Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

27 மே, 2021

தரம் 11 மாணவர்களுக்கான தமிழ் வினா-விடை O/l student tamil question and answer (02)

 தரம் 11 மாணவர்களுக்கான தமிழ் வினா-விடை தொடர்ச்சி

16. பயனற்ற முயற்சியில் ஈடுபடல் என்ற பொருள் தராத உவமைத் தொடர்

 1. ஆற்றில் கரைத்த புளி போல              2. அக்கினியிற்பட்ட மெழுகு போல

 3. புறக்குடத்தில் வார்த்த நீர் போல      4. விழலுக்கு இறைத்த நீர் போல


17. ”வாழையடி வாழையாகஎன்ற அருஞ்சொற்றொடரால் உணர்த்தப்படுவது

 1. நன்றியுணர்வு                            2. உபகாரத்தன்மை

 3. பாரம்பரியத் தொடர்ச்சி        4. மாற்றமின்மை

 

18. வெட்ட வெளியில் தனியாகச் சென்றேன். இங்கு வெட்டவெளி என்பது

 1. அடுக்குத்தொடர்    2. அடுக்கிடுக்குத்தொடர்

 3. இரட்டைக்கிளவி     4. இணைமொழி


19. மிதமிஞ்சிய ஆசை ஆபத்தானது. மிதமிஞ்சிய என்பதற்கு நிகரான சொல்

 1. முறைகேடான          2. அநீதியான

 3. அளவுக்கதிகமாக    4. கணிசமான


20. பெயர்ச் சொல்லும் பெயர்ச்சொல்லும் சேர்ந்தமைந்த கூட்டுப்பெயர்

 1. தொலைக்காட்சி        2. நீரேரி

 3. ஏவுகணை                    4. பறிமுதல்


21. கெடுதல், தோன்றல் விகாரங்கள் இடம்பெற்றுப் புணர்ந்த சொல்

 1. பலாவிலை          2. பழச்சாறு

 3. பழமரம்                4. பனையோலை


22. ”மழை பொழியட்டும்இதில் வரும் பொழியட்டும் என்பது

 1. குறிப்புவினை               2. ஏவல்வினை

 3. வியங்கோள்வினை    4. எதிர்மறை வினை

 

23. பின்வருவனவற்றுள் பின்னொட்டாக அமையாதது

 1. நோயாளி           2. உடன்பாடு

 3. ஆட்டம்                4. அநீதி


24. முற்றாகவும், எச்சமாகவும் வரும் சொல்

 1. பாயும்                  2. பாய்ந்த

 3. ஓடினான்              4. பாடு


25. இனி விடியும் என்பது

 1. எழுவாய்த்தொடர்              2. பெயரெச்சத்தொடர்

 3. இடைச்சொற்றொடர்          4. உரிச்சொற்றொடர்


தரம் 11 மாணவர்களுக்கான தமிழ் வினா-விடை 
O/l student tamil question and answer (02)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்