A/l 2017 கடந்த கால வினா விடை இலங்கைவரலாறு .பாகம்-03
08. (A) பகுதிக்கு அல்லது (B) பகுதிக்கு மட்டும் விடை எழுதுக.
(A) சோல்பரி அரசியலமைப்பின் பிரதானமான அம்சங்களைப் பரிசீலனை செய்க.
1947ஆம் ஆண்டு ஆணைக்குழுவின் பரிந்துரையின் படி இவ்வரசியல் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவாக்கம், நிர்வாகம், நீதி மற்றும் தேசாதிபதியைக் கொண்டதாக பாராளுமன்ற ஆட்சி முறையாக இருந்தமை.
பிரித்தானிய அரசின் பிரதிநிதியாக தேசாதிபதி இருந்தார்.
சட்டவாக்க சபை, பிரதிநிதிகள் மற்றும் செனட் சபை ஆகிய இரு சபைகளைக் கொண்டிருந்தமை. மக்கள் பிரதிநிதிகள் சபையில் 101 பேர் அங்கம் வகித்தன வாக்குரிமை மூலம் 95 பேரும் தேசாதிபதியினால் பிரதமரின் ஆலோசனைப் படி 06 பேர் நியமிக்கப்பட்டனர்.
சட்டம் இயற்றுதல், நிதி நிர்வாகம் பாராளுமன்றம் வசமானது, எனினும் சட்டம் இயற்றும் போது சில வரையறைகள் விதிக்கப்பட்டிருந்தன.
விஷேடமாக சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் இது விதிக்கப்பட்டிருந்தது.
அரச சேவை ஆணைக்குழு. நீதிச் சேவை ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டமை.
1972ஆம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பு நடைமுறைக்கு வரும் வரை இது சிறு சிறு திருத்தங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது.
(B) 1972 ஆம் ஆண்டு குடியரசு அரசியலமைப்பின் பிரதானமான அம்சங்களைப் பரிசீலனை செய்க.
1972 ஆம் ஆண்டு அரசியல் திட்டத்தை மக்கள் பிரதிநிதிகள் சபை அங்கத்தவர்கள் ஒளிநிகணந்து ஏற்படுத்தினர்.
. இது 1972 1978ஆம் ஆண்டு வரை அமுலில் இருந்தது.
இவ்யாப்பின் கீழ் நடாத்தப்பட்ட ஒரே ஒரு தேர்தல் 1978ஆம் ஆண்டு இடம்பற்றது. 168பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
இதில் ஓரவைப் பாராளுமன்றம் "தேசிய அரசுப் பேரவை"என்ற பெயரில் முன்னர் இருந்த செண்ட சபையை நீக்கி விட்டு உருவாக்கப்பட்டது.
. பிரதமரால்
நியமிக்கப்படும் பேரளவு ஜனாதிபதி
பிரதமரைத் தலைவராகக் கொண்ட அமைச்சரவை (உண்மை நிர்வாகி)
அடிப்படை மனித உரிமைகள் தொடர்பான வெளியீடு, தேசிய மொழி, தேசிய மதம் தேசிய கீதம் தேசியக் கொடி அரசியல் திட்டத்தினுள் சேர்க்கப்பட்டமை. பௌத்த சமயத்தை பாதுகாத்தல் போசித்தல் தொடர்பான சரத்து சேர்க்கப்பட்டது.
பௌத்த சமயத்திற்கு முதலிடம் வழங்கிய அதே வேளை ஏனைய சமயங்கள வழிபடும் உரிமை வழங்கப்பட்டுள்ளமை.
1948ஆம் ஆண்டு முதல் அமுலில் இருந்த அரசசேவை ஆணைக்குழு, மற்றும் நீதிச் சேவை ஆணைக்குழுக்கள் இரத்துச் செய்யப்பட்டன.
இதுவரை பிரித்தானியப் பேரரசுடன் இருந்த தொடர்புகள் நீக்கப்பட்டன.
பிரித்தானிய மகாராணி இலங்கையின் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டமை (தேசாதிபதி பதவி நீக்கப்பட்டமை)
பிரிவுக் கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்யும் நடைமுறை நீக்கப்பட்டமை.
இலங்கை தன்னாதிக்கம் கொண்ட நாடாகியமை, அத்துடன் இலங்கையின் பெயர் ஸ்ரீ லங்கா என மாற்றப்பட்டது.
