Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

28 மே, 2021

தரம் O/L மாணவர்களுக்கான பகுதி 1 வினா விடை தொகுப்பு Tamil part 1 questions and answer

தரம் O/L மாணவர்களுக்கான பகுதி 1 வினா விடை தொகுப்பு



  1. பேதையின் பேதையர் இல்இதில் பேதை என்பது.
    1. அறிவு 2. அறிவிலி 3. ஞானி 4. அறிவுடையார்


  1. நற்றேர்ப் பொய்கை ஊரன் கேண்மைஇங்குகேண்மைஎன்பது.
    1. நட்பு 2. உறவு 3. பகை 4. அறிவு



  1. ஏதிலார் ஆரத்தமர் பசிப்பர் இங்கு ஏதிலார் என்பதன் எதிர்ப்பதம்.
    1. நண்பர் 2. அயலவர் 3. உறவினர் 4. பகைவன்


  1. தர்மபுத்திரர் அறத்தையே இலட்சியமாகக் கொண்டவர் இங்கு அறம் என்பதன் எதிர்ப்பதம்.
    1. தர்மம் 2. கொடை 3. வள்ளல் 4. மறம்



  1. பாரி மகளிர் தந்தை இறந்ததால் கவலையுற்றனர். இங்கு மகளிர் என்பதன் எதிர்ப்பதம்.
    1. சிறுவன் 2. கணவன் 3. நண்பன் 4. ஆடவர்


  1. அறிஞர்களின் கூட்டம் அவை எனப்படுவது போல உடுக்களின் கூட்டம்.
    1. திரள் 2. தொகுதி 3. கூட்டம் 4. குவியல்



  1. யானையின் இளையது போதகம் என்பது போல கிளியின் இளையது.
    1. குழவி 2. பறள் 3. குஞ்சு 4. குட்டி


  1. பிஞ்சு, தழும்பு, காயம் எனும்பல பொருளைக் குறிக்கும் ஒரு சொல்
    1. கரி 2. வடு 3. விலங்கு 4. அன்னம்



  1. Museum (மியூசியம்) என்பதன் கலைச் சொல்லின் தமிழ் வடிவம்.
    1. கனிப்பொருள் 2. மிருகக்காட்சிச்சாலை 3. ஊடகம் 4. அருங்காட்சியகம்


  1. அரசன் சபா மண்டபத்தில் அமைச்சர், படைத்தலைவர், அறிஞர் முதலிய பரிவாரத்தினர்
    சூழ இருக்கும் இருக்கை.
    1. சிம்மாசனம் 2. ஓலக்கம் 3. கதிரை 4. சபாமண்டபம்  



  1. கால் கொள்ளுதல் என்ற மரபுத் தொடரின் பொருள்.

1. ஆரம்பமாதல் 2. முடிவடைதல் 3. நிறைவுபெறுதல் 4. நிற்றல்


  1. கடவுள் இல்லை என வாதிடுபவன்.

 1. ஆத்திகன் 2. தேவதாசன் 3. நாத்திகன் 4. சாமியார்


  1. கோயில்களில் புராணக்கதைகளை சுவைபட பிரசங்கம் செய்வோன்.

 1. பௌராணிகன் 2. பூசாரி 3. வேதாந்தி 4. பிரசங்கி


  1. செத்தான் என்பதன் வினையடி.

 1. செத்து 2. மரணம் 3. சா 4. சாவு


  1. மனங் கொண்டது மாளிகை இதற்கு இணையான பழமொழி.

 1. உப்பிட்டவரை உள்ளளவும் நினை

 2. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து

 3. யானைக்கும் அடி சறுக்கும்

 4. வெள்ளைக் கில்லை கள்ளச்சிந்தை


  1. தெட்டத் தெளிவு என்ற கருத்தைத்தரும் உவமைத் தொடர்.

 1. முந்திரிக் கொட்டை போல

 2. அனலில் இடப்பட்ட மெழுகு போல

 3. குடத்துள் விளக்கு போல

 4. உள்ளங்கை நெல்லிக்கனி போல


  1. உளுவரிசி என்ற பேச்சு வழக்குச் சொல்லின் நியம வடிவம்.

 1. அரிசி 2. சவ்வரிசி 3. வெந்தயம் 4. உளுந்து


  1. அட்டிகை என்பது எம்மொழிச் சொல்.

 1. கன்னடம் 2. தெலுங்கு 3. சிங்களம் 4. டச்சு


  1. அரசன் நாட்டை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தான் இதில் வந்துள்ள “சீரும் சிறப்பும்”

 1. இணைமொழி 2. அடுக்குத்தொடர் 3. உவமைத்தொடர் 4. அடுக்கிடுக்குத்தொடர்


  1. ஓரெழுத்து ஒருமொழியாக அமைவது.

 1. ப 2. கி 3. ஆ 4. கு








Tamil part 1 questions and answer 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்