Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

26 மே, 2021

தரம் 11 மாணவர்களுக்கான தமிழ் வினா-விடை O/l student tamil question and answer

 


தடித்த எழுத்தில் அமைந்த சொல் பற்றிய வினாவுக்குப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.

01. “அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் --------” இங்கு திங்கள் என்பதன் கருத்து

 1. மாதம்        2. சந்திரன்          3. நாள்          4. கிழமை

02. “முத்துதிர நகை செய்யும் சொத்தாகும் மழலை --------” இங்கு மழலை என்பதன் கருத்து

 1. சிறுவன்          2. குழந்தை           3. முத்து      4. இளைஞன்

03. அறம் தானே என்கின்ற அயல் நின்றாள் தனை நோக்கி ------- இங்கு அறம் என்பதன் எதிர்க்கருத்து

 1. புறம்           2. தர்மம்          3. மறம்          4. அகம்

04. ஆரம்பத்தில் கம்பியு+ட்டருடன் ஏற்பட்ட பிணக்கு நீங்கி ஓர் இணக்கம் ஏற்பட்டது. இங்கு இணக்கம் என்பதன் எதிர்ப்பதம்.

 1. ஒற்றுமை            2. பிணக்கம்            3. குதர்க்கம்          4. தர்க்கம்

05. எயினன் அம்பு தொடுத்தான். இங்கு எயினன் என்பதன் எதிர்ப்பாற் சொல்

 1. எயினி         2. எயினள்           3. எயினை            4. எயிற்றி

06. ”போதம் மூன்றும் நலம் செயும் நாடு”. போதம் மூன்றினுள் அடங்காதது

 1. பிறப்பு        2. வாழ்வு             3 . இறப்பு              4. தாழ்வு

07. ஆலவா(மித்) என்ற கலைச் சொல்லின் தமிழ் வடிவம்

 1. தொன்மம்              2. புனைவு                3. தர்க்கம்                4. முறைமை

08. கட்டு. உறவு, மலம், கயிறு, பாசம் என்னும் பல பொருள் தரும் சொல்

 1. மெய்              2. உரம்                   3. பந்தம்                 4. பரி

09. புலிக்கு போத்து போல குதிரைக்கு

 1. குண்டு                2. வடவை                3. பிணா            4. கலை

 TAMIL STUDY MAX

10. முப்பதாவது ஆண்டின் இறுதியில் கொண்டாடப்படும் விழா

1. மாணிக்கவிழா              2. முத்துவிழா

 3. அமுதவிழா              4. பீங்கான்விழா

11. குற்றத்தை மறைத்தல் என்னும் பொருள் தரும் மரபுத்தொடர்

 1. பு+சி மெழுகுதல்              2. பொடி வைத்தல்

 3. மட்டந்தட்டுதல்                4. பம்பரமாட்டுதல்

12. பிற்காலத் தேவைக்காகச் சேமித்து வைக்கப்படும் பொருள்

 1. எய்ப்பில் வைப்பு                   2. ஓம்படை

 3. ஏகபோகம்                              4. மானியம்

13. அறிஞர் பலர் கூடி வாதிடுங்களம்

 1. விவாதம்                           2. பட்டிமன்றம்

 3. ஆய்வரங்கு                  4. கருத்தரங்கு

14. ஒரு கூட்டத்தினர், ஒரு பொருளை அதற்குரிய சொல்லாற் கூறாது வேறு சொல்லாற்

 குறிப்பது

 1. இடக்கரடக்கல்              2. மங்கலம்

 3. குழூஉக்குறி                    4. மரூஉ

15. ”வீண் செலவு செய்யினும் அக்கணக்கையும் அறிந்திருத்தல் நன்றுஎன்னுங் கருத்தமைந்த பழமொழி

 1. வளவனாயினும் அளவறிந்து அளித்துண்

 2. ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு

 3. விரலுக்குத் தக்கது தான் வீக்கம்

 4. பாத்திரமறிந்து பிச்சையிடு


தரம் 11 மாணவர்களுக்கான தமிழ் வினா-விடை 
O/l student tamil question and answer 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்