இந் நாட்டை தன்னாதிக்கமுள்ள நாடாக மாற்றிய முதலாவது மக்களாட்சி அரசியல் திட்டமாக இது காணப்பட்டமை.
09.மேல்வருவனவற்றுள் எவையேனும் இரண்டின வரலாற்று முக்கியத்துவம் பற்றிச் சுருக்கமான குறிப்புகள் எழுதுக.
(i) அநுராதபுர காலத்துத் தென்னிந்தியப் படையெடுப்புகள்
அனுராதபுர காலத்தில் தென் இந்திய ஆக்கிரமிப்புக்கள் பல இடம் பெற்றன. இதனை ஆரம்பகாலம்,பிற்பட்ட காலம் என இரண்டாக வகுக்கலாம்.
ஆரம்ப கால ஆக்கிரமிப்புக்கள் திட்டமிடப்படாத மற்றும் தனிப்பட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டமைந்திருந்தன. எனினும் பிற்பட்ட கால ஆக்கிரமிப்புக்கள் திட்டமிடப்பட்டதாக இடம்பெற்றது.
இவற்றுள் மிகப் பலமான ஆக்கிரமிப்பாக.
- சூரதிஸ்ஸனின் காலம் - சேனன் குத்திகன் (குதிரை வியாபாரி)
- அசேலனின் காலம் - எல்லாளன்
- வலகம்பா காலம் - பஞ்ச திராவிட ஆக்கிரமிப்பு
- வங்க நாசிக திஸ்ஸ காலம் -கரிகால சோழன்
- மித்த சேன அரசன் காலம் - 7 தமிழர் ஆக்கிரமிப்பு
- முதலாம் சேனன் காலம் - ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லவன்
- நாலாம் உதயன் - பராந்தகன்
- நாலாம் மகிந்தன் - இரண்டாம் கிருஷ்ணன்
- ஐந்தாம் மகிந்தன் - முதலாம் ராஜ ராஜன் பின்னர் முதலாம் இராஜேந்திரன்
(ii) கம்பளை இராச்சியம்
குருநாகலை இராசதானியின் பின் தோன்றியது.
ஆரம்பத்தில் "கங்கசிறிபுர"எனும் பெயரால் அழைக்கப்பட்ட இது தற்போது மத்திய மாகாணத்தில் அமைந்துள்ளது.
கடலாதெனிய, எம்பக்க, லங்காதிலக தேவாலயங்கள் இக்காலப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டன.
ஆரம்ப தூது விடு காவியங்களான மயுர, திசர காவியங்கள் மற்றும் சத்தர்ம லங்கார என்பன இக்காலப் பகுதியில் இயற்றப்பட்டன.
(iii)யாழ்ப்பாண இராச்சியமும் போர்த்துக்கேயரும்
போர்த்துக்கேயர் இங்கு வரும் போது புத்தளம், திருகோணமலை பகுதிகளை உள்ளடக்கியதாக யாழ்ப்பாண இராச்சியம் இயங்கியதுடன் அரியர் சக்கரவர்த்திகளால் ஆளப்பட்டு வந்தது.
16ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் யாழ்ப்பாண இராசதானி மீது போர்த்துக்கேயர் அதிகம் கரிசனை காட்டவில்லை.
ஏனெனில் கோட்டை இராசதானி மீது அதிகம் ஈடுபாடு காட்டியமை.
வாசனைத் திரவிய வர்த்தகத்தின் மூலம் இலாபம் ஈட்ட முற்பட்டமை.
1520 இல் இவர்கள் யாழ்ப்பாணம் மீது கவனம் செலுத்தியமைக்கு ஏதுவாகப் பல காரணிகள் காணப்பட்டன.
- கத்தோலிக்க சமயத்துக்கு எதிராக சங்கிலியன் மேற்கொண்ட நடவடிக்கைகள் பிரான்சிஸ் சேவியர் அருட்தந்தையின் பணிகளிற்கு இடையூறு செய்தமை.
- யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பை பலப்படுத்தியமை, கோட்டையைப் புனரமைத்தமை.
- கடற்கரையோரமாக மூழ்கும் கப்பல்களின் சொத்துக்களை அரச உடமையாக்கியமை. (சங்கிலியன்)
இவ்வாறான காரணிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிக் கொள்ள போர்த்துக்கேயர் முயற்சித்தனர்,
- 1543ஆம் ஆண்டு சங்கிலியனுக்கு எதிராக மார்ட்டின் அபொன்சோ த சூசா நடாத்திய ஆக்கிரமிப்பு
- 1560 இல் கொன்ஸ்தன் தீனு த சா. பிரகன்சாவின் ஆக்கிரமிப்பு போர்த்துக்கேயருக்குக் கீழ்படிந்த பெரிய புள்ளை செகராசசேகரன் அரசனாக நியமிக்கப்பட்டமை.
- 16ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் போர்த்துக்கேயர் இந்த இராசதானி தொடர்பாகக் கவனம் செலுத்தினர். (சமயக் காரணிகளால் )
- உதாரணமாக 1591ஆம் ஆண்டு மென்டொன்சா என்ற தளபதி கத்தோலிக்க எதிர்ப்புக் காரணமாக
- யாழ்ப்பாண அரசனைக் கொலை செய்து, பரராஜ சேகரம் என்பவனை அரசனாக்கினான்.
- 1591ஆம் ஆண்டு மென்டொன்சாவின் தாக்குதலில் யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டமை.
- நல்லூர் மாநாட்டுடன் பகுதியளவில் போர்த்துக்கேய நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டது.
- 1621ஆம் ஆண்டு முழுமையாக போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைத் தமதாக்கினர்.
(iv) கரையோர மாகாணங்களில் ஒல்லாந்தர் கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கை.
ஒல்லாந்தர் இரண்டு வகையான பொருளாதாரக் கொள்கையினைக் கடைப்பிடித்தனர்.
- ஐரோப்பாவில் அப்போது அதிக கேள்வியுள்ள பொருட்களை இந்நாட்டில் பெற்றுக் கொள்வது.
- இலங்கைத் துறை முகங்களின் வர்த்தக ஆதிக்கத்தை தன் வசமாக்குதல் (அராபிய சீன, மலபார் வர்த்தகர்களைப் புறந்தள்ளி)
ஒல்லாந்தரின் வர்த்தக நடவடிக்கைகள் ஒல்லாந்து கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி மூலம் முன்னெடுக்கப்பட்டது.
இவர்கள் பாரம்பரிய நில உடமைக் கொள்கையைக் கையாண்டனர்.
இலங்கையில் காணி தொடர்பான "தோம்பு"தயாரிக்கப்பட்டதன் மூலம் பெறுமதியான காணி தொடர்பான விபரங்களைப் பெற்றுக் கொண்டனர்.
சாதி பேதம், கட்டாய இராஜகாரிய சேவையை இவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.
சுதேச வரி முறைகளை இவர்களும் பயன்படுத்தியமை. மரால வரி (மரண வரி தேங்காய் வரி இரண்டும் போதிய வருமானத்தைப் பெற்றுத்தந்த இருவரிகளாகும்.
சில பொருட்களை வர்த்தகம் செய்யும் உரிமை ஒல்லாந்திற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருந்தது. (வர்த்தக ஏக போக உரிமை) உதாரணமாக கராம்பு, யானைகள், இரத்தினக் கல் அகழ்வு, முத்துக் குளித்தல். .
பாக்கு வியாபாரத்தை மேற்கொண்டனர்.
மலைநாட்டுடனான உள்நாட்டு வியாபாரத்தை மேற்கொண்டமை.
உப்பு கருவாடு போன்றவற்றை மலைநாட்டிற்கும் அங்கிருந்து மிளகு, பாக்கு, கராம்பு, தேன்பாணி போன்ற பொருட்களைக் கரையோரங்களிற்கு எடுத்து வந்து விற்பனை செய்தனர்,
ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தை மேற்கொண்டனர்.
அரசாங்கத்தின் செலவினைக் குறைக்கும் வகையில் அரிசி உற்பத்தியை மேற்கொண்டனர்.
ஏற்றுமதி இறக்குமதி வியாபாரத்தை மேற்கொண்டனர்.
முத்து ராஜவெலப் பகுதியை விவசாயத்திற்குட்படுத்தியமை. ஊருபொக்க குளத்தைப் புனரமைத்தமை.
பருத்தி உற்பத்தி, ஆடைகளிற்கு நிறம் தீட்டுவதற்குப் பயன்படும் இண்டிகோ பயிரிட்டமை. சில பகுதிகளில் கறுவா பயிரிட்டமை உதாரணமாக கதிரான . எவரிவத்த, கறுவா தோட்டம்.
