கைத்தொழிற்புரட்சியின் வளர்ச்சி
கைத்தொழிற்புரட்சி,
பிரதானமாக மூன்று துறைகளின் வழியே வளர்ச்சிடைந்தது
1.
நெசவுக்
கைத்தொழில்
2.
நிலக்கரிக் கைத்தொழில்
3.
இரும்புக் கைத்தொழில்
இத்துறைகளில்
ஏற்பட்ட வளர்ச்சி, படிப்படியாக போக்குவரத்து, தொடர்பாடல்,விவசாயம் ஆகிய துறைகளிலும்
வளர்ச்சிடைந்தது
நெசவுக் கைத்தொழில்
கைத்தொழிற்
புரட்சிக்கு முன்னர், வீடுகளில் குடிசைக் கைத்தொழிலாகவேபுடைவை உற்பத்தி இடம்பெற்றது.
கைத்தொழிற்
புரட்சியின் அபிவிருத்தி காரணமாகப் பொறிகள், இயந்திரங்களைப்பயன்படுத்திப் பாரிய அளவில்
புடைவை உற்பத்தியை அதிகரிக்கத்தக்கவகையில் உற்பத்தி நடவடிக்கைகள் விருத்தியடைந்தன.
அதற்குத் துணையாக
அமைந்த புதிய கண்டுபிடிப்புக்கள்
1.
1733
ஆம் ஆண்டில் இல் ஜோன் கே என்பவரால் நூனாழி (பறக்கும் தறி ஒடம்) உற்பத்தி செய்யப்பட்டமை
2.
எலியஸ்
கேவே என்பார் புடைவை தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தமை.
3.
ஜேம்ஸ்
ஹாகிரீவ்ஸ் என்பார் ஜெனி இயந்திரத்தைக் கண்டுபிடித்தமை
4.
ரிச்சட்
ஆர்த்ரைற் என்பவரின் நூல் நுற்கும் இயந்திரம்
புதிய இயந்திரங்கள்,
பொறிகள் பல்வேறு புடைவை வடிவமைப்புக்கள் என்பனவற்றில் விருத்தியடைந்த நெசவுக் கைத்தொழிலின்
வளர்ச்சிஇன்றுவரையில் பல்வேறு கண்டுபிடிப்புக்களின் வழியே தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது
இரும்பு, உருக்குக் கைத்தொழில்
நெசவுக் கைத்தொழிலின் அளவுக்கு துரிதமாக வளர்ச்சியடையாத போதிலும்பிரித்தானியாவின் கைத்தொழில் மயமாதலுக்கு இது துணையாக அமைந்தமை.
பிரித்தானியா இரும்புத் தாதுப்படிவுகள் பெருமளவில் காணப்படும் ஒரு நாடாக இருத்தல்.
கைத்தொழிற் புரட்சிக்கு முன்னரும் பிரித்தானியாவில் இரும்பு உருக்கு உற்பத்தி காணப்பட்டமையும் அவை ஆயுதங்கள் வீட்டுத் தளபாடங்கள் விவசாய உபகரணங்கள பேன்றவற்றை உற்பத்தி செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டமையும்.
TAMIL STUDY MAX
· இரும்புத்தாது உருக்குவதற்காக விறகு பயன்படுத்தப்பட்டு வந்தமை
· இரும்புத்தாது உருக்குவதற்காக புதியமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டமை
· ஏபிரகாம் டர்பி என்பவர் இரும்புத்தாதை உருக்குவதற்கு நிலக்கரியைப்பயன்படுத்தியமையும் வார்ப்பிரும்பு உற்பத்தி செய்தமையும்
· ஹென்ரி கோட் என்பவரால் உற்பத்தி செய்யப்பட்ட உருளை (ரோவர்) இயந்திரத்தினால் பதப்படுத்திய இரும்பு உற்பத்தி செய்யப்பட்டமை
· ஹென்ரி பெஸமர் என்பவர், இரும்புத் தாதுவிலிருநது கழிவுப்பொருள்களை அப்புறப்படுத்தி உருக்கு உற்பத்தி செய்யத்தக்க உலையைக் கண்டுபிடித்தமை
· திறந்த உலை முறையில் உயர்தர உருக்கு உற்பத்தி செய்யப்பட்டமை
· விலியம் சீமன்ஸ் என்பாரால் இரும்புத்தாதை உருக்குவதற்காக மின் உலைஉற்பத்தி செய்யப்பட்டமை
· உருக்குத் தொழிலுடன் ஆரம்பித்த கண்டுபிடிப்புக்கள் இன்று வரையில்தொடர்ந்த வண்ணமுள்ளன.
![]() |
கைத்தொழிற்புரட்சியின் வளர்ச்சி grade 11 history notes in tamil |
![]() |
TAMIL STUDY MAX |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக