Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

21 மே, 2021

ஸ்ரான்லி அபேசிங்ஹ grade 11 Art Notes in Tamil

 

ஸ்ரான்லிஅபேசிங்ஹ (1914-1992)

 

 

ஸ்டான்லி அபேசிங்ஹ இருபதாம் நூற்றாண்டின் நவீன கலை வரலாற்றில் ஆரம்ப காலத்தில் தோன்றிய சிறந்த ஒரு சித்திரக் கலைஞர் ஆவார்.

 

1914 இல் பிறந்த ஸ்டான்லி அபேசிங்ஹ இலங்கை தொழில் நுட்பக் கல்லூரியில்

சித்திரக்கலை பயின்று, இந்தியாவுக்குச் சென்று கீழைத்தேய சித்திரக்கலையையும் பயின்று, அதன் மூலம் பெற்ற செல்வாக்கைத் தமது சித்திரப் படைப்பாக்கத்துக்கு அடிப்படையாகக் கொண்டார்.

 

இவர் பல்வேறு கலைச் செல்வாக்குகளுடன் தமக்கேயுரித்தான சித்தரக்கலைப் பாரம்பரிய மொன்றினை உருவாக்குவதில் முன்னின்ற ஒரு கலைஞராவார்.

 

அரச கலைக்கல்லூரி ஆசிரியராகவும், 1965-1969 வரையில் அதன் அதிபராகவும்செயற்பட்டுள்ளார்.

 

43 குழுவினரின் நவீனத்துவ வெளிப்பாட்டுக்குச் சமாந்தரமாக அரச நுண்கலைக் கல்லூரியில் நவீன பாணியின் செல்வாக்கைப் பெற்று புதியதொரு போக்கைக்கட்டியெழுப்பிய முதன்மையான முன்னோடி என இவரைக் குறிப்பிடலாம்.

                                                                        .....TAMIL STUDY MAX....

ஸ்டான்லி அபேசிங்ஹவினது படைப்புக்களில், மரபுரீதியான கலையின் பாணிசார்ந்த வடிவங்கள், பின் மனப்பதிவுவாத, வெளிப்பாட்டுவாத ஓவியக்கலைப் போக்குகளினதும் வர்ணப் பயன்பாட்டினதும் செல்வாக்கைக் காணமுடிகின்றது.

 

படைப்புக்களின் பின்னணிக்காக, கனவடிவவாதக் கலையின் பின்னணி வெளியினது பண்புகளின் செல்வாக்கு பெறப்பட்டுள்ளமையைக் காணமுடிகிறது.

குறுகிய தடித்த கோடுகளின் பயன்பாடு அவரது ஓவியப் படைப்புக்களில் காணப்படும் ஒரு சிறப்பியல்பாகும்.

 

ஸ்டான்லி அபேசிங்ஹவினது சில கலைப்படைப்புக்கள் வருமாறு

மட்பாண்டக்கூடம்

ஆவணி ஊர்வலம்

தியானம்

பாலகன் - இளைஞன்

லக்ஷ்மியின் பிறப்பு


https://tamilstudymax.blogspot.com/
ஸ்ரான்லி அபேசிங்ஹ grade 11 Art Notes  in Tamil

TAMIL STUDY MAX


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்