Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

30 மே, 2021

தரம் O/L மாணவர்களுக்கான பகுதி 1 வினா விடை தொகுப்பு தொடர்சி-02 Tamil part 1 questions and answer

 

தரம் O/L மாணவர்களுக்கான பகுதி 1 வினா விடை தொகுப்பு  தொடர்சி-02


  1. தமிழில் உள்ள முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை.

 1. 18 2. 30 3. 216 4. 247


  1. பாடினான் கமலன். என்பது.

  1. எழுவாய்த் தொடர் 2. விளித் தொடர்

 3. வினை முற்றுத் தொடர் 4. பெயரெச்சத் தொடர்


  1. “ என்னில் இராமன் நல்லவன்” இங்கு இடம் பெற்ற வேற்றுமைப் பொருள்.

 1. நீங்கள் 2. எல்லை 3. ஏது 4. ஒப்பு



பொருத்தமற்ற உதாரணம் இடம் பெற்ற தொகுதியை தெரிவு செய்க.


  1. 1) இயல்பு புணர்ச்சி - தேனருவி, நீலவானம், யாழோசை
    2) தோன்றல் விகாரப் புணர்ச்சி - கல்லால், பூங்கொடி, வெளிக்களம்
    3) திரிதல் விகாரப் புணர்ச்சி - கற்சிலை, வாட்படை, மட்குடம்
    4) கெடுதல் விகாரப் புணர்ச்சி - சிறகால், மனவேதனை, வட்டநிலா


  1. 1) உவமைத் தொகை - மதிமுகம், தேன்மொழி, பவளவாய்
    2) வினைத் தொகை - ஏவுகணை, சுடுசோறு, குளிர்நீர்
    3) உம்மைத் தொகை - எண் எழுத்து, கிளிப்பேச்சு, கருங்குழல்
    4) பண்புத் தொகை - கரும்பலகை, வட்டமேசை, வெள்ளாடை



  1. “ பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா” இங்கு இடம் பெற்ற அணி.
    1. உவமை 2. உருவகம் 3. தற்குறிப்பேற்றம் 4. உயர்வுநவிற்சி


  1. “நான் நன்றாகப் படித்தேன். என்னால் பரீட்சையில் சித்தியடைய முடியவில்லை” மேற்படி மேற்படி இரு வாக்கியங்களையும் இதே ஒழுங்கில் இணைப்பதற்கும் பொருத்தமான இணைப்பிடைச் சொல்.
    1. எனினும் 2. ஆகவே 3. ஆகையால் 4. ஏனெனில்



  1.  காட்டில் உள்ள ஒவ்வொரு மரமும்.
    1. முறிந்தன 2. முறிந்தது 3. முறிகின்றன 4. முறிபடுகின்றன


  1.  தேயிலைத் தோட்டத்திற்கு தொழிலாளர்கள் ................................................
    1. ஒவ்வொன்றாகச் சென்றனர் 2. ஒவ்வொருவனாகச் சென்றனர்
    3. ஒவ்வொன்றாகச் சென்றார்கள் 4. ஒவ்வொருவராகச் சென்றனர்


தரப்பட்ட பாடலை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.


நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தை
கோல முழுதும் காட்டி விட்டாற் காதற்
கொள்கையிலே இவ்வுலகம் சாமோ வானச்
சோலையிலே பூத்த தனிப்பூவோ நீதான்,
சொக்க வெள்ளி பாற்குடமோ? அமுத ஊற்றோ?
காலை வந்து செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல் மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ?


  1.  இப்பாடலில் விபரிக்கப்படும் இயற்கை காட்சி.
    1. சூரியஉதயம் 2. மாலைநேரம் 3. நண்பகல் 4. நிலவுக்காட்சி


  1.  இக்கவிதையில் மேலோங்கும் சுவை.
    1. வியப்பு 2. அச்சம் 3. களிப்பு 4. சிருங்காரம்



  1.  இப்பாடலைப் பாடிய கவிஞர்.
    1. மஹாகவி 2. உருத்திரமூர்த்தி 3. கம்பன் 4. பாரதி


  1.  ஒளிப்பிழம்பு என்று குறிப்பிடப்படுவது.
    1. தீ 2. நிலவு 3. சூரியன் 4. அந்திவானம்



  1.  செம்பரிதி என்று குறிப்பிடப்படுவது.
    1. செவ்வானம் 2. அரைவட்டம் 3. செஞ்சூரியன் 4. வளர்பிறை


  1.  வெண்பா, விருத்தம் ஆகியன .............................. ................................. ஆகும்.
    1. இலக்கிய வடிவங்கள் 2. கவிதை வடிவங்கள்
    3. யாப்பு வடிவங்கள் 4. இலக்கண வடிவங்கள்



  1.  பின்வருவனவற்றுள் கூட்டுவினை எது.
    1. பணி 2. எரிந்தது 3. போனேன் 4. சீரழி


  1.  இடம் பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றப்படுவர் என அரசு
    ......................... அளித்தது.
    1. உத்தேசம் 2. நிபந்தனை 3. பிரசித்தம் 4. உத்தரவாதம்



  1.  பாதை விதிமுறைகளுக்கு புறம்பாக நோயாளர் காவு வண்டிகளுக்கு..................
    அளிக்கப்பட்டுள்ளது.
    1. உறுதி மொழி 2. விதிவிலக்கு 3. உத்தரவாதம் 4. தகுதி


  1.  மாணவர் மன்றக் கூட்டத்திலே செயலாளரினால் அறிக்கை......
    1. வாசிக்கப்பட்டது 2. வாசிக்கப்பட்டன
    3. வாசித்தார் 4. வாசித்தனர்



  1.  கீழே சில வாக்கியங்கள் ஒழுங்கின்றிக் காணப்படுகின்றன. அவற்றை ஒழுங்குபெறவைத்தால் கட்டுக்கோப்பான பந்தியொன்று அமையும். அவ்வாறு பந்தியை அமைப்பதற்கு பொருத்தமான வைப்பு முறையை தெரிவு செய்க. அ) எனவே தான், பாரதியை காலத்தை அடையாளப்படுத்திய மகாகவி என்று தமிழ் உலகம் கொண்டாடி மகிழ்கின்றது.
    ஆ ) காலத்தை அடையாளப்படுத்துவதில் கலைஞர்களும், கவிஞர்களும் முதன்மையானவர்களாகத் திகழ்வதாகக் கூறுகின்றனர்

இ) அரசியல் விடுதலையை மட்டுமன்றி சமூக விடுதலையையும் வற்புறுத்திய
படைப்பாளியாகத் திகழ்கின்றார்.
ஈ) பாரதி , மரபையும் நவீனத்தையும் இணைத்து தான் வாழ்ந்த காலத்தைப் பதிவு
செய்தான்.
உ) அவர்களுள் பாரதி ஒருவராகத் திகழ்கின்றார்
1. உ, ஆ, ஈ, இ, அ 2. ஆ, உ, ஈ, இ, அ
3. ஆ, உ, அ, ஈ, இ 4. அ, ஈ, உ, இ, ஆ


தொடர்சி-02  Tamil part 1 questions and answer 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்