Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

21 மே, 2021

3.நாடகத் தயாரிப்புப்பற்றி அறிந்து கொள்வோம் grade 11 drama notes in tamil

 

3.நாடகத் தயாரிப்புப்பற்றி அறிந்து கொள்வோம்

நாடகத் தயாரிப்பு என்பது நாடகக் கலைப் படைப்பினை மேடையேற்றுவதற்கானஅடிப்படைகளைத் தோற்றுவிப்பதுடன் கலைப் பெறுமானங்களுக்கான சூழல்களைத்திட்டமிடுவதுடன் கூடிய முகாமைத்துவச் செயற்பாடு எனலாம்.

நாடகம் ஒன்றை மேடையேற்றுவதற்கு முன்னர் தயாரிப்பாளர் சில படிமுறைகளைச்செய்ய வேண்டியது அவசியமாகும்.

அதாவது, நாடகத்தினை நெறியாள்கை செய்வது யார், நடிகர் யார், பார்ப்போர் யார், எங்கே மேடையேற்றுவது, எப்போது மேடையேற்றுவது இதற்கான மனித, நிதி வளங்களை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது என்பன போன்றவற்றைத் திட்டமிடுதல் அவசியமானது.

நாடகத் தயாரிப்பாளரின் பணிகள்

1.     நாடகத்தின் கலைத்துவம் சாரா விடயங்களுக்குத் தலைமை தாங்குதல்.

2.     நாடக எழுத்துரு, நெறியாளர் தெரிவு (நடைமுறையில் பெரும்பாலும் நெறியாளராலும் எழுத்துருத் தெரிவு செய்யப்படுவதுண்டு).

3.     நடிகர்களை ஒழுங்குபடுத்திக் கொடுத்தல்

4.     நிதிக் கையாள்கை.

5.     விளம்பரப்படுத்தல்

6.     நுழைவுச் சீட்டுக்களை வழங்குதல்

7.     ஏனைய கலைஞர்களை வழங்குதல் (துணைக் கலைஞர்கள்)

 

 

மேலும், தயாரிப்பாளர் தனது பணிகளைத் திறம்பட மேற்கொள்வதற்கு அவருக்குச் சில தகைமைகள் அவசியமாகும். அவை,

 தலைமைத்துவம்.

 ஆலோசனை கூறும் திறன்.

 வழிப்படுத்தும் ஆற்றல்.

 நாடகம் பற்றிய அறிவு.

 நிதி நிர்வாகத் திறன்.

 தொடர்பாடற்றிறன்.

 TAMIL STUDY MAX

நாடகமொன்றிற்குறிய காட்சி விதானிப்பு

 

 

காட்சி விதானிப்பு என்பது நடிகனின் நடிப்புக்குத் துணையாக அமையும் ஒரு கலையாகும்.

 

 கட்புல விளைவை ஏற்படுத்தும் காண்பிய மூலகங்களில் ஒன்றாகும்.

 

நாடகத் தயாரிப்பின் போது, நடிகர்நடமாடும் பௌதிகச் சூழலை நிலை நிறுத்துவதாக அமையும்.

 

அரங்கப் பொருள்கள் (திரைகள், பக்கத்திரைகள், வான்திரை, தட்டு முட்டுகள்,கைப்பொருள்கள் எனப் பலவும்) இதற்குள் அடங்கும்.

 

காட்சி விதானிப்பின் போது பயன்படுத்தப்பெறும் பொருள்கள் நாடகத்திற்குப் பொருத்தமானதாக அமைய வேண்டும்.

 

· காட்சி விதானிப்பு என்பது,

 சூழலை, ஆற்றுவோருக்குப் படைக்கும்.

 தயாரிப்பின் மோடியை உணர்த்தும்.

 நடிப்பின் எல்லையை வரையறுக்கும்.

 காலத்தைக் காட்டும்.

 கதையைத் தெளிவுபடுத்தும்.

 பிரதேசத்தை எடுத்துக்காட்டும்.

 தயாரிப்பின் மனநிலையைத் தரும்.

 ஆற்றுகை வெளியை உருமாற்றம் செய்யும்.

 

காட்சி விதானிப்பானது நாடக மோடிகளுக்கமைவாக மாற்றமுறும்.


 TAMIL STUDY MAX

யதார்த்த நாடகங்களில் மனோரதிய நாடகங்களில்          

உள்ளது உள்ளபடியே, காட்டுதல்  ஆடம்பரமான, அழகான சீனறி;கள், சிம்மாசனங்கள்,  விரிப்புக்கள் மற்றும் பிற.

யதார்த்த விரோத நாடகங்களில்     

குறியீட்டுப் பாணியிலான காட்சி விதானிப்புக்கள்.


3.நாடகத் தயாரிப்புப்பற்றி அறிந்து கொள்வோம்
grade 11 drama notes in tamil

TAMIL STUDY MAX


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்