Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

30 மே, 2021

A/L மாணவர்களுக்கான இந்து நாகரிகம் வினா விடை தொடர்ச்சி A/L Hidu civilization question with Answer

இந்துப்பண்பாடு

1.பண்பாடு என்ற சொல்லினை முதலில் தமிழில் பிரயோகித்தவர் யார்?

T.K.சிதம்பரநாத முதலியார்

2.பண்பாடு என்பதன் பொருள்?

குறித்த ஓர் இனமோ , சமுதாயமோ தனது அறிவாலும் ,அனுபவத்தாலும், சிந்தனைத்திறனாலும் தனக்கென வகுத்து பேணிவரும் செயற்பாடே பண்பாடு.

3.பழந்தமிழ் இலக்கியங்களில் பண்பாடு என்பதால் சுட்டப்படுவது?

சால்பு

4.பண்பாட்டின் அமைப்பையும் மேட்டுருவாக்கத்தையும் தீர;மானிக்கும் காரணியாக சமயம் விளங்குகின்றது எனக் கூறியவர் யார்?

T.S.எலியட்டின்

5.நாகரிகம் என்ற சொல் முதன்முதலில் இடம் பெற்ற தமிழ் நூல் எது?

திருக்குறள்

6.இந்துப்பண்பாட்டில் பயன் கருதாத கடமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கூற்றுக்கள் எவை?

▪ “என் கடன் பணி செய்து கிடப்பதே”……………..

▪ “கடமையைச் செய் பலனை எதிர் பாராதே”……………

7.இந்து நாகரிகத்திற்கு ஏன் உலகலாவிய பெருமையுண்டு?

சமூகம் , சமயம் , தத்துவம் , கலை , அரசியல் , அறிவியல் , வாணிபம் ,வைத்தியம் முதலிய துறைகளை உள்ளடக்கியிருப்பதால்.

8.இந்துநாகரிகம் பண்பாட்டுச்சங்கமம் என்று கூறப்படுவதற்கான காரணம் யாது?

வடமொழிக்கலாச்சாரம் தமிழ்கலாச்சாரம் என்பவற்றின் பிணைப்பைக்கொண்டிருப்தால்.

9.இந்து நாகரிகத்தின் தோற்றம் என அறிஞர்களால் வரையறுக்கப்பட்ட காலம்?

கி.மு. 3250 - கி.மு.2750

10.சிந்துவெளி அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட அறிஞர்கள் யாவர்?

சேர்.ஜோன்.மார்ஷல்

அலெக்சாண்டர்

கண்ணிங்காம்

வில்லியம்ஜோன்ஸ்

11.சிந்துவெளி நகரங்களான ஹரப்பா மொகஞ்சதாரோ அமைந்துள்ள இடங்கள் எவை?

ஹரப்பாமேற்குப்பஞ்சாப

மொகஞ்சதாரோ – பாகிஸ்தான

 

12.சிந்துவெளி முத்திரைகளில் உள்ளஎழுத்து வடிவங்கள் பசுபதி என்னும்பெயரைச்சுட்டுகிறது எனக்குறிப்பிட்டஅறிஞர் யார்?

சேர்.ஜோன்.மார்ஷல்

13.இந்திய சிற்பக்கலை இந்தியாவிற்கே உரியது எனக்கூறியவர் யார்?

சேர;.ஜோன்.மார;ஷல்

14. “சிந்து வெளியில் கண்டெடுக்கப்பட்ட வெண்கலத்திலான நடனமாதின் வடிவம் சிவபெருமானது பிற்கால நடனத்திற்கு தோற்றுவாயாகலாம் எனக்குறிப்பிட்ட அறிஞர் யார்?

மா.இராசமாணிக்கனார்

15.துளைகளை உடையதாக காணாப்பட்ட ஊதுகுழல் வாசிக்கும் நிலையில் இருந்ததாக குறிப்பிட்ட அறிஞர் யார்?

அறிஞர் மாக்கே

16.சிந்து வெளிக் காலத்தில் இசைக்கலை பற்றி அறிய உதவும் தொல்பொருள் சான்றுகளை குறிப்பிடுக?

முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ள மிருதங்கம் இ தவில்

17.சிந்து வெளி மக்கள் சிற்பக்கலைக்கு மூலப்பொருள்களாகப் பயன்படுத்தியவை எவை?

வெண்கலம் , பழுப்பு நிறக்கற்கள் , சுண்ணக்கற்கள்

18.சிந்து ஓவியக்கலை சிறப்பிடம் பெற்றிருந்தது என்பதற்கான ஆதாரங்கள் எவை?

அங்கு கிடைக்கப்பெற்ற மட்பாண்டங்கள் மீது பாம்புகள்,மீன்கள் , வட்டங்கள் , சதுரங்கள் ,இலைகள் எனப்பல உருவங்கள் வரையப்பட்டுள்ளமை

19.சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட யோகி வடிவத ;தினை சிவ வடிவத்துடன் இணைத்துக்கூறியவர்யார்?

சேர்.ஜோன்.மார்;ஷல்

20.தற்காலத்தில் சக்தி வழிபாட்டுடன் இணைந்ததாக சிந்து வெளி மக்களிடையே நிலவிய வழிபாடு எது?

தரைப்பெண்வழிபாடு

 


A/L Hidu civilization question with Answer  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்