(v) பத்தொன்பதாம் நூற்றாண்டிற் பிரித்தானியர் ஆட்சியிற் கோப்பிப் பெருந்தோட்டங்கள்
ஒல்லாந்தர் கரையோரப்பகுதிகளில் கோப்பியை வர்த்தகப்பயிராக பயிரிட்டிருந்தாலும் அது அவ்வளவு வெற்றியளிக்கவில்லை.
எனினும் ஆங்கிலேயர் மலைநாட்டில் இதனைப் பயிரிட்டனர். ஜோர்ஜ் பட் முதலில் கம்பளையில் சிங்ஹபிட்டி எனும் இடத்தில் முதலாவது கோப்பித்தோட்டத்தை ஆரம்பித்தார். எட்வட் பாண்ஸ் ஆளுனர் கன்னொறுவையில் கோப்பித் தோட்டம் ஒன்றை ஆரம்பித்தார்.
1833ஆம் ஆண்டு அரச ஆதரவு இதற்கு கிடைத்தது.
கோல்புறூக் சீர்திருத்தம் கோப்பிச் செய்கையின் வளர்ச்சிக்கு உதவியது. (மூலதனம், நிலம், ஊழியர்)
1840 இல் 12ஆம் இலக்கத் தரிசு நிலச் சட்டம் இதன்மூலம் கோப்பிச்செய்கைக்குத் தேவையான நிலங்களை ஐரோப்பியர் இலகுவாகப் பெற்றுக் கொண்டனர்.
இக்காலப்பகுதியில் கோப்பிக்கு அதிக கேள்வி ஏற்பட்டதனால் கோப்பிச் செய்கை மீது இவர்கள் ஆர்வம் காட்டினர்.
1847ஆம் ஆண்டு உலகப் பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்நாட்டில் கோப்பிச்செய்கையும் வீழ்ச்சியடைந்து 1850 இல் மீண்டும் எழுச்சி பெற்றது.
எவ்வாறாயினும் 1869ஆம் ஆண்டு கோப்பிச்செடிக்கு ஏற்பட்ட இலைவெளிறல் நோயினால் இந்நாட்டில் கோப்பிச் செய்கை விழ்ச்சியடைந்தது.
(vi) இலங்கைத் தேசிய காங்கிரஸ்
1915ஆம் ஆண்டு சிங்கள, முஸ்லிம் கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு கையாண்ட வழிமுறைகளை சுதேசிகள் வெறுத்தமை.
இலங்கையர்கள் தொடர்பாக ஒன்றித்துச் செயற்படுவதற்கு பலமான ஒரு அமைப்பின் தேவையை சுதேசத் தலைவர்கள் உணர்ந்தனர்.
அப்போது இந்தியாவில் செயல்பட்ட இந்திய தேசிய காங்கிரஸின் செயற்பாட்டை ஒத்த அமைப்பொன்றை இங்கு இவர்களும் ஏற்படுத்த முயன்றனர்.
. 1919 ஆம் ஆண்டு சேர் பொன்னம்பலம் அருணாச்சலம் தலைமையில் இச்சங்கம் உருவானது.
பல்வேறு இனங்களைப் பிரதிநிதித்துவம் செய்த தலைவர்கள் இச்சங்கத்தில் இருந்தமை, ஆங்கிலம் கற்ற நபருக்கு இதன் தலைமை பொறுப்பு வழங்கப்பட்டமை.
அரசியல் திட்டக் கோரிக்கைகளை இது அதிகம் மேற்கொண்டு வெற்றி பெற்றமை.
கொழும்பில் அங்கத்தவர் பிரதிநிதித்துவம் தொடர்பாக ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் இலங்கை தேசிய காங்கிரஸில் இருந்த சிங்கள, தமிழ் தலைவர்களிடையே பிணக்கு ஏற்பட்டமை.
இதனால் தமிழத் தலைவர்கள் தேசிய காங்கிரஸில் இருந்து வெளியேறியமை.
இச்சங்கத்தின் பயனாக சுதேசத்தலைவர்கள் அரசியல் தொடர்பான அனுபவத்தையும், பயிற்சியையும் பெற்றுக் கொண்டதுடன் அரசியல் திட்ட சிர்திருத்தம் தொடர்பான போராட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுக்க முடிந்தது.
![]() |
| Download PDF |


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக