எழுதுக.

அரசனின் ஆதரவுடன் கல்விப் பணி இடம்பெற்றமை

பிரிவெனாக்கள் தோன்றியமை (தொடகமுவ விஜயபா பிரிவெனா, வீதாகம சுனானந்த பிரிவெனா தெவுந்தர இருகல்திலக பிரிவெனா, தேரகல பத்மாவதி பிரிவெனா, பெப்பிலியான கனேத்திரா தேவி பிரிவெனா) இவற்றில் துறவி, துறவி அல்லாத இருபகுதியினரும் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இக்காலத்தில் வாழ்ந்த பண்டிதர்கள் தமிழ், சிங்களம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் நூல்களை இயற்றினர்.

இதற்கிணங்க பெரியகாவியங்கள், புத்த காவியங்கள், ஆலோசனை நூல்கள் புகழ்மாலைகள் எழுதப்பட்டன.

  • வீதாகம மைத்திரிய தேரர் - புதுகுண அலங்காரய, லொவட சங்கராவ, ஹங்ஸ சந்தேசய 
  • தொடகமுவே ஸ்ரீ ராகுல தேரர் - காவிய சேகர. பிஞ்சிகா பிரதீபா, செலலிஹிணி சந்தேசய, பரவி சந்தேசய
  • வெத்தேவ ஹிமி - குத்தில் காவியம் 
  • ஸ்ரீ ராம சந்திர பாரதி - பக்தி சதகய 
  • ஆறாம் பராக்கிரமபாகு - ருவன் மல
  • தர்ம திச்சார்ய விமல கீர்த்தி தேரர் - சத்தர்ம ரத்னாகரய 
  • இருகல்திலக பிரிவெனாபதி - கோகில சந்தேசய
  • சரஜோதிமாலை எனும் தமிழ் சோதிட நூல்

கோட்டையைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை இறுதியாக ஒன்றிணைத்த முதலாவது அரசன்.

சம காலத்தில் கம்பொல ராசதானியில் அதிகாரத்தை ஏற்படுத்தி 1412 றைகமவில் அரசனாகி 1415 இல் கோட்டையைத் தலைநகராக்கினான்.

உலர் வலயத்தில் அப்போதிருந்த சுதந்திர அரசுகளையும், 18 வன்னி அரசர்களையும் தனக்குக் கட்டுப்பட்டு நடக்கச் செய்தான்.

கி.பி. 1445 ஆம் ஆண்டு சப்புமல் குமாரனின் தலைமையில் யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகளைத் தோற்கடித்து அப்பகுதியைக் கைப்பற்றினான்.

ஜோதியசிதானவின் கிளர்ச்சியை அம்புலுகல இளவரசனை அனுப்பி அடக்கினான்.

மலைநாட்டு ஆட்சியாளனான விக்ரமபாகு பிரதானியின் பலத்தை கட்டுப்படுத்தி அப்பகுதியை இணைத்தமை.


(iv) ஆறாம் பராக்கிரமபாகுவின் காலத்தில் இலங்கை அரசியல் ரீதியாக இணைக்கப்பட்டமையிலுள்ள பிரதான கட்டங்களை விவரிக்குக.

அரசியல்

நாயக்கர் வம்சத்தின் இரண்டாவது கண்டிய அரசன் (1747 - 1781) 

சில கண்டிப் பிரதானிகள் இவ்வரசனிற்கு எதிராக செயற்பட்டமை (1760 இல் இவனுக்கு எதிரான சதித்திட்டம்

கரையோரப்பகுதிகளில் இருந்த ஒல்லாந்தரின் ஆதிக்கம் - 1760 - 65 கண்டிய - ஒல்லாந்துப் போர்1766 ஒப்பந்தம்

1766ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை மாற்றியமைக்க அரசன் முயன்றமை. ஒல்லாந்தருக்கு எதிராக ஆங்கிலேயரின் உதவியை நாட முயன்றமை.

சமயம்

சங்கத்தை ஒன்றிணைத்தமை. பௌத்த சமய எழுச்சியை ஏற்படுத்தியமை

1753 இல் வலிவிட்ட ஸ்ரீ சரணங்கராச தேரரின் தலைமையில் சீயத்திலிருந்து பிக்குகளை வரவழைத்து உபசம்பதா நடாத்தியமை. பிக்குகள் சங்கத்தை புனரமைத்தமை.

பிக்குகளுக்கும் விகாரைகளுக்கும் ஆதரவு வழங்கியமை. (கங்காராமய, களனி விகாரை) இலக்கிய மறுமலர்ச்சிக்கு ஆதரவளித்தமை.

சிவனொளிபாத மலையைப் பிக்குகளிடம் கையளித்தல்.

நான்கு தேவாலயப் பெரஹரவை தலதா பெரஹரவுடன் இணைத்தமை. கதிகாவத்தை ஏற்படுத்தி சங்கராஜ. அனுநாயக பதவிகளை வழங்கியமை.


06.அரசியல், பண்பாடு ஆகிய துறைகளில் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் ஏற்படுத்திய சாதனைகளை மதிப்பீடு செய்க.


07. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் ஏற்பட்ட பண்பாட்டு மறுமலர்ச்சி தொடர்பான மேல்வரும் தலைப்புகளில் ஏதேனும் ஒன்றைப் பற்றி ஆராய்க.

(i) பௌத்த சமய மறுமலர்ச்சி

பெளத்த சமய மறுமலர்ச்சி கத்தோலிக்க சமய மிசனரி இயக்கத்தினரதும் பிரித்தானிய அரசினதும் செயற்பாட்டால் பௌத்தஇந்து, இஸ்லாமிய சமயங்கள் பாரிய சவால்களுக்குட்பட்டிருந்த வேளை தமது சமயத்தைப் பாதுகாத்துக் கொள்ள இம்மறுமலர்ச்சி ஏற்பட்டது.

கோகர்லி போன்ற மதகுருமார் பௌத்த சமயத்தை விமர்சித்தமையால் பௌத்த தலைவர்கள் இதற்கு எதிர் கருத்துக்களை வழங்கியமை, இவ் எதிர்ப்பு இயக்கத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாக மீக்கொட்டுவத்த குணாநந்த தேரரின் பாணந்துறை விவாதம் அமைந்திருந்தது.

இவ்விவாதத்தை பத்திரிகையில் வாசித்த அமெரிக்கரான ஒல்கொட் மற்றும் பிலவட்ஸ்கி அம்மையார் இங்கு வருகை தந்தமை இங்கு பரம விஞ்ஞானரத்த சங்கத்தை நிறுவியமை, பௌத்த கல்வி தொடர்பாக இச்சங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டமை (ஆனந்தா மியுசியஸ்)

பிரிவெனாக் கல்வியில் எழுச்சியுண்டானது.  1873 மாளிகா கந்த வித்யோதய பிரிவெனா. 1875 பேலியகொட வித்தியலங்கார பிரிவெனாக்கள் ஏற்படுத்தப்பட்டன;

பௌத்தர்களின் சில உரிமைகள் வென்றெடுக்கப்பட்டமை. பௌத்த கொடி, வெசாக் போயா தினம்

பௌத்த சஞ்சிகை.புத்தகங்களை வெளியிட அச்சகம் நிறுவப்பட்டது. இதன் மூலம் பௌத்த சமய பிரச்சாரப் பணி முன்னெடுக்கப்பட்டதுடன் பிரித்தானிய அரசின் சில கொள்கைகள் விமர்சிக்கப்பட்டன

புதிய விகாரைகள் நிர்மாணித்தல், தூபாராம, ருவன்வலிசாய போன்றவை புனரமைக்கப்பட்டமை.

(ii) இந்து சமய. இஸ்லாமிய மறுமலர்ச்சி

இந்து சமய, இஸ்லாமிய சமய மறுமலர்ச்சி

கிறிஸ்த்தவ மிசனரி இயக்கம், பிரித்தானிய அதிகாரிகள் சிலரும் தமது சமய கலாசாரத்தை பரப்புவதற்கு கல்வியை ஊடகமாகப் பயன்படுத்தியமைக்காக சுதேச மக்கள் தமது சமய கலாசாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு முன்னெடுத்த நடவடிக்கைகளினால் சமய மறுமலர்ச்சி ஏற்பட்டது.

இந்து சமய மறுமலர்ச்சி

ஆறுமுக நாவலர் முன்னோடியாகச் செயற்படல்

1872இல் இவர் சைவ பிரகாச வித்தியா சாலையை நிறுவி இந்துச் சிறுவர்களுக்கு ஆங்கிலக்கல்வியைப் பெற்றுக் கொடுத்தார்.

வண்ணார்ப்பண்னையில்   அச்சகம் ஒன்றை நிறுவி இந்து சமய நூல்களையும். துண்டுப்பிரசுரங்களையும் வெளியிட்டார்.

சைவசமய நூல்களை மீள்பதிப்புச் செய்தார். பைபிளை தமிழ் மொழிக்கு மொழி பெயர்த்தார்.

சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளில் தேர்ச்சி பெற்ற இவர் சமய மறுமலர்ச்சிக்கு இவற்றைப் பயன்படுத்தினார்.

இஸ்லாமிய சமய மறுமலர்ச்சி

M.C.சித்திலெப்பை தலைவராகச் செயற்பட்டார்.

இஸ்லாமிய கல்வியை எழுச்சி பெறச் செய்தார்

1884இல் சாஹிரா கல்லூரியையும், 1893ல் கண்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியையும் நிறுவியமை.

ஒராபி பாஷா சமய மறுமலர்ச்சிக்கு பூரண ஆதரவு வழங்கினார்.

ஆங்கிலம், அரபு மொழிகளைக் கற்பதில் முஸ்லிம்களை ஊக்கப்படுத்தினார்.

முஸ்லிம் நேசன் பத்திரிகையை ஆரம்பித்தல்